என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாகுபடி செய்யும் விவசாயிகள் பெயரில் நிலப்பட்டா-   அமைச்சரியிடம்  மனு
    X

    அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரிடம் விவசாய சங்க நிர்வாகிகள் மனு அளித்த காட்சி.

    சாகுபடி செய்யும் விவசாயிகள் பெயரில் நிலப்பட்டா- அமைச்சரியிடம் மனு

    • புதுவை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன், பொதுச் செயலாளர் ரவி. துணை தலைவர் ராமமூர்த்தி செயலாளர் கருணாகரன், மாநில குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
    • நிலப்பட்டா உள்ள சுமார் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே நிதி வந்தது. மீதமுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான நிலப்பட்டா இல்லாத விவசாயிகளுக்கு நிதி இதுவரை வந்து சேரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன், பொதுச் செயலாளர் ரவி. துணை தலைவர் ராமமூர்த்தி செயலாளர் கருணாகரன், மாநில குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் அமைச்சர் தேனீ. ஜெயக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் கிசான் பண்ட் திட்டத்தின் அடிப்படையில் வருட த்திற்கு ரூ.6 ஆயிரம் நிதி விவசாயிகளுக்கு கிடைத்தது. ஆனால், 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-வது தவணையாக பிரதமர் அறிவித்த கிசான் பண்டு புதுவை மாநிலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வந்து சேரவில்லை.

    நிலப்பட்டா உள்ள சுமார் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே நிதி வந்தது. மீதமுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான நிலப்பட்டா இல்லாத விவசாயிகளுக்கு நிதி இதுவரை வந்து சேரவில்லை.

    எனவே, பயிர் சாகுபடி செய்கிற அனைத்து விவசாயிகளுக்கும் நிலப் பட்டாவை அவர்கள் பெயரிலேயே மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்ற அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வருவாய்த் துறைக்கு நாங்கள் கடிதம் எழுதி அனுப்பி உள்ளோம். யார் சாகுபடி செய்கின்றார்களோ அவர்களுக்கு பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    Next Story
    ×