என் மலர்
புதுச்சேரி

சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி மேலாண் இயக்குனர் தனசேகரன் மலர் செண்டு கொடுத்து வரேவற்ற காட்சி.
சாதனையாளர் தின கொண்டாட்டம்
- மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் சாதனையாளர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
- மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் சாதனையாளர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் கல்லூரியின் இயக்குனர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்புரையாற்றினார்.
இந்த கல்வி ஆண்டில் (2021-22) நடைபெற்ற கல்லூரி வளாக தேர்வில் 490 மாணவ-மாணவிகள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.அவர்களுக்கு சிறப்பு விருந்தினர் ஐ.சி.டி. அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிபாலச்சந்திரன் நேர்முக வளாக தேர்வு மூலம் தேர்வான 490 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் ஐ.சி.டி. அகாடமியின் புதுவை மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் அழகிரி, தயாரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் தலைவர் சரவணன் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஜெய்ஸ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி சதீஷ்குமார் கல்லூரியில் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தார்.
இந்த ஆண்டின் சிறந்த மாணவருக்கான விருதினை கணிப்பொறியியல் துறையின் இறுதி ஆண்டு மாணவர் சக்தி மற்றும் சிறந்த மாணவிக்கான விருதினை கணிப்பொறியியல் துறையின் கயல்விழி ஆகியோர் தட்டிச் சென்றனர்.
இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியருக்கான விருது கணிப்பொறியியல் துறையின் துணை பேராசிரியர் ரகுபதிக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆசிரியைக்கான விருது மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையை சேர்ந்த பேராசிரியர் ஜெரால்டின் விஜிக்கு வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கணிப்பொறியியல் துறைதலைவரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியை பிரியாராதிகாதேவி செய்திருந்தார்.






