என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.36 லட்சத்தில் குடிநீர் குழாய் பதிப்பு
    X

    மூகாம்பிகை நகரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தொடங்கி வைத்த காட்சி.


    ரூ.36 லட்சத்தில் குடிநீர் குழாய் பதிப்பு

    • புதிய குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது.
    • குழாய் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதிக்குட்பட்ட உறுவையாறு மூகாம்பிகை நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.36 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது.

    இதன் தொடக்க விழா அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நடந்தது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் பூமி பூஜை செய்து குழாய் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம சுகாதார குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் திருநாவுக்கரசு இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×