என் மலர்
புதுச்சேரி
- புதுவையில் பருவ மழையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயார் நிலையில் உள்ளார்களா? அவர்களுக்கு அடிப்படை தேவை ஏதேனும் தேவைப்படுகின்றதா?
- அப்பொழுது சாய்ந்த மரங்களை அவர் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் கொண்டு அப்புறப்படுத்தினார்.
புதுச்சேரி:
புதுவையில் பருவ மழையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயார் நிலையில் உள்ளார்களா? அவர்களுக்கு அடிப்படை தேவை ஏதேனும் தேவைப்படுகின்றதா? என்று புதுவை மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால்கென்னடி ஆய்வு மேற்கொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்தார்.
உப்பளம் தொகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறதா! மரம் எங்காவது சாய்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறதா! என்று கள நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தார். அப்பொழுது சாய்ந்த மரங்களை அவர் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் கொண்டு அப்புறப்படுத்தினார்.
மேலும் இத்தொடர் மழை பொழிவு நேரங்களில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை , சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை துறை ஆகிய அதிகாரிகள் மழைக்காலங்களில் மக்களுக்கு பாதுகாப்பு அளித்து துரிதமாகவும், போர்க்கால அடிப்படை யிலும் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.
இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் காலப்பன் மற்றும் ராகேஷ் கவுளதம், ஹரிகிருஷ்ணன், செழியன், பாலாஜி, முத்து, மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- புதுவை அரசின் கல்வித்துறையின் மூலமே மதிய உணவை மீண்டும் தயாரித்து முட்டையுடன் வழங்க வேண்டும்.
- எனவே இந்த முறை எந்தவித காரணமும் கூறாமல் குழந்தைகள் தினமான வரும் 14-ந் தேதி முதல் மாணவர் பஸ்களை இயக்க உறுதியான நடவடிக்கையை கல்வித்துறை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் கல்வித்துறையின் மூலமே மதிய உணவை மீண்டும் தயாரித்து முட்டையுடன் வழங்க வேண்டும். அல்லது அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிர்வாகத்தினரை புதுவையைச் சேர்ந்த சமையல் கலைஞர்களை கொண்டு உணவு தயாரிக்கச் செய்து மாணவர்களுக்கு முட்டையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் பள்ளி தொடங்கி 6 மாத காலம் ஆகியும் இன்றுவரை மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படாததால் நகர்ப்புற பள்ளி, கல்லூரிகளில் பயிலும் கிராமப்புற மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோர் தினமும் ரூ.100 செலவு செய்து வருகின்றனர்.இது தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் அவர்களது கல்வித்திறனை பாதிக்கும்.
எனவே இந்த முறை எந்தவித காரணமும் கூறாமல் குழந்தைகள் தினமான வரும் 14-ந் தேதி முதல் மாணவர் பஸ்களை இயக்க உறுதியான நடவடிக்கையை கல்வித்துறை எடுக்க வேண்டும்.அதேபோல் பள்ளி சீருடையையும் மாணவர் தினத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கிடைப்ப தற்கான நடவ டிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ அறிக்கையில் கூறியுள்ளார்.
- மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது.
- மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான மரக்காணத்தில் பசுமாடு சினையாக இருந்தது.
மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது. மாட்டிற்கு டாக்டர் செல்வமுத்து சிகிச்சை அளித்தார்.
ஆனால், கன்றை வெளியே எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இறுதியாக, கன்று வெளியே எடுக்கப்பட்டது. சில மணி நேரம் உயிருடன் இருந்த கன்று மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது.
இதுகுறித்து கால்நடை டாக்டர் செல்வமுத்து கூறியதாவது:-
கருவுற்றிருக்கும்போது கரு சரியாக பிளவுபடாததால் அரிதான இரட்டை வடிவம் உருவாகியுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும். அப்போது தான் முன்கூட்டியே கண்டறிந்து அதை சரி செய்வதற்கான வேலையை பார்க்க முடியும்.
இவ்வாறு டாக்டர் செல்வமுத்து கூறினார்.
- ஈமச்சடங்கு நடந்த போது மூதாட்டி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிசெயினை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.
- சுடுகாட்டு ஊழியர்களிடம் விசாரித்த போது அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.
புதுச்சேரி:
ஈமச்சடங்கு நடந்த போது மூதாட்டி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிசெயினை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.
புதுவை கிருஷ்ணா நகர் 12-வது குறுத்து தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது தாயார் சரோஜினி வயது முதிர்ச்சி காரணமாக இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய கருவடிக்குப்பம் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
சரோஜினி சுமங்கலியாக இருந்ததால் அவரது கழுத்தில் 8 பவுன் தாலி செயினை அணிவித்து சுடுகாட்டுக்கு உடலை கொண்டு வந்தனர். சுடுகாட்டில் ஈமச்சடங்கு நடந்து கொண்டிருந்த போது திடீரென சரோஜினி கழுத்தில் அணிவித்து இருந்த 8 பவுன் தாலி செயின் மாயமானது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் சுரேஷ் சுடுகாட்டு ஊழியர்களிடம் விசாரித்த போது அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து சுரேஷ் இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- துத்திப்பட்டு இரும்பு தொழிற்சாலையில் நெருப்பு குழம்பு தெரித்ததில் தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.
- அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜாபாபுகுமார் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புதுச்சேரி:
துத்திப்பட்டு இரும்பு தொழிற்சாலையில் நெருப்பு குழம்பு தெரித்ததில் தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ்ராய். இவரது மகன் ராஜாபாபு குமார் (வயது 22) இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு புதுவை துத்திப்பட்டில் தங்கி அங்குள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் ஆப்பரேட்டராக பணி செய்து வந்தார்.
சம்பவத்தன்று ராஜாபாபு குமார் மற்ற தொழிலாளர்களுடன் இரும்பு உருக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.அப்போது பர்னசில் இருந்து நெருப்பு குழம்பு திடீரென தெரித்தது. இதில் அருகில் இருந்த ராஜா பாபுகுமார் மற்றும் மற்ற தொழிலாளர்களான பீகாரை சேர்ந்த ராகுல் (20) உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் (20) ஆகியோரின் உடலில் நெருப்பு கொட்டியது. இதில் பலத்த தீக் காயமடைந்த 3 பேரையும் மற்ற தொழிலாளர்கள் மீட்டு பத்துகண்ணுவில் உள்ள ஒரு தனியார் மருத்து கல்லூரி ஆஸ்பத்தியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜாபாபுகுமார் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து ராஜா பாபு குமாரின் தந்தை ரமேஷ் ராய் சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். புகாரில் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ரமேஷ் ஆகியோர் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அஜாக்கிரதையாக வேலை வாங்கியதால் இந்த சம்பவம் நடந்ததாகவும் எனவே தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவையில் ஆயிரத்து 60 அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
- புதுவையில் முதல்முறையாக தீயணைப்பு துறையில் பெண் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 60 அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
தீயணைப்புதுறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்து துறையிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில் தீயணைப்பு துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. எனவே பெண்களுக்கும் தீயணைப்பு துறையில் வாய்ப்பு தர வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து ஒரு நிலைய அதிகாரி, 17 வீரர்கள் என மொத்தம் 18 இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் புதுவையில் முதல்முறையாக தீயணைப்பு துறையில் பெண் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
- மழை காரணமாக புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுவையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 6.74 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்துள்ளது.
இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. நேற்று பகல் வரை மழை பெய்யவில்லை. இரவு 7 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தவண்ணம் இருந்தது. இன்று அதிகாலை வானம் மப்பும், மந்தாரமுமாக இருட்டாக இருந்தது. மேக கூட்டத்தில் சூரியனை பார்க்க முடியவில்லை. காலை 6 முதல் 7 மணி வரை கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியது. தொடர்மழையால் பாவாணர் நகர், ரெயின்போ நகர் உட்பட ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரெயின்போ நகரில் சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தொடர்ந்து விட்டுவிட்டு அவ்வப்போது மழை பெய்தவண்ணம் உள்ளது.
மழை காரணமாக புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 6.74 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் ஆக்ரோஷமாக உள்ளது. எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் அலை சீற்றம் காரணமாக பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
பிள்ளைச்சாவடி கிராமத்தில் தூண்டில் முள் வளைவு அமைக்காததால் ஏற்கனவே இரு சாலைகள், 100 தென்னை மரங்கள், 100 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மக்களின் தொடர் போராட்டத்தால் இங்கு கல் கொட்டும் பணி நடந்தது. 300 அடி தூரம் கல் கொட்டி சாலை அமைக்கும் சூழலில் காலை முதல் அலை சீற்றத்திற்கு அவை கடலுக்குள் இழுத்து செல்லப்படுகின்றன.
மேலும் 5 குடிசை வீடுகளும் 5 தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்தன. சாலையோர மின் கம்பங்கள், குடியிருப்பு பகுதியில் இருந்த குடிநீர் குழாய்களும் அடித்துச் செல்லப்பட்டன. அரசு சார்பில் கட்டித்தந்த மீன்வலை காப்பகத்தின் தரைத்தளத்திலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து அலை சீற்றம், கடல் அரிப்பால் பிள்ளைச்சாவடி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் சட்டசபையில் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
- மேலாண் இயக்குநர் மற்றும் நிர்வாக மேலாளர்களை முழு நேரமாக ஆலையில் இருக்கவும், தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறவும் அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
திருபுவனை ஸ்பின்கோ கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் சட்டசபையில் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருபுவனை கூட்டுறவு நூற்பாலையை கடந்த 4 மாதங்களாக லே ஆப் கொடுத்து மூடிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலை வாய்ப்பை இழந்து மிகவும் வறுமையில் வாடுகிறார்கள்.
எனவே, அரசே ஆலையை ஏற்று இயங்க செய்து, வேலையை இழந்து வாடும் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
மேலும், நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்கி, புதிய தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். ஆலையில் உள்ள ரூ.1 ½ கோடி மதிப்புள்ள நூல் பண்டல்களை விற்பனை செய்ய வேண்டும்.
நஷ்டத்தை குறைக்க தொழிலாளர்கள் புதிய வேலை பளுவை ஏற்கவும் தயாராக உள்ளனர். எனவே ஆலை புனரமைப்பிற்கு அரசு நிதி வழங்க வேண்டும்.
மேலாண் இயக்குநர் மற்றும் நிர்வாக மேலாளர்களை முழு நேரமாக ஆலையில் இருக்கவும், தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறவும் அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.
உணவு விடுதியை திறக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி ஆலையை திறந்து இயக்க உதவும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது செந்தில்குமார் எம்எல்ஏ, தொ.மு.ச. மாநில தலைவர் அண்ணா அடைக்கலம், ஸ்பின்கோ தொழிற்சங்க நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, ரமேஷ், ராஜாராம், வெங்கடகிருஷ்ணன், செல்வம், ராஜசேகர், ஆறுமுகம், நாகராஜ், ராமமூர்த்தி, சுப்புராயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- என்ஜினீயர் தினத்தை முன்னிட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எந்திரவியல் துறை சார்பில் கருந்தரங்கு நடந்தது.
- எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், என்ஜினீயர் தினத்தின் சிறப்புகள், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
புதுச்சேரி:
என்ஜினீயர் தினத்தை முன்னிட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எந்திரவியல் துறை சார்பில் கருந்தரங்கு நடந்தது.
கருத்தரங்கிற்கு மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் அனை வரை யும் வரவேற்றார்.
எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ராஜாராம், என்ஜினீயர் தினத்தின் சிறப்புகள், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். முன்னாள் மாணவர் நரேஷ் கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தா ர். முடிவில் உதவி பேராசிரியர் நடராஜன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கணேஷ்குமார் செய்திருந்தார்.
- கடந்த காலத்தில் அ.தி.மு.க.வில் சிலர் எதிர்கட்சிகளை தூண்டிவிட்டு அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராக பேச வைப்பார்கள். பின்னர் அதற்கு பதில் சொல்வது போல பேசி பெயரெடுப்பார்கள்.
- ஓ.பி.எஸ். தலைமையை நாளை எடப்பாடி ஏற்றால் தற்போது விமர்சிப்பவர்கள் நிலை என்னவாகும்?
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த காலத்தில் அ.தி.மு.க.வில் சிலர் எதிர்கட்சிகளை தூண்டிவிட்டு அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராக பேச வைப்பார்கள். பின்னர் அதற்கு பதில் சொல்வது போல பேசி பெயரெடுப்பார்கள். அதுபோல இப்போது புதுவை அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை கொச்சைப்படுத்தும் வகையில் கட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பேசி வருகின்றனர்.
நான் எடப்பாடியை தவறாக விமர்சிக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஜெயலலிதாவின் உண்மை தொண்டன் என போற்றப்பட்டவர் ஒ.பி.எஸ். ஜெயலலிதா இருந்த போதும், மறைந்த பிறகும் ஓ.பி.எஸ். போன்ற தொண்டரை அ.தி.மு.க. கண்டதில்லை. அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவதை ஒருகாலும் ஏற்க முடியாது.
ஓ.பி.எஸ். தலைமையை நாளை எடப்பாடி ஏற்றால் தற்போது விமர்சிப்பவர்கள் நிலை என்னவாகும்? எடப்பாடியே ஓ.பி.எஸ்சை ஏற்றாலும் நான் ஏற்க மாட்டேன் என அவர்களால் கூற முடியுமா?
கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 3 பேர் வெற்றி பெற்றோம்.
முதல்-அமைச்சராக காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி பதவியேற்ற போது அமைச்சர் பதவிக்காக என்னை காங்கிரசில் சேர அன்பழகன் வற்புறுத்தினார். அப்போது நான் மறுத்துவிட்டதால் அன்பழகன் காங்கி ரசில் இணைவது தவிர்க்கப்பட்டது.
கடந்த ஆட்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக கிரண்பேடியை அன்பழகன் எதிர்த்து வந்தார். தற்போது ரங்கசாமிக்கு ஆதரவாக தற்போதைய கவர்னரை புகழ்ந்து வருகிறார். ஓ.பி.எஸ்.சிடம் அன்பழகனை போல பலன் பெற்றவர்கள் யாரும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன், பொதுச் செயலாளர் ரவி. துணை தலைவர் ராமமூர்த்தி செயலாளர் கருணாகரன், மாநில குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
- நிலப்பட்டா உள்ள சுமார் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே நிதி வந்தது. மீதமுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான நிலப்பட்டா இல்லாத விவசாயிகளுக்கு நிதி இதுவரை வந்து சேரவில்லை.
புதுச்சேரி:
புதுவை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன், பொதுச் செயலாளர் ரவி. துணை தலைவர் ராமமூர்த்தி செயலாளர் கருணாகரன், மாநில குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் கிசான் பண்ட் திட்டத்தின் அடிப்படையில் வருட த்திற்கு ரூ.6 ஆயிரம் நிதி விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால், 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-வது தவணையாக பிரதமர் அறிவித்த கிசான் பண்டு புதுவை மாநிலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வந்து சேரவில்லை.
நிலப்பட்டா உள்ள சுமார் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே நிதி வந்தது. மீதமுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான நிலப்பட்டா இல்லாத விவசாயிகளுக்கு நிதி இதுவரை வந்து சேரவில்லை.
எனவே, பயிர் சாகுபடி செய்கிற அனைத்து விவசாயிகளுக்கும் நிலப் பட்டாவை அவர்கள் பெயரிலேயே மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்ற அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வருவாய்த் துறைக்கு நாங்கள் கடிதம் எழுதி அனுப்பி உள்ளோம். யார் சாகுபடி செய்கின்றார்களோ அவர்களுக்கு பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- உப்பளம் தொகுதிக்குட்பட்ட கத்தினால் புஷெட் வீதியில் உள்ள சூர்யா ஹோமில் பாதாள வடிகால் வழிந்து நிரம்புவதாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. கென்னடியிடம் அந்நிறுவனம் புகார் அளித்தது.
- வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் மற்றும் முதல் குறுக்கு தெரு யூ வடிவ மற்றும் எல் வடிவ வாய்க்கால் மற்றும் பாதாள வடிக்கால் நிரம்பி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட கத்தினால் புஷெட் வீதியில் உள்ள சூர்யா ஹோமில் பாதாள வடிகால் வழிந்து நிரம்புவதாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. கென்னடியிடம் அந்நிறுவனம் புகார் அளித்தது.
மேலும் கவுசீக பாலசுப்பிரமணியர் கோவில் பகுதி, மோரிசன் வீதி, பாதர் சாஹிப் வீதி, பாரதி வீதி, வ.உ.சி வீதி, ஜீவானந்தம் வீதி, ராசு உடையார் தோட்டம், ரெயில் நிலையம் இணைப்பு வாய்க்கால், சுப்பையா சாலை, தூய இருதய ஆண்டவர் பள்ளி ஆகிய இடங்கள், வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் மற்றும் முதல் குறுக்கு தெரு யூ வடிவ மற்றும் எல் வடிவ வாய்க்கால் மற்றும் பாதாள வடிக்கால் நிரம்பி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர்.
உடனே பொதுப் பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வரவழைத்து பாதாள வடிகால் கழிவு நீரை உறிஞ்சி எடுக்கும் இயந்திர வாகனம் மூலமும், மற்றும் பொதுப்பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் வாய்க்கால் சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
இப்பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.






