என் மலர்
புதுச்சேரி
- முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார்.
- நாட்காட்டிகள், அரசு நாட்குறிப்புகள், அரசு சார்பில் வெளியிடப்படும் தொலைபேசி அடைவு, ஆகியவற்றை கொண்டே விவரங்களை தெரிந்து கொள்கின்றனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஒரு மாநிலத்தின் தற்போதைய அரசு நிர்வாகத்தை பிற நாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், சுற்றுலா பயணிகள் அரசு சார்பில் வெளியிடப்படும் நாட்காட்டிகள், அரசு நாட்குறிப்புகள், அரசு சார்பில் வெளியிடப்படும் தொலைபேசி அடைவு, ஆகியவற்றை கொண்டே விவரங்களை தெரிந்து கொள்கின்றனர்.
நிதி நிலைமையை காரணம் காட்டி 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகள் அரசின் சார்பில் நாட்காட்டிகள், நாட்குறிப்புகள், தொலை–பேசி அடைவுகள் ஆகியவை அச்சிட்டு வெளி–யிடப்படவில்லை.
இதனால் அரசு அலு–வலகங்களில் தனியார் நிறுவனங்கள் சார்பில் கொடுக்கப்படும் நாட் காட்டிகளையே வைத்துள்ளனர். இவை பொது மக்களின் பார்வைக்கு படும் வகையில் உள்ளது.
2021-ம் ஆண்டு பழைய ஆட்சியே இருந்ததால் புதிதாக அச்சிடப்படவில்லை என்றாலும் அப்போதைய நிர்வாகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள 2020 அச்சடிக்கப்பட்ட நாட்காட்டியை பயன் படுத்திக்கொள்ளலாம்.
ஆனால், 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2022-ம் ஆண்டு அரசின் சார்பில் புதிய நிர்வா–கத்தை காட்டும் விதமாக புதிய நாட்காட்டி நாட்குறிப்பு தொலைபேசி கடைவு ஆகியவை வெளியிடப்படாதது வருத்தத்திற்குரியது.
எனவே முதல்-அமைச்சர் அரசின் சார்பில் 2023-ம் ஆண்டிற்கான நாட் காட்டிகள், நாட்குறிப்புகள், தொலை–பேசி அடைவு–கள் ஆகியவை வெளி–யிட தேவையான நடவடிக்கையை எடுக்கு–மாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்த சீராய்வுக் கூட்டத்தில் நிலம் சம்பந்தமான அதிகாரத்தை கவர்னர் தமிழிசைக்கு வழங்குதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
- இதை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கடுமையாக கண்டிக்கின்றேன்
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
புதுவை மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்த சீராய்வுக் கூட்டத்தில் நிலம் சம்பந்தமான அதிகாரத்தை கவர்னர் தமிழிசைக்கு வழங்குதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கடுமையாக கண்டிக்கின்றேன்.
ஏற்கனவே புதுவையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு போதிய அதிகாரம் இல்லை, எனவே அதிகாரம் கிடைக்கச் செய்ய வலியுறுத்தி வரும் நிலையில் இருக்கும் அதிகாரத்தையும் கவர்னர் பறிக்க நினைப்பது ஏற்புடையது அல்ல. தற்போது நிலம் கையகப் படுத்தவும், கொடுக்கவும் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
புதுவை மக்களின் தேவைகள், எண்ணங்கள் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான் தெரியும்.
மத்திய அரசால் நியமிக்கப்படும் வேறு மாநிலத்தை சேர்ந்த கவர்னர்களுக்கு நிச்சயம் தெரியாது. தெரியாத ஒன்றில் தனக்கு அதிகாரம் வேண்டும் என நினைப்பது சரியானது அல்ல.
அவ்வாறு கவர்னருக்கு நிலத்தில் அதிகாரம் வழங்கினால் மக்களின் எண்ணங்கள், விருப்பத்திற்கு மாறாக நிலங்களை கையகப்படுத்தவும், விற்கவும் செய்வார்கள். இது புதுவை மாநிலத்திற்கு பாதிப்பையே அதிகளவு ஏற்படுத்தும்.
எனவே நிலம் சம்பந்தமான அதிகாரம் தற்போதுள்ளபடி மாநில அரசிடமே நீடிக்க வேண்டும். கவர்னருக்கு செல்லும் வகையில் ஆலோசனை செய்ததே தவறு. அதுவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் முன்னிலையிலேயே இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது மிக, மிக தவறு.
இந்த கூட்டத்தை முதல்- அமைச்சர் புறக்கணித்து வெளியேறியிருக்க வேண்டும். எனவே புதுவை நிலத்தில் கவர்னருக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை கவர்னர், ஆட்சியாளர்கள் என யாரும் எடுக்கக்கூடாது. மீறி அதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் புதுவை மக்களுக்கான அதிகாரத்தை மீட்டெடுக்க தி.மு.க. தீவிரமாக போரா ட்டக்களத்தில் இறங்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ராஜ்பவன் தொகுதியில் பழுதடைந்த பிராதன கழிவுநீர் குழாய்களை புதுப்பிக்க சுமார் ரூ.47 லட்சத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
- இப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
ராஜ்பவன் தொகுதியில் பழுதடைந்த பிராதன கழிவுநீர் குழாய்களை புதுப்பிக்க சுமார் ரூ.47 லட்சத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
இப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், கழிவுநீர் உட்கோட்ட பொறியாளர் வைத்தியநாதன், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் குணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பணியால் முத்தியால்பேட்டை சோலைநகர், கணேஷ் நகரில் அடிக்கடி ஏற்படும் பாதாள சாக்கடை அடைப்புகள் சீராகும்.
- பாகூர் தொகுதி மணப்பட்டு ரோடு, ரத்னா நகர், மாசிலாமணி நகர் பகுதிக்கு சாலை வசதி இல்லாமல் மழைகாலத்தில் அவதிப்பட்டு வந்தனர்.
- பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுத்து வந்தார்.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி மணப்பட்டு ரோடு, ரத்னா நகர், மாசிலாமணி நகர் பகுதிக்கு சாலை வசதி இல்லாமல் மழைகாலத்தில் அவதிப்பட்டு வந்தனர். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுத்து வந்தார்.
அதன்படி அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம், ரத்னா நகர் புதிய குடியிருப்பு பகுதிக்கு மண் சாலை அமைத்து மேம்படுத்த 6 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவிலும், மாசிலாமணி நகரில் மண் சாலை அமைக்க 4 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவிலும், கொரவள்ளிமேடு, உமரன் காடு ஏரியை 21 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.31லட்சத்து 88ஆயிரம் ஆகும். இப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு, பணியைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பிள்ளையார்குப்பத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
- மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் இணைந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார் குப்பத்தில் உள்ள எஸ். ஓ. எஸ். பள்ளி மாணவர்களுக்கும், பிற ஆதரவற்ற குழந்தைகள் மைய மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் இணைந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த விளையாட்டுப் போட்டிகளை துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
இதில், வாலிபால், ஓட்ட பந்தயம், கோ கோ, தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர் களுக்கான பரிசளிப்பு விழா, நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சுலோச்சனா வாழ்த்தி பேசினார். வாலிபால் போட்டியில் எஸ். ஓ. எஸ். குழந்தைகள் கிராமத்தை சேர்ந்த அணி முதல் இடமும், ஜாலி ஹோம் குழந்தைகள் அணி 2-ம் இடமும் பிடித்தனர்.
கோ கோ விளையாட்டுப் போட்டியில் எஸ். ஓ. எஸ். குழந்தைகள் அணி முதல் இடமும், பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியின் குழந்தைகள் அணி இரண்டாம் இடமும் பெற்றனர். குழந்தை களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் மகாத்மா காந்தி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பரிசுகளைப் பெற்றனர். நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின், ஏற்பாடுகளை எஸ். ஓ. எஸ். குழந்தைகள் கிராமத்தின் இயக்குனர் ஜார்ஜ் செய்திருந்தார்.
- டெல்லியில் முகாமிட்டுள்ள அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மத்திய சமூக நீதி மந்திரி வீரேந்திரகுமாரை சந்தித்து பேசினார்.
- புதுவை பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக மனு அளித்தார்
புதுச்சேரி:
டெல்லியில் முகாமிட்டுள்ள அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மத்திய சமூக நீதி மந்திரி வீரேந்திரகுமாரை சந்தித்து பேசினார்.
அப்போது, புதுவை பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக மனு அளித்தார். டெல்லியில் உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டுக் கழகம், புதுவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கழகத்திற்கு கல்விக்கடன், காலக் கடன், சிறுதொழில் கடன் வழங்குவதற்கு நடப்பு நிதியாண்டுக்கு ரூ. 1 கோடி ஒதுக்கி தந்துள்ளது.
இந்த தொகை போதுமானதாக இல்லை. இதனை ரூ. 5 கோடியாக உயர்த்தி கொடுத்தால் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக அளவில் கல்விக் கடன், சிறு தொழில் கடன் வழங்க முடியும் என கோரிக்கை வைத்தார். அமைச்சரின் தனிச் செயலாளர் மனோகரன் உடனிருந்தார். புதுவை மாநிலத்திற்கு ரூ. 5 கோடி ஒதுக்க பரிசீலனை செய்வதாக, மத்திய மந்திரி உறுதியளித்தார்.
- கொரோனா பெரும் சவாலாக உருவெடுத்தது. அப்போது நாமே ஆராய்ச்சி செய்து, தடுப்பூசியை தயாரித்து வழங்கினோம்.
- இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு நாம் தடுப்பூசி வழங்கியுள்ளோம்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேட்டில் பூச்சி கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது.
நிறுவன வளாகத்தில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா குத்துவிளக்கேற்றி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
கொரோனா பெரும் சவாலாக உருவெடுத்தது. அப்போது நாமே ஆராய்ச்சி செய்து, தடுப்பூசியை தயாரித்து வழங்கினோம். 130 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டில் தடுப்பூசியை கொண்டு சேர்ப்பது பெரும் சாதனையான விஷயம்.
இதில் பிரதமர் மிகுந்த அக்கறை காட்டினார். ஒத்துழைத்த ஆராய்ச்சியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் கடுமையான உழைப்பால் நமக்கு தடுப்பூசி கிடைத்தது. இது நமக்கு பெருமை தரக்கூடிய விஷயம். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு நாம் தடுப்பூசி வழங்கியுள்ளோம்.
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியம். புதுவை மாநிலம் ஒரு ஆராயச்சி மையமாக திகழ்வதற்கு என் வாழ்த்துக்கள்.
புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல்-அமைச்சர் ரங்கசாமியும், அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.
இந்த ஆராய்ச்சி நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ., இந்திய மருத்துவ கவுன்சில் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்க்கவ், பூச்சி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அஸ்வினிகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- சென்னை, மாகி, திருப்பதி உட்பட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை.
- புதுவையில் தனியார் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்படுதால் ஊழியர்கள் போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
புதுச்சேரி:
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.
புதுவை அரசு போக்குவரத்து பஸ்கள் செல்லும் வழித்தடத்தில் கடந்த சில மாதமாக நேர பிரச்னை தலைதூக்கி வருகிறது. பி.ஆர்.டி.சி. டிரைவர்கள், கண்டக்டர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குகின்றனர்.
இந்த சம்பவங்களை கண்டித்து நேற்று முன்தினம் முதல் பிஆர்டிசி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி பாதுகாப்பு இல்லை, பணி நிரந்தரம் செய்யவில்லை என கோஷம் எழுப்பினர்.
இதனால் உள்ளூர் பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னை, மாகி, திருப்பதி உட்பட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை. ஊழியர்களின் முதல் நாள் போராட்டத்தால் ரூ.2.50 லட்சம், 2-ம் நாள் போராட்டத்தால் ரூ.6.50 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை, காரைக்காலை சேர்ந்த பி.ஆர்.டி.சி. ஒப்பந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் என 12 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிர்வாகத்துடன் எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுக்க முயற்சித்து வருகிறார்.
புதுவையில் தனியார் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்படுதால் ஊழியர்கள் போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
- விழுப்புரம் மாவட்டம் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 18 மற்றும் 19-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
- மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவுக்கு மயிலம் சுப்பிரமணிய கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் 18 மற்றும் 19-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் 2019-ம் ஆண்டு மற்றும் 2020-ம் ஆண்டு படித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவுக்கு மயிலம் சுப்பிரமணிய கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குனர் செந்தில் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜப்பன் வாழ்த்தி பேசினார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி சண்முகம் கலந்துகொண்டு கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்ற ஒரு தங்கப்ப தக்கம் உட்பட 16 மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியின் சார்பாக தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 688 இளநிலை மாணவ-மாணவிகளுக்கும், 200 முதுநிலை மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர். மின்னணுவியல், தகவல் தொடர்பு துறை தலைவர் கணேசன் நன்றி கூறினார்.
- அரசு உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஒப்பந்த உதவி பேராசிரியர்களுக்கு சம்பள உயர்வாக ரூ.25 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- புதுவை அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அண்ணா ஜெகன் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஒப்பந்த உதவி பேராசிரியர்களுக்கு சம்பள உயர்வாக ரூ.25 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து புதுவை அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அண்ணா ஜெகன் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். மேலும் தற்போது 6 மாத காலம் மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ச்சியாக கல்வி ஆண்டு முழுவதற்கும் பணி ஆணை வழங்கும்படி முதல்-அமைச்சரையும்,கல்வி அமைச்சரையும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணை தலைவர்கள் பார்த்திபன், விஜயசுபாஷினி, செயலாளர் சிவகாமசுந்தரி, பொருளாளர் சண்முகவேல் மற்றும் நிர்வாகிகள் பொன்முத்து சரவணன், சுகந்தியா, மலையன், தயாநிதி, உதயகுமார், சபா மைதிலி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி புதுவை பெண்ணிடம் ரூ.14½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- இது குறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி ஜனனி.
கடந்த ஆண்டு இவர் சமூக வலைதளத்தில் சென்னை விமான நிலைய நிறுவனத்துக்கு கஸ்டமர்ஸ் சர்வீஸ் பணிக்கு ஆட்கள் தேவை என்று தகவல் வந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்கு இ.மெயில் மூலம் விண்ணப்பித்தார்.
அப்போது அந்த நிறுவன பெண் அனுசிங் மற்றும் பங்கஜ் ஆனந்த், ஹேமாகோபால்ரத்தினம் ஆகிய 3 பேர் ஜனனியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தாங்கள் விண்ணப்பித்த பணியை வாங்கி தருகிறோம். அதற்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்துக்கு ரூ.1,800 செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி ஜனனி வங்கி மூலம் ரூ.1,800 செலுத்தினார்.
பிறகு சான்றிதழ்களை சரிபார்க்க ரூ.6,500, வேலை செய்வதற்கான இடம், சம்பளம் குறித்த விபரங்களுக்கு ரூ.19,500 செலுத்த வேண்டும் என்று கூறினர். அதனையும் ஜனனி வங்கி மூலம் செலுத்தினார். இதுபோன்று சிறுக சிறுக ஜனனியிடம் பல காரணங்களை கூறி அவர்கள் ரூ.16 லட்சத்து 48 ஆயிரத்து 680-ஐ பெற்றனர்.
ஆனால் அவர்கள் விமான நிறுவனத்தில் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜனனி ஒருமுறை நேரடியாக அந்த நிறுவனத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு பெண் முக்கிய கூட்டம் ஒன்று நடப்பதாகவும், பிறகு வந்து பார்க்கும்படி ஜனனியை திருப்பி அனுப்பி விட்டார்.
அதன் பின்னர் ஜனனி அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதன்படி கடந்த ஜனவரி 26-ந் தேதி ஜனனி அந்த நிறுவனத்துக்கு சென்ற போது இன்று குடியரசு தினம் என்பதால் நேர்காணல் செய்யமுடியாது என்று திருப்பி அனுப்பி விட்டனர்.
இதன் பின்பு ஜனனி விசாரித்த போது சென்னை விமான நிறுவனத்துக்கு இதுபோன்று யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை என்று தெரியவந்தது. மேலும் ஜனனியிடம் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜனனி இதுகுறித்து புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மூதாட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
- மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை அருகே உள்ள சேதராப்பட்டு காமராஜர் வீதியை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி உண்ணாமலை, (வயது75). இவருக்கு ஆதிகேசவன், நாராயணமூர்த்தி ஆகிய மகன்களும் கவுரி, ராணி, கண்ணகி ஆகிய மகள்களும் உள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கணவரை இழந்த உண்ணாமலை தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அருகில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். மேலும், பசு மாடுகள் வளர்த்து கூட்டுறவு சொசைட்டியில் பால் ஊற்றி வந்தார். பால் மூலமாக கிடைக்கும் வருவாய், வீட்டு வாடகை வருமானத்தால் எப்போதும் பண புழக்கத்துடன் மூதாட்டி இருந்துள்ளார். தங்கச் செயின், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகைகளை அணிந்திருப்பதும் வழக்கம்.
இந்நிலையில், நேற்று பால் சொசைட்டிக்கு உண்ணாமலை செல்லவில்லை. மேலும், வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளிக்கப்படாமல் கதவு மூடி கிடந்தது. இதனால் அருகே வசித்துவரும் உறவினர்கள் நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மூதாட்டி உண்ணாமலை ரத்தக்காயங்களுடன் குப்புற கவிழ்ந்தபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மகன்களுக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சேதராப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், தடயங்களை சேகரித்து உண்ணாமலை உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் இறந்து கிடந்த மூதாட்டி அணிந்திருந்த தங்க செயின், கம்மல், வளையல் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது உறுதியானது.
மூதாட்டி முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். மூதாட்டி வடமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததால் மூதாட்டியை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






