என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சாய் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருவதாக கவர்னர் தமிழிசை பாராட்டு
    • மாணவர்கள் பயன்பெறும் பல திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதுணையாக இருக்கும் என முதல்வர் ரங்கசாமி உறுதி

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் 2017-ம் ஆண்டு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலுடன் ஊட்டச்சத்து மாவு கலந்து வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

    இதன் தொடக்கவிழா புதுவை கவர்னர் மாளிகையில் இன்று நடந்தது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை ஊட்டச்சத்து கலந்த பாலை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    நான் சத்யசாய் பக்தை. சாய் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அவர்களின் மருத்துவமனை மூலம் ஏழை நோயாளிகளுக்கு லட்சக்கணக்கில் செலவாகும் அறுவை சிகிச்சைகளை இலவசமாக அளித்து வருகின்றனர். தெலுங்கானாவில் ராஜ்பவன் அருகே பள்ளி உள்ளது. அங்கு காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சோர்வாக வருவதை கண்டு விசாரித்தேன். அப்போது அவர்கள் காலை உணவின்றி வந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளையை தொடர்புகொண்டு, அவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து பானம் வழங்க கோரினேன். தற்போது மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்பட்டு வருகிறது.

    கல்வி மட்டுமின்றி வலிமையான இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமரின் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. இதற்காக என் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால், ரொட்டி, பிஸ்கெட், பழம், பிற்பகலில் சுண்டல், மதியம் சத்தான உணவு ஆகியவற்றை ஏற்கனவே அரசு வழங்கியது. இடையில் சிலகாலம் தடைபட்டது. மீண்டும் இதனை தொடங்கியுள்ளோம்.

    பள்ளிகளுக்கு காலையில் வரும் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, இரவு, காலையில் உணவின்றி பள்ளிக்கு வருவதால்தான் இந்த நிலை என உணர்ந்தோம்.

    அதனடிப்படையில்தான் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது ஊட்டச்சத்தான பானமும் வழங்க உள்ளோம். மாணவர்கள் பயன்பெறும் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கே.ஸ்.பி. ரமேஷ், எம்.எல்.ஏ., அரசு கல்வித்துறை செயலர் ஜவகர், ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை நிர்வாகி சத்குரு மதுசூதன சாய், நிர்வாகி ஆனந்த்பதானி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    213 அரசு பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கப்படுகிறது. சாக்லெட் மற்றும் வெண்ணிலா சுவைகளில் சத்து மாவு கலந்து வழங்கப்படும். தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டசத்து பானம் வழங்கயிருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மத்திய அரசின் திட்டங்களுக்கு புதுவைக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என தேனீ. ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.
    • தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலமாக புதுவைக்கு தேவையான நிதி ஒதுக்க கோரிக்கை

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்தர் சிங் தோமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

    மத்திய அரசின் திட்டமான தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலமாக புதுவைக்கு 3 ஆண்டுகளாக நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.

    இதற்காக ரூ.3 கோடிக்கு அனுப்பியுள்ள திட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்து நிதியை விடுவிக்க வேண்டும். ஆத்மா திட்டத்துக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு வழங்கவில்லை. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவற்றை நிறைவேற்றுவதாக மத்திய மந்திரி உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மந்திரி புருஷோத்தம் ரூபாலாவை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது, புதுவைக்கு நடமாடும் மருத்துவமனை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும், 4 பிராந்தியமாக உள்ளதால், புதுவைக்கு 2, மற்ற பிராந்தியங்களுக்கு தலா ஒரு நடமாடும் கால்நடை மருத்துவமனை வழங்க வேண்டும். கால்நடை மருத்துவ உதவிக்காக 2 கால் சென்டர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை வழங்கவேண்டும். கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்காக புதுவைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 கோடியே 44 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும். தேசிய கால்நடை இயக்கத்தில் 200 மேம்படுத்தப்பட்ட கால்நடைகளை வளர்க்க வழங்கப்படும் ரூ.2 கோடியை, 50 மாடுகளுக்கு என மாற்றி நிதி வழங்க வேண்டும்.

    மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் புதுவைக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என தேனீ. ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மத்திய மந்திரி உறுதியளித்தார். இந்த சந்திப்புகளின் போது புதுவை வேளாண் துறை செயலர் ரவி பிரகாஷ், அமைச்சரின் தனி செயலர் மனோகரன் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளி வந்த மாணவர்களை ஆசிரியர்-ஆசிரியைகள் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
    • இன்றும், நாளையும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன.

    தேர்வுகள் முடியும் முன்பே 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20-ந் தேதி வெளியானது.

    இந்த நிலையில், புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு இன்று (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது.

    முன்னதாக பள்ளிகளில் வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, கட்டிடங்களில் பழுதுகளும் சீரமைக்கப்பட்டது. ஸ்மார்ட் வகுப்பறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனைங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டன.

    இன்று காலை அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    முன்னதாக பள்ளி வந்த மாணவர்களை ஆசிரியர்-ஆசிரியைகள் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.

    அதே வேளையில் இன்றும், நாளையும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசு ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ளது.
    • அக்னிபத் திட்டத்துக்கு பீகார், உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    அக்னிபத் திட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் - விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மத்திய அரசு ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க அக்னிபத் திட்டத்தை அறிவித்துள்ளது.

    அக்னிபத் திட்டத்துக்கு பீகார், உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உட்பட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சிகள் சார்பில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சுதேசி மில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, கீதநாதன், அபிஷேகம், சேதுசெல்வம், மார்க்சிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் பெருமாள், ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், விடுதலை சிறுத்தைகள் தேவபொழிலன், செந்தில், கம்யூனிஸ்டு (எம்.எல்.) சோ.பாலசுப்பிரமணியன், மோதிலால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

    • புதுவை சட்டப்பேரவை உறுதி மொழிகள் குழு ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை கருத்தரங்கு அறையில் நடந்தது.
    • கூட்டத்திற்கு உறுதிமொழிகள் குழு தலைவர் நேரு எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டப்பேரவை உறுதி மொழிகள் குழு ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவை கருத்தரங்கு அறையில் நடந்தது.

    கூட்டத்திற்கு உறுதிமொழிகள் குழு தலைவர் நேரு எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, வி.பி.ராமலிங்கம், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், அசோக்பாபு, சிவசங்கரன், சட்டசபை செயலர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், மின்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதல்-அமைச்சர், துறை அமைச்சர்கள் சட்டசபையில் அறிவித்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, ஸ்மார்ட் சிட்டி திட்ட துணை தலைமை செயல் அதிகாரி மாணிக்கதீபன், மின் துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர், உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் கிட்டிபலராம் உட்பட அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

    நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளை உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். 

    • உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் 200 ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச கண் கண்ணாடி சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • டிரைவர்களுக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி புதிய பஸ் நிலையத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் பிறந்தநாளையொட்டி உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆட்டோ, டெம்போ மற்றும் பேருந்து டிரைவர்களுக்கான 2 நாள் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி புதிய பஸ் நிலையத்தில் நடந்தது.

    முகாமுக்கு தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கினார். முகாமை சிறப்பு விருந்தினராக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா தொடங்கி வைத்து, 200 ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், துணை அமைப்பாளர் சண்.குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், கதிர்காமம் தொகுதி பொறுப்பாளர் வடிவேலு, தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் பொன்னுசாமி, மாநில பிரதிநிதி குரு, வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், தொ.மு.ச. தலைவர் அண்ணா அடைக்கலம்,

    மாணவர் அணி துணை அமைப்பாளர் ரெமி எட்வின், தொண்டர் அணி மதனா, ராஜேஷ், ஆட்டோ சங்கம் முரளி, மிஷேல், கிளை செயலாளர்கள் சசி, அகிலன், முத்து, தட்சணா, உதயகுமார், வெங்கட், ஐசக், கிரி, நெல்சன், பலராமன், இளைஞர் அணி தாமரை, அன்பழகன், ஸ்ரீதர், மூர்த்தி, முத்தமிழ் நகர் இளங்கோ, கோபி, ஆட்டோ பாரதி, அஜிபாஷா, சேட்டு என்ற வேல்முருகன், பெரோஸ், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தட்டாஞ்சாவடியில் முதியவர் தூக்கு போட்டு இறந்து போனார்.
    • இவர்கள் இருவரும் வீட்டின் கீழ் தளத்திலும், மேல் தளத்தில் ரமேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    தட்டாஞ்சாவடியில் முதியவர் தூக்கு போட்டு இறந்து போனார்.

    புதுவை தட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரும், இவரது மனைவியும் புதுவை மிஷன் வீதியில் உள்ள தனியார் வாட்சு கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இவரது தந்தை ரங்கசாமி(வயது82). தாய் கலா(75). இவர்கள் இருவரும் வீட்டின் கீழ் தளத்திலும், மேல் தளத்தில் ரமேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்கள்.

    கடந்த 15 ஆண்டுகளாக ரங்கசாமி இருதய நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனாலும் நோய் பாதிப்பால் ரங்கசாமி அவதியடைந்து வந்தார். இது பற்றி தனது குடும்பத்தினரிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷ் வழக்கம் போல் தனது மனைவியுடன் வேலைக்கு சென்றார். மாலையில் எதிர்வீட்டை சேர்ந்த உமாகாந்தன் என்பவர் ரமேசுக்கு போன் செய்து உனது தந்தை வீட்டின் மாடியில் உள்ள கூரையில் தூக்கு போட்டு தொங்குவதாக தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் வீட்டுக்கு விரைந்து வந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரமேஷ் தனது தந்தையை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரங்கசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரமேஷ் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் டெல்லியில் மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது பங்கீட்டுத்துறை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதியை சந்தித்தார்.
    • பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் நிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லை என்று கொள்முதல் செய்யப் படுவதில்லை.

    புதுச்சேரி:

    இந்திய உணவு கழகம்பு துவையில் நெல் கொள்முதலுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என்று மத்திய உணவு மந்திரியிடம் தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் டெல்லியில் மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது பங்கீட்டுத்துறை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதியை சந்தித்தார்.

    அப்போது, புதுவை யில் இந்திய உணவு கழகம் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் உள்ள இடர்பாடுகளை தெரிவித்து அதற்கு தீர்வு காணும் விதமாக சில தளர்வுகளை அறிவிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

    புதுவை, காரைக்காலில் 3 ஆண்டுகளாக இந்திய உணவு கழகம் நெல் கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் உற்பத்தியில் 1-2 சதவீதம் மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

    பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் நிர்ணயிக்கப்பட்ட தரம் இல்லை என்று கொள்முதல் செய்யப் படுவதில்லை.

    கடற்கரை ஓரமாக அமைந்திருப்பதால் பருவகாலத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் அறுவடை நேரத்தில் நெல்மணிகளில் சற்று கருப்பு நிறம் ஏற்படுகிறது.

    இதனை ஒரு காரணமாகக் கொண்டு தரம் குறைவாக இருப்பதாக கூறி விவசாயிகளிடமிருந்து இந்திய உணவு கழகம் நெல் கொள்முதல் செய்வதை தவிர்க்கிறது.

    எனவே, இந்த காரணத்தை கருத்தில் கொள்ளாமல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இதுகுறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலர் மனோஜ் அஹூஜாவை அமைச்சர் சந்தித்தார். அப்போது மத்திய அரசின் திட்டமான தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலமாக புதுவைக்கு 3 ஆண்டுகளாக நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.

    5 ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இப்போது ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.

    2020-21 சம்பா பயிர் செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

    இவை அனைத்தையும் உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய வேளாண்துறை செயலர் உறுதியளித்தார். மேலும் கூடுதல் செயலர் சஞ்சீவ் குமார், கூடுதல் செயலர் அபிலாஷ் லிக்கி, இணைச் செயலர் டாக்டர் விஜயலட்சுமி, இணைச் செயலர் சாவி ஜா, இணைச் செயலர் சாமுவேல் பிரவீன்குமார் மற்றும் இயக்குனர் விஜய் ராஜ்மோகன் ஆகியோரையும் சந்தித்து புதுவைக்கு தேவையான நிதியினை ஒதுக்க அமைச்சர் கோரிக்கை வைத்தார்.

    இந்த சந்திப்பின்போது புதுவை வேளாண் செயலர் ரவி பிரகாஷ், அமைச்சரின் தனி செயலர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது.
    • வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, மாணவர்களின் வருகையை எதிர்நோக்கியுள்ளன. கட்டிடங்களில் பழுதுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன.

    தேர்வுகள் முடியும் முன்பே 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

    இந்த நிலையில், புதுவை, காரைக்காலில் கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு நாளை (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை இறங்கியுள்ளது.

    வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, மாணவர்களின் வருகையை எதிர்நோக்கியுள்ளன. கட்டிடங்களில் பழுதுகளும் சீரமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனைங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டன.

    பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பணிகளை ஆய்வு செய்தார். நாளையே பாடபுத்தகம், சீருடை வழங்கவும், சிறப்பு பஸ்களை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிகளில் கொரோனா விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

    பிளஸ்-1 வகுப்புகள் ஜூலை 11-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    • எம்.ஐ.டி. கல்லூரியில் கர்லா கட்டை சுழற்றி மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
    • மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

    புதுச்சேரி:

    எம்.ஐ.டி. கல்லூரியில் கர்லா கட்டை சுழற்றி மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.

    மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில், சர்வதேச யோகா தினத்தையொட்டி கர்லாக் கட்டை யோகா சாதனை நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர் கண், உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கான இந்திய பெண்கள் நெட்வொர்க் ஒருங்கிணைப் பாளர் வித்யாஸ்ரீ, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சிறப்பு மேற்பார்வையாளர் விவேக் நாயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில், 52 பெண்கள் கலந்து கொண்டு கர்லாக் கட்டையின் மூலம் அரை மணி நேரத்தின் 1400 சுற்றுகள் வீதம் சுழற்றி சாதனை புரிந்தனர்.

    இச்சாதனையே, உலக அளவில் முதல் முறையாக பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து கர்லாக்கட்டை யோகா செய்த நிகழ்ச்சியாகும் இச்சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.

    நிகழ்ச்சியை, பெண்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒருங்கிணைப்பாளர் வள்ளி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பரமாத்மம் நிறுவனர் விஜயபிரசாத் நன்றி கூறினார்.

    மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பெண்களுக்கான அதிகார அமைப்பு, யோகா குழுமம், பரமாத்மம் மரபு, இந்தியன் உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு கலை கூடம் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    • முதலியார்பேட்டை அன்னை சிவகாமி மேல்நிலைப்பள்ளி
    • சம்பத் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை அன்னை சிவகாமி மேல்நிலைப்பள்ளி ரூ.26 லட்சத்தில் புனரமைப்பு பணியை சம்பத் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்.

    முதலியார்பேட்டையில் அமைந்துள்ள அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை கட்டிடத்தை சீரமைக்கவும், விளையாட்டுத்திடலை மேம்படுத்துவதற்கு ரூ. 26.70 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பூமி பூஜை நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த பூமி பூஜையில் சம்பத் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் பொதுப்பணித்துறையின் சிறப்பு கட்டிடம் கோட்டம்-2 செயற்பொறியாளர் ஸ்ரீதர், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் கோபிநாத், பள்ளி முதல்வர் எழில்கல்பனா மற்றும் ஆசிரியர்கள் கட்டிட ஒப்பந்ததாரர் கெங்காதரன், ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை பா.ஜனதா நகர மாவட்ட செயற்குழு கூட்டம்
    • அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா நகர மாவட்ட செயற்குழு கூட்டம் நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இதில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் கலந்து கொண்டார். மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், செயலாளர் மற்றும் நகர மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேல், நகர மாவட்ட பொதுச்செயலாளர் ஆனந்த கண்ணன் மற்றும் நகர, மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, தொகுதி, அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    நாட்டின் வளர்ச்சிக்கும் முழுமையான பாதுகாப்புக்கும் இளைஞர் களை நல்வழிப்படுத்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஏரா ளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இளைஞர்களின் நலன்களை மனதில் கொண்டு பிரதமர், உள்துறை மந்திரி, பாதுகாப்பு துறை மந்திரி ஆகியோர் ஒட்டுமொத்த நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அமல்படுத்திய அக்னிபாத் திட்டத்தை இந்த நகர மாவட்ட செயற்குழு வில் முழுமையாக ஆதரித்து பாராட்டு தெரிவிப்பது.

    ரஷ்யா-உக்ரைன் போரில் புதுவையை சேர்ந்த 19 மாணவர்களை மிக சாதுர்யமாக செயல்பட்டு வந்தே பாரத் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பாக மீட்டு கொண்டு வந்ததற்கு பிரதமருக்கு பாராட்டு தெரிவிப்பது.

    கடந்த 24.4.2022 அன்று புதுவைக்கு வருகை தந்து மக்களின் நலனை கருதி வில்லியனூர் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை மந்திரிக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×