என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mather Association Conference"

    • ரேஷன்கடைகளை திறந்து அரிசி வழங்க வேண்டும் என்று மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் செய்யப்பட்டது.
    • அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15-வது புதுவை பிரதேச மாநாடு அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15-வது புதுவை பிரதேச மாநாடு அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.

    மாநாட்டுக்கு சங்க தலைவர் இளவரசி, பிரதேசக்குழு உறுப்பினர்கள் முனியம்மாள், சிவசங்கரி தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை பெரியநாயகி ஏற்றி வைத்தார். இளவரசி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாரிமுத்து வரவேற்றார்.

    அகில இந்திய துணைத்தலைவர் சுதா சுந்தர்ராமன் மாநாடை தொடங்கி வைத்தார். செயலாளர் சத்தியா வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் கலையரசி வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். தமிழ்மாநில செயற்குழு சங்கரி, சகோதாரன் சமூக மேம்பாட்டு நிறுவன தலைவர் ஷீத்தல்நாயக், சரளா, விஜயா, பர்கத்சுல்தானா ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ் மாநில தலைவர் வாலண்டினா நிறைவுரையாற்றினார். கோமதி நன்றி கூறினார்.

    கூட்டத்தில், புதுவையில் ரேஷன்கடைகள் அனைத்தும் மூடுவிழா செய்யப்பட்டு அரிசி வழங்கப்படாமல் உள்ளது. தமிழகம், கேரளாவில் 14 அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதேபோல புதுவையில் ரேஷன்கடைகளை திறந்து அரிசி வழங்க வேண்டும்.

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வினால் விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை முழுமையாக குறைக்க வேண்டும். 

    அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை விளக்கி சுதேசி மில் அருகே மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

    ×