என் மலர்
புதுச்சேரி
- மருத்துவ பூச்சியியலில் பயிற்சிக்கான சர்வதேச செயல் திறன் மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கி வைக்கிறார்.
மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்றும் நாளையும், புதுச்சேரி மற்றும் தமிழக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்றிரவு சென்னை வந்தார்.
முதல்நாள் நிகழ்ச்சியாக இன்று புதுச்சேரியில் மருத்துவ பூச்சியியலில் பயிற்சிக்கான சர்வதேச செயல்திறன் மையத்துக்கு அடிக்கல் நாட்டுவார். தொடர்ந்து நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தில் நவீன வசதிகளை பார்வையிடும் அவர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவார்.
ஜிப்மர் வளாகத்தில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தொடங்கி வைக்கும் மத்திய மந்திரி மாண்டவியா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், ரவீந்திரன், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மன்சுக் மாண்டவியா, ஆவடியில் மத்திய அரசின் சுகாதார திட்ட நலவாழ்வு மையம் மற்றும் ஆய்வகத்துக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுவார். இதனைத் தொடர்ந்து மாநில இ-தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனருடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
கிண்டியில் உள்ள மத்திய பெட்ரோ ரசாயன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் புதிய தொழில்நுட்ப மையத்துக்கான அடிக்கல்லையும் அவர் நாட்ட உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தவளகுப்பத்தில் தனியார் காம்ப்ளக்சில் புகுந்து அறைக்கதவை உடைத்து டி.வி. மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
- புதுவை தவளக்குப்பம் முத்து முதலியார் நகரில் உள்ள தனியார் காம்ப்ளக்சில் முதல் மாடியில் ஒரு அறையை வாடகை எடுத்து தங்கி புதுவை பொதுப்பணித்துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை காண்டிராக்டர் எடுத்து செய்து வருகிறார்.
புதுச்சேரி:
தவளகுப்பத்தில் தனியார் காம்ப்ளக்சில் புகுந்து அறைக்கதவை உடைத்து டி.வி. மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
கடலூர் திருவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33) இவர் புதுவை தவளக்குப்பம் முத்து முதலியார் நகரில் உள்ள தனியார் காம்ப்ளக்சில் முதல் மாடியில் ஒரு அறையை வாடகை எடுத்து தங்கி புதுவை பொதுப்பணித்துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை காண்டிராக்டர் எடுத்து செய்து வருகிறார்.
தினமும் காலை அவர் 9 மணிக்கு தான் தங்கியிருக்கும் அறையில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் திரும்புவது வழக்கம் அதுபோல் சம்பவத்தன்று காலை தான் தங்கியிருந்த அறையை பூட்டி விட்டு மணிகண்டன் பணியை பார்வையிட சென்றார். பின்னர் இரவு 7 மணிக்கு அறைக்கு வந்து பார்த்த போது அறைக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு மேஜையில் வைத்திருந்த சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி. மற்றும் ஸ்டெபிலைசர் டைரியில் வைத்திருந்த ரொக்க பணம் 6ஆயிரத்து 300 ஆகியவை திருடப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு அறை கதவு பூட்டை உடைத்து டி.வி. மற்றும் ரொக்க பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து மணிகண்டன் தவளகுப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜிப்மர் டாக்டர் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 62). இவர் ஜிப்மரில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
புதுச்சேரி:
ஜிப்மர் டாக்டர் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 62). இவர் ஜிப்மரில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். அங்குள்ள ஊழியர் குடியிருப்பில் ஜெயசங்கர் தனியாக வசித்து வந்தார். அவரை அங்கு ஒப்பந்தத்தில் எலக்டீரியனாக பணிபுரியும் காமராஜர் நகரை சேர்ந்த சங்கர் என்பவர் தினமும் பார்த்து பேசிவிட்டு செல்வார். ஜெயசங்கரின் வீட்டை அவ்வப்போது யசோதா என்ற பெண் சுத்தம் செய்து விட்டு செல்வார்.
இந்த நிலையில் காலை யசோதா டாக்டர் வீட்டை சுத்தம் செய்ய வந்த போது ஜெயசங்கர் மல்லாந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து அவர் டாக்டர் ஜெயசங்கருக்கு நெருக்கமான எலக்டீரிசியன் சங்கருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சங்கர் கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் ஜெயசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்து போன ஜெயசங்கருக்கு நீரழிவு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவரே ஊசி போட்டுக் கொள்வார் என தெரிகிறது.
நீரிழிவு நோய் அதிகம் பாதித்ததால் டாக்டர் ஜெயசங்கர் இறந்து போனாரா? அல்லது வேறேதும் காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- புதுவை தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி பெரிய நாயகி.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்து விட்டார்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி பெரிய நாயகி. இவர்களுக்கு ஹரிகரன் (வயது 21) பிரவின் குமார் (19) ஆகிய 2 மகன்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்து விட்டார்.
இதையடுத்து பெரியநாயகியும் அவரது இளையமகன் பிரவின் குமாரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். ஹரிகரன் பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹரிகரன் தற்கலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தாய் பெரிய நாயகி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.
- புதுவையில் ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 36, காரைக்காலில் 2, ஏனாமில் 4 என புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது.
புதுவையில் ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 36, காரைக்காலில் 2, ஏனாமில் 4 என புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை, காரைக்காலில் தலா ஒருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 151, காரைக்காலில் 9, ஏனாமில் 16, மாகியில் 4 பேர் என 180பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவையில் 23, காரைக்காலில் 2, ஏனாமில் ஒருவர், மாகியில் 2 பேர் என 28 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 34 ஆயிரத்து 252 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முககவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- புதுவை லாஸ்பேட்டையில் 164 ஆண்டு பழமையான வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்பயிற்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது
- இந்த ஆண்டு இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் பள்ளியை மூட அரசு முடிவு செய்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டையில் 164 ஆண்டு பழமையான வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்பயிற்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த ஆண்டு இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் பள்ளியை மூட அரசு முடிவு செய்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த பள்ளியை திறந்து தொடர்ந்து செயல்பட வைக்க வேண்டும் என மாணவர் கூட்டமைப்பினரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் லாஸ்பேட்டை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில் பயிற்சி பள்ளி முன்பு மாணவர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளியில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். பள்ளியை தொடர்ந்து செயல்பட வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
- போலீசாருக்கே ஓராண்டு பயிற்சி இருக்கும்போது, ராணுவ வீரர்களுக்கு 6 மாதம் மட்டும் பயிற்சி அளித்து 4 ஆண்டில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு நினைக்கிறது.
புதுச்சேரி:
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
போலீசாருக்கே ஓராண்டு பயிற்சி இருக்கும்போது, ராணுவ வீரர்களுக்கு 6 மாதம் மட்டும் பயிற்சி அளித்து 4 ஆண்டில் அவர்களை வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு நினைக்கிறது. இது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
அக்னிபத் திட்டத்தை கண்டித்து டெல்லியில் பொதுக்கூட்டம் நடத்தி ஜனாதிபதியிடம் மனுவும் அளிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமை புதுவையில் அனைத்து தொகுதியிலும் வருகிற 27-ந் தேதி காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை தர்ணா போராட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி புதுவை மாநிலத்தில் அனைத்து தொகுதியிலும் வருகிற 27-ந் தேதி 3 மணி நேர தர்ணா போராட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.
- ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருமாம்பட்டு குப்பைக் கிடங்கில் உள்ள அனைத்து குப்பைகளும் உயிரிமயமாக்கல் முறையில் முழுவதுமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது
- இக்குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் முழுவதையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அகற்றுவதற்கு புதுவை அரசு முயற்சியெடுத்து தயாரித்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.
புதுச்சேரி:
ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருமாம்பட்டு குப்பைக் கிடங்கில் உள்ள அனைத்து குப்பைகளும் உயிரிமயமாக்கல் முறையில் முழுவதுமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இக்குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகள் முழுவதையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அகற்றுவதற்கு புதுவை அரசு முயற்சியெடுத்து தயாரித்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.
இதையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.42.7 கோடி மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிதியில் புதுவை நகர வளர்ச்சி முகமையினால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஈரோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு சுமார் 7.5 லட்சம் டன் குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபாலன் கடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமாரரிடம் குப்பைகளால் அதிக துர்நாற்றம் வீசுவதாகவும், ஈக்கள் அதிகம் வருவதாகவும் புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குப்பைகள் மறுசுழற்சி செய்யும் இடத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரி களிடம் பணிகளை எப்போது முடிப்பீர்கள், பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளனர். எனவே அதற்கு தீர்வு காண வேண்டும். சுகாதாரமான முறையில் மக்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து 8 மாதத்தில் பணிகள் முடித்து ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் விரைந்து பணியை முடித்து மக்கள் நலமுடன் வாழ வழிவகை செய்து கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இதில் பா.ஜனதா நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குருமாம்பேட் குப்பை கிடங்கை அமைச்சர்
- மீண்டும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது.
- கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பெரும்பாலானவர்கள் புகார் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமை புதுவை மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தோல்வி குறித்தும், மீண்டும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் தனித்தனியாக கருத்து கேட்டது.
அதில், நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்துவது இல்லை எனவும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பெரும்பாலானவர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக, அரசியல் விவகார கமிட்டி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி என 2 புதிய கமிட்டிகளை, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் எம்.பி. அமைத்துள்ளார்.
அதன்படி, அரசியல் விவகாரக் கமிட்டியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. சீனியர் துணைத்தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான தேவதாஸ் உள்ளிட்ட 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல், ஒழுங்கு நடவடிக்கை குழு சேர்மனாக முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், உறுப்பினர்களாக நீல.கங்காதரன், மணவாளன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பி.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படாததால் கிராமப்புற பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்தசில நாட்களாக நேர பிரச்சினை காரணமாக புதுவை அரசு பஸ் (பி.ஆர்.டி.சி.) ஊழியர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் புதுவையில் இருந்து முத்தியால்பேட்டைக்கு பி.ஆர்.டி.சி. மினி பஸ் புறப்பட்டு சென்றது. அதனை டிரைவர் சிவலிங்கம் ஓட்டினார்.
அப்போது அங்கு வந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் இணைந்து சிவலிங்கத்திடம் நேர பிரச்சினையை காரணம் காட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த சிவலிங்கம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பி.ஆர்.டி.சி. டிரைவர்- கண்டக்டர்கள் தாக்கப்பட்டனர்.
பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவையில் இருந்து இயக்கப்படும் பி.ஆர்.டி.சி. டி பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அவைகள் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்று 2-வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
சென்னை- திருப்பதி உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை. பி.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படாததால் கிராமப்புற பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- போராட்டக்காரர்கள் மறைத்து வைத்திருந்த முட்டையை எடுத்து கம்பெனிக்குள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது
- மறியல் போராட்டத்தால் திருச்சிற்றம்பலம் மயிலம் சேதராப்பட்டு பத்துகண்ணு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேதராப்பட்டு:
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் இன்று சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் பந்த் போராட்டம் நடந்தது. பந்த் போராட்டத்திற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில் அனைத்து கடைகளும் தொழிற்சாலைகளும் சேதராப்பட்டு பகுதிகளில் காலை முதலே மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் சேதராப்பட்டு முத்தமிழ் நகரில் சர்வதேச நிறுவனம் ஒன்று 6:00 மணிக்கு தொழிற்சாலைக்குள் தொழிலாளர்களை அனுமதித்ததை கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க தலைவர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க தலைவர் முருகையன் தலைமையில் போராட்டக்காரர்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து கம்பெனியின் நுழைவாயில் கேட்டருகே கண்டன கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
அப்போது ஏற்கனவே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை வேனில் ஏற்ற முற்பட்டபோது போராட்டக்காரர்கள் மறைத்து வைத்திருந்த முட்டையை எடுத்து கம்பெனிக்குள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் அனைவரையும் குண்டுகட்டாக போலீசார் வேனில் ஏற்றி கோரிமேடு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் சிபிஐஎம்எல் மாநில தலைவர் மோதிலால் தலைமையில் சேதராப்பட்டு முனை சந்திப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக திருச்சிற்றம்பலம் மயிலம் சேதராப்பட்டு பத்துகண்ணு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் இந்த பகுதியை சுற்றியுள்ள இளைஞர்களுக்கு 90 சதவிகித வேலை வாய்ப்பை வழங்க வேண்டும், புதுச்சேரி மின்துறை தனியார்மயம் ஆவதை தடுக்க வேண்டும், இரும்பு தொழிற்சாலைகள் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், காலியாக உள்ள தொழிலாளர் துறை ஆணையர் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும், தொழிலாளர் துறை உத்தரவை மீறி செயல்படும் தனியார் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதராப்பட்டு பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், சேதராப்பட்டு பிப்டிக் வளாகத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மறியலில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் வேனில் ஏற்றினர். அப்போது ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அந்த கம்பெனியின் வேனில் ஏற மாட்டோம். இல்லை என்றால் இங்கே இருப்போம் என வேனில் ஏற மறுத்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எஸ்.பி பக்தவச்சலம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வேறு ஒரு வாகனத்தில் அவர்களை கைதுசெய்து கோரிமேடு காவல் நிலையம் அழைத்து சென்றனர். போராட்டக்காரர்களின் ஒருபகுதியினர் சேதராப்பட்டு திருமண மண்டபத்திலும் ஒருபகுதியினர் கோரிமேடு காவல் நிலையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய மார்க்கெட்டில் நடந்தது.
- பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரிய மார்க்கெட்டில் நடந்தது. நிகழ்ச்சியினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
பாண்லே கடைகள் மூலம் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் மாற்றாக குறைந்த விலையிலான துணிப்பைகள் மற்றும் இதர பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் ஒருமுறை பயன்பாட்டு நெகிழியை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அறிவியல் தொழில்நுட்பம்- சுற்றுச்சூழல் துறைச் செயலர் ஸ்மிதா ஆகியோர் உடனிருந்தனர்.






