என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி னார்.
    • புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களி டையே உரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி (எம்.ஐ.டி) இயந்திரவியல் துறை, இந்திய பொறியாளர் அமைப்பு மாணவர் பிரிவு சார்பில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங் கம் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி, பொரு ளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார். இயந்திர வியல் துறை தலைவர் ராஜாராம் வரவேற்றார். புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களி டையே உரையாற்றினார்.

    கருத்தரங்கில் அனைத்து துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். இயந்திர வியல் துறை உதவி பேரா சிரியர் இளஞ்செழியன் நன்றி கூறினார். கருத்த ரங்கிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சுமித்ரா, சிவராமகிருஷ் ணன் ஆகியோர் செய்தி ருந்தனர்.

    • புதுவையில் கடும் போக்குவரத்து நெரிசல்
    • புறநகர், கிராமப்புற பகுதியிலிருந்தும், அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்திலில் இருந்தும் புதுவைக்கு மக்கள் பொருட்கள் வாங்க படையெடுத்தனர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் வியாபாரம் களைகட்டியுள்ளது. புதிய ஆடைகள், பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை வாங்குவதற்காக மக்கள் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளுக்கு வருகின்றனர். புறநகர், கிராமப்புற பகுதியிலிருந்தும், அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்திலில் இருந்தும் புதுவைக்கு மக்கள் பொருட்கள் வாங்க படையெடுத்தனர்.

    இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கும் சண்டே மார்க்கெட் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து இயங்கி வருகிறது.

    நேற்று இரவு திடீரென மழை பெய்தது. இதனால் வியாபாரம் பாதித்தது. சண்டே மார்க்கெட் கடைகளை மூடினர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் நகர பகுதியில் அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருந்தது. முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக நகர பகுதியில் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் தடை விதித்திருந்தனர். புதுவையில் இன்று காலை பரவலாக அவ்வப்போது பெய்தது.

    மழையை பொருட்படுத்தாமல் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள கூட்டம் அலை மோதியது.

    • புதிய குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது.
    • குழாய் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதிக்குட்பட்ட உறுவையாறு மூகாம்பிகை நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.36 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது.

    இதன் தொடக்க விழா அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நடந்தது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் பூமி பூஜை செய்து குழாய் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம சுகாதார குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் திருநாவுக்கரசு இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • சொர்ணாவூர் அணை நிரம்பி வழிகிறது
    • பாகூர் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது.

    புதுச்சேரி

    புதுச்சேரி, தமிழகம் கர்நாடகா மாநிலங்களில் பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடகா பகுதியில் உள்ள அணை திறக்கப்பட்டு அங்கு இருந்த உபரி நீர் சாத்தனூர் அணையை வந்தடைந்தது.

    சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து 3500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் தற்போது தென்பெண்ணையாற்றில் பாய்ந்தோடி வருகிறது. இதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    தென்பெண்ணை ஆற்றின் வழியாக வரும் நீர் புதுச்சேரி பொதுப்பணித்துறை கீழ் பராமரித்து வரும் சொர்ணாவூர் அணையை இன்று காலை எட்டியது.

    தற்பொழுது இந்த ஆற்றில் 1.30 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் இருபுறம் கரைபுரண்டு வந்து கொண்டு இருக்கிறது. தண்ணீர் அதிகமாக வருவதால் சொர்ணாவூர் அணை நிரம்பி தண்ணீர் வழிகிறது. மேலும் இந்த அணையில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு 1.10 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வருகிறது.

    கடந்த சில நாட்களாக பாகூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாய்க்கால், நிலம் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பாகூர் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது.

    ஏற்கனவே சாத்தனூர் அணை திறக்கப்பட்டு அணைகள் நிரம்பிய நிலையில் மீண்டும் அதிகப்படியாக தண்ணீர் வருவதால் அரசு, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.


    புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து ஆற்றில் வரும் தண்ணீரின் அளவையும் வாய்க்காலில் மூலமாக ஏரிகளை நிரப்பி வருவதையும் பணியையும் கவனித்து வருகின்றனர். கடந்த மாதம் இதே போல அணைகள் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.


    • 2 வாலிபர்கள் கைது
    • 5 மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இது அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவானது.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கனூரில் தனியார் பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் நேற்று மாலை வீடு திரும்பும் போது அனைவரும் ஒன்றாக கைகோர்த்தபடி சென்றனர்.

    அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் ஹாரன் அடித்தும் வழிவிடாமல் மாணவர்கள் சுவராஸ்யமாக பேசிக்கொண்டு சென்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பைக்கில் வந்தவர்கள் மாணவர்களை சரமாரியாக தாக்கி விட்டு சென்றனர். இதில் 5 மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இது அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவானது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தை நாகராஜன் திருக்கனூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் களான திருக்கனூரை சேர்ந்த ரியாஸ்(24), திருமால்(24) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். இவர்கள் இருவரும் திருக்கனூரில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.

    • விதவிதமான உணவுகள் என செய்து அசத்தி கொண்டாடுகின்றனர்.
    • புதிய வகை ரக பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    புதுச்சேரி:

    தீபாவளி என்றாலே புதிய ஆடை, இனிப்பு , காரம், விதவிதமான உணவுகள் என செய்து அசத்தி கொண்டாடுகின்றனர்.

    அதோடு ஆண்டுதோறும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பட்டாசுகள் புதிய ரகங்கள் அறிமுகம் செய்வது வழக்கம்.இந்த முறை அதேபோன்று பல்வேறு புதிய வகை ரக பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு புதிதாக லியோ பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது. லியோ துப்பாக்கி, லியோ கிப்ட் பாக்ஸ் இந்த புதிய ரகம் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மஞ்சள் நிறத்தில் ரெடிமேடாக வெடி பொருத்திய பிளாஸ்டிக் தோட்டாவுடன் வந்துள்ளது. இதன் டிரிக்கரை அழுத்தினால் வெடிக்கும்.

    லியோ துப்பாக்கியை விற்பவரும் வாங்கியவரும் விஜய் படத்தில் துப்பாக்கிய தேய்ப்பது போல் தேய்த்து சுட்டு தங்களது குதுகலத்தை வெளிபடுத்துகின்றனர்.இதோடு மற்றொரு புதிய அறிமுகமாக டீன் பீர் வெடி. பல வண்ணத்தில் வந்துள்ளது.

    புதிய ரகங்களான மோட்டு பட்லு, கொரோனா, பாப்கார்ன், சூரியகாந்தி பூ,ட்ரோன், லேசர் ஷோ கோலிசோடா, காளான், மேஜிக் பஸ், சாட் சாட், கிராண்ட் சலாம்,வட்ட வடிவில் தொடர்ந்து 15 நிமிடம் வெடிக்கக் கூடிய கிராண்ட் ஸ்லாம், முதல் முறையாக 20 ஆயிரம் வாலா பட்டாசு, 4 அடி உயரத்தில் கம்பி மத்தாப்பு போன்ற எண்ணற்ற வகைகள் வழக்கம் போல் அணிவகுத்துள்ளன.




    • கவர்னர் தமிழிசை பேட்டி
    • தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும். புதுவையின் கடல் நிறம் மாற்றம் குறித்த மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    காலாப்பட்டு தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு அந்த நிறுவனம் உரிய இழப்பீடு கொடுக்க வலியுறுத்தி யுள்ளோம். தொழிற்சாலை யின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திடம் கேட்டுள்ளோம்.

    தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நீர் சுத்திகரிப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யப்படும். தொழிற்சாலையில் சுமார் 450 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் என்ன? சுற்றுச்சூழல் பாதிக்கப்படு கிறதா? என அறிக்கை கேட்டுள்ளோம்.

    அது வந்தவுடன் மேற்கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகே தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்கப்படும். மக்கள் பாதிக்கப்பட்டால் அதை மீறி எந்த நிறுவனமும் நடத்த முடியாது. அதில் நான் மிகவும் கவனமாக உள்ளேன்.

    தொழிற்சாலையை மூடுவது எளிது. அதில் பணியாற்றும் தொழிலாளர்களையும் பார்க்க வேண்டும். புதுவையின் கடல் நிறம் மாற்றம் குறித்த மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்யும்.

    தெலுங்கானாவில் தேவைப்படும் நேரத்தில் முதல்-அமைச்சர் கவர்னரை சந்திப்பது இல்லை. கோப்புகளில் தெளிவுக்குக்கூட கேட்க முடியாத நிலை உள்ளது. இதை சுப்ரீம்கோர்ட்டில் தெளிவு படுத்தியுள்ளோம்.

    ஆனால் புதுவையில் சரியாக நடக்கிறது. என்னை பொறுத்தவரை நான் பொறுப்பாக நடந்து கொள்கிறேன். நான் புதுவைக்கு பொறுப்பு கவர்னர் அல்ல, பொறுப்பான கவர்னர். புதுவை, தெலுங்கானாவில் இதுவரை மக்களுக்கா கத்தான வேலை செய்கிறேன்.

    தெலுங்கானாவில் கவர்னருக்கு புரோட்டோ கால் தருவதில்லை. கொடி யேற்ற விடுவதில்லை, கவர்னர் உரை இல்லை. இதையெல்லாம் யார் கேட்பது? எல்லா விதத்தி லும் நாங்கள் வெளிப்படை த்தன்மை யோடு இருக்கிறோம். என்னை பொறுத்தவரை என் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாது.

    வேகமாக, தன்னிச்சை யாக வேலை செய்கிறேன் என குற்றம்சாட்டுங்கள். ஆனால் ஊழல் குற்றச்சாட்டு மட்டும் என்னிடம் சொல்லா தீர்கள். மிகப்பெ ரிய டாக்டராக இருந்து வந்த நான் நேர்மை யாகவே செயல்படுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தீபாவளி நேரத்தில் மக்கள் அச்சம்
    • பாகூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரி இல்லாமல் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 8 தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் முக்கிய பகுதிகளில் ஒன்றான பாகூரிலும் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பாகூர், அரங்கனூர், கிருமாம்பாக்கம், கன்னியாகோவில், மணப்பட்டு, மூர்த்திக்குப்பம், கரையாம்புத்தூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பாகூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தான் தீயணைத்து வருகின்றனர்.

    பாகூரை சுற்றி உள்ள பகுதிகளில் குடிசை வீடுகள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், தென்பெண்ணை ஆறு, ஏரி, குளங்கள் என அமைந்துள்ளது. அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகள், ஆற்றில் சிக்கும் இளைஞர்கள் மீட்பு மற்றும் தீயணைப்பு பணியை மேற்கொள்ளப்பட்டு தீயணைப்பு துறையினரே மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆனால் பாகூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரி இல்லாமல் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தீயணைப்பு நிலைய அதிகாரியாக இருந்த பக்கிரி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்று 6 மாதங்கள் ஆகியும் இதுவரை நிலைய அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது.

    தற்போது தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்தப் பண்டிகையை சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளனர்.

    பாகூர் பகுதியில் இந்த தீபாவளி பண்டிகை நாளில் அசம்பாவிதம் ஏதேனும் பெரிய அளவில் நடக்கும் முன் நிலைய அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மத்திய அரசின் பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டத்தை புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது.
    • பயிர் காப்பீடு விண்ணப்பங்களை உழவர் உதவியகம் மூலம் வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை கூடுதல் இயக்குனர் வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டத்தை புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல், மணிலா, கரும்பு, பருத்தி, வாழை காப்பீடு செய்யப்படுகிறது.

    இயற்கை இடர்பாடுகளுக்கு காப்பீடு பிரீமியத்தொகை முழுவதை யும் அரசே செலுத்துகிறது.

    ரபி பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை உழவர் உதவியகம் மூலம் வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படும் என்று வலியுறுத்தப்பட்டது.
    • பள்ளித்தலைவர் இருதயமேரி வரவேற்று பேசினார். தாளாளர் இராஜராஜன் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல் நிலைப் பள்ளியில் மாணவ-மாணவியருக்கு தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    சுற்றுசூழல் மற்றும் வன அமைச்சகத்தின் வழி நடத்துதலின் படி மாணவர்களுக்கு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என்ற செய்தி அறியுறுத்தப்பட்டது.

    பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படும் என்று வலியுறுத்தப்பட்டது. பள்ளி முதல்வர் நீலம் அருள்செல்வி சிறப்புரையாற்றினார். பாகூர் தீயணைப் நிலையத்தி லிருந்து வீரர்கள் நகேஷ்வரராவ், ராஜவேலு மற்றும் பாலசந்தர் கலந்துகொண்டு, பட்டாசு வெடிக்கும் போது செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை எவை என்று எடுத்துரைத்தனர்.

    பள்ளித்தலைவர் இருதயமேரி வரவேற்று பேசினார். தாளாளர் இராஜராஜன் முன்னிலை வகித்தார்.

    துணை முதல்வர் அன்புசெல்வி மாணவர் களை தீபாவளி உறுதிமொழி எடுக்கச்செய்தார்.

    • மார்க்சிஸ்டு வலியுறுத்தல்
    • அரசின் தொழிலாளர் துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையும் தொடர் ஆய்வுகள் நடத்தி தொழிலாளர்கள், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை காலாப்பட்டு தொழிற்சாலையில் ஏற்பட்ட மோசமான விபத்துக்கு நிர்வாகமே காரணம். அரசின் தொழிலாளர் துறையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையும் தொடர் ஆய்வுகள் நடத்தி தொழிலாளர்கள், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.

    புதுவை அரசு தற்போது கலெக்டர் தலைமையில் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில், தொழிலாளர்துறை ஆய்வா ளர்கள், தொழிற்சாலை ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், குற்றம் இழைத்தவர்கள் மீது முழுமையாக நடத்தப்பட வேண்டும்.

    வெளிப்படையாக உண்மை நிலையை வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தொழிற்சாலையை முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் மக்கள் தலைமையில் குழு அமைத்து முழு விசாரணை நடத்த வேண்டும்.அதுவரை அந்த தொழிற்சாலையை இயக்க அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா.
    • தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி இருந்த விசைப்படையில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா. இவருக்கு சொந்தமான விசைப்படகு, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள்நடைபெற்று வந்தது. அப்போது படத்தின் கீழ் புறத்தில் வெல்டிங்க் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீ மற்ற பகுதி மற்றும் மற்ற படங்களுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் .ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    ×