என் மலர்tooltip icon

    இந்தியா

    கூட்டத்தொடரின் கடைசி நாள்: எம்.பி.க்கள் கூச்சல் குழப்பம்.. மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
    X

    கூட்டத்தொடரின் கடைசி நாள்: எம்.பி.க்கள் கூச்சல் குழப்பம்.. மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு

    • கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்ச ரித்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்து இருக்கும்
    • தள்ளுமுள்ளுவுக்கு ராகுல்தான் காரணம் என்று பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "எதிர்க்கட்சிக ளுக்கு அம்பேத்கர் பெ யரை தொடர்ந்து பல முறை முழக்கம் இடுவது வாடிக்கையாக இருக்கி றது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்ச ரித்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்து இருக்கும்" என்று கூறினார்.

    இதனால் அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

    இதற்கிடையே நேற்று பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் போட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் செல்ல வந்தபோது அங்கு நுழைவுவாயில் பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பா.ஜ.க. எம்.பி.க்களுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட நேரிட்டது.

    இந்த மோதலில் பா.ஜ.க. எம்.பி.க்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து தள்ளுமுள்ளுவுக்கு ராகுல்தான் காரணம் என்று பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக பாராளுமன்ற வளாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று ராகுலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜகவும், அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்தியா கூட்டணியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மக்களவையிலும் எம்.பிக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் மக்களவை தேதி குறிப்பிடாமல் காவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    Next Story
    ×