என் மலர்
நீங்கள் தேடியது "temple guard"
- நெட்டப்பாக்கம் அருகே கோவில் கோபுர கலசத்தில் ஏறி போட்டோ எடுத்ததை காவலாளி போலீசில் புகார் தெரிவித்ததால் அவரை வாலிபர் தாக்கினார்.
- நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழ நல்லூர் குளத்து மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகன்
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே கோவில் கோபுர கலசத்தில் ஏறி போட்டோ எடுத்ததை காவலாளி போலீசில் புகார் தெரிவித்ததால் அவரை வாலிபர் தாக்கினார். நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழ நல்லூர் குளத்து மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது45). இவருக்கு பேபி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
முருகன் அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 17-ந் தேதி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது. முருகன் கோவிலில் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த ஆதித்தியன்(22), மணிகண்டன் (23) மற்றும் பனையடிக்குப்பத்தை சேர்ந்த சூர்யா(42) ஆகியோர் கோவில் கோபுரத்தில் ஏறி கலசம் அருகே நின்று போட்டோ எடுத்தனர்.
இதனை முருகன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்ததால் போலீசார் விரைந்து வந்து 3 வாலிபர்களையும் பிடித்து சென்று பின்னர் விசாரணை நடத்தி அனுப்பி வைத்து விட்டனர்.
இந்த நிலையில் முருகன் கோவிலில் இருந்தார். அப்போது ஆதித்தியன் என்னையும் எனது நண்பர்களையும் போலீசில் ஏன் புகார் செய்தாய் எனக்கூறி முருகனை மரக்கட்டையால் தாக்கினார்.
மேலும் என்னிடம் வைத்துக்கொண்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று ஆதித்தியன் மிரட்டி விட்டு சென்றார். இந்த தாக்குதலில் தலை, முதுகு, கை, கால்கள்களில் பலத்த காயமடைந்த முருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து முருகனின் மனைவி பேபி நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்தியனை தேடி வருகிறார்கள்.
நாசரேத் அருகில் உள்ள தோப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அந்தோணி பாஸ்கர் (வயது 49). இவர் புன்னைநகர் வனத்திருப்பதி கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வனத்திருப்பதி பசு மடத்தில் வேலை பார்க்கும் முக்காணி யாதவர் வடக்கு தெருவை சேர்ந்த மாதவன் (27), ஆலங்குளம் குருவன்கோட்டையை சேர்ந்த அன்பு செல்வம் மகன் ஆதிநாராயணன்(20) ஆகிய 2 பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று இரவு திடீரென்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாதவன், ஆதிநாராயணன் ஆகியோர் அந்தோணி பாஸ்கரை அவதூறாக பேசி காதை கடித்து தாக்கினர்.
இது குறித்து நாசரேத் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் வழக்கு பதிந்து மாதவன், ஆதிநாராயணன் ஆகிய 2 பேரை கைது செய்தார். #tamilnews






