என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் காவலாளி மீது தாக்குதல்- ஆலங்குளம் வாலிபர் உள்பட 2 பேர் கைது
    X

    கோவில் காவலாளி மீது தாக்குதல்- ஆலங்குளம் வாலிபர் உள்பட 2 பேர் கைது

    நாசரேத் அருகே கோவில் காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக ஆலங்குளம் வாலிபர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாசரேத்:

    நாசரேத் அருகில் உள்ள தோப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் அந்தோணி பாஸ்கர் (வயது 49). இவர் புன்னைநகர் வனத்திருப்பதி கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வனத்திருப்பதி பசு மடத்தில் வேலை பார்க்கும் முக்காணி யாதவர் வடக்கு தெருவை சேர்ந்த மாதவன் (27), ஆலங்குளம் குருவன்கோட்டையை சேர்ந்த அன்பு செல்வம் மகன் ஆதிநாராயணன்(20) ஆகிய 2 பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இரவு திடீரென்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாதவன், ஆதிநாராயணன் ஆகியோர் அந்தோணி பாஸ்கரை அவதூறாக பேசி காதை கடித்து தாக்கினர்.

    இது குறித்து நாசரேத் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் வழக்கு பதிந்து மாதவன், ஆதிநாராயணன் ஆகிய 2 பேரை கைது செய்தார். #tamilnews
    Next Story
    ×