என் மலர்
செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல்
பாராளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். #LokSabhaElections2019 #CongressManifesto #RahulGandhi
புதுடெல்லி:

இந்த தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வு, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் துயரம், பெண்கள் பாதுகாப்பு ஆகியவை இந்தத் தேர்தல்களில் முதலிடம் வகிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக மன்மோகன் சிங் கூறினார். வறுமையை குறைக்கும் திட்டமும் தேர்தல் அறிக்கையில் உள்ளதாக அவர் கூறினார். #LokSabhaElections2019 #CongressManifesto #RahulGandhi
பாராளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு வாழ்க்கை நிலையில் உள்ள மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து கட்சி தலைமையிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

Next Story