என் மலர்
நீங்கள் தேடியது "women's team meeting"
- 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று பா.ஜனதா மகளிர் அணி செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
- பா.ஜனதா கட்சி மகளிர் அணி செயற்குழு கூட்டம் தவளகுப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்றது
புதுச்சேரி:
10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று பா.ஜனதா மகளிர் அணி செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுவை பா.ஜனதா கட்சி மகளிர் அணி செயற்குழு கூட்டம் தவளகுப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநில மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா மாநிலத் தலைவர் சாமிநாதன், மகளிர் அணி மாநில பொறுப்பாளர் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
தேசிய மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் தாமரைச்செல்வி, மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர்கள் கனகவள்ளி, அனிதா, துணை தலைவிகள் அமுதாராணி, கீதா, மாநில செயலாளர்கள் அனுசுவை, மீனா, மகளிர் அணி பொருளாளர் தேன்மொழி, உழவர்கரை மாவட்ட மகளிரணி தலைவி வள்ளி, நகர மாவட்ட மகளிரணி தலைவி செல்வபிரியா, அரியாங்குப்பம் மாவட்ட மகளிர் அணி தலைவி சங்கீதா, வில்லியனூர் மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயந்தி, காரைக் கால் மாவட்ட மகளிர் அணி தலைவி பார்வதி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மத்திய அரசின் திட்டமான 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவித்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டை தெரிவித்துக்கொள்வது. மத்திய அரசின் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தில் 50 சதவீத வேலை வாய்ப்பினை மகளிருக்கு அளிக்க வேண்டும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மருத்துவ வசதி வழங்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பகல் நேர பாதுகாப்பு பணியை மகளிருக்கு ஒதுக்க வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் சமுதாய நலக்கூடங்கள் கட்டி கொடுக்க வேண்டும். பஸ் மற்றும் ரெயில் பயண கட்டணத்தில் பெண்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






