என் மலர்
இந்தியா

ஆபரேசன் சிந்தூர், அமெரிக்க அரசின் தலையீடு குறித்து விவாதிக்க பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
- டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது
- நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா ஏன் தலையிடுகிறது என்று மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது
இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அரசின் தலையீடு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.






