என் மலர்
இந்தியா

வக்பு வாரிய சொத்துக்களை கார்கே அபகரித்ததாக பாஜக குற்றச்சாட்டு - காங்கிரஸ் கண்டனம்
- தன மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் என கார்கே சவால்
- காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன
மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே குடும்பத்தினர், வக்பு சொத்துகளை ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுராக் தாகூர் குற்றசாட்டு குறித்து மாநிலங்களவையில் பேசிய கார்கே, "தன் மீது அப்பட்டமான குற்றச்சாட்டை பாஜக முன்வைத்துள்ளது.அனுராக் தாக்கூரின் பேச்சு தன்னை கடுமையாக பாதித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் ராஜினாமா செய்யத் தயார். நிரூபிக்காவிட்டால் அனுராக் ராஜினாமா செய்வாரா?
கார்கே மீதான குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.






