என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாலை பாதுகாப்பு ஸ்கேட்டிங் பேரணி
    X

    ஸ்கேட்டிங் ஊர்வலத்தை துணை சபாநாயகர் ராஜவேலு தொடங்கி வைத்த காட்சி.

    சாலை பாதுகாப்பு ஸ்கேட்டிங் பேரணி

    • புதுச்சேரி கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்கே ட்டிங் ஊர்வலம்
    • ராஜவேலு தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்கே ட்டிங் ஊர்வலம் நடந்தது.

    இதன் தொடக்க விழா 100 அடி ரோட்டில் உள்ள இந்திராகாந்தி சிலை அருகில் நடந்தது. நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் ராஜவேலு தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் கலந்து கொண்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேனர்களை கையில் ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் மறை மலை அடிகள் சாலை, புஸ்சி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்தி சிலையில் முடிவடைந்தது. அங்கு அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×