என் மலர்
புதுச்சேரி

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நிதி வழங்கிய காட்சி.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி
- திருபுவனை தொகுதி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி வழங்கப்பட்டது.
- திருபுவனை தொகுதியைச் சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வில்லியனூர் வட்டார வளர்ச்சி துறை
புதுச்சேரி:
திருபுவனை தொகுதியைச் சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வில்லியனூர் வட்டார வளர்ச்சி துறையின் மூலமாக மதகடிப்பட்டு நெய்தல் மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ. 7.50 லட்சம், மதகடிப்பட்டு அப்துல் கலாம் மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.7.15 லட்சம், நல்லூர் மகாலட்சுமி மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ.7.44 லட்சம், நல்லூர் அன்னை மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.4.93 லட்சம், மற்றும் கலிதீர்தாள்குப்பம் நலிவுற்றோர் குறைப்பு நிதி ரூ.1.5 லட்சம் ஆகிய குழுக்களுக்கு திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிதி உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது இணை வட்டார வளர்ச்சி அதிகாரி, உதவிப் பொறியாளர் மற்றும் அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






