search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வின் விதி மாற்றங்களை தேர்தல் கமி‌ஷன் ஏற்கக்கூடாது- சசிகலா மனு
    X

    அ.தி.மு.க.வின் விதி மாற்றங்களை தேர்தல் கமி‌ஷன் ஏற்கக்கூடாது- சசிகலா மனு

    அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ஏற்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #ADMK #ElectionCommission #Sasikala
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.

    கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி (அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்) தலைமை தேர்தல் கமி‌ஷனில் முறையிட்டார். டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.


    இதற்கிடையே தேர்தல் கமி‌ஷனில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தேர்தல் கமி‌ஷனில் சசிகலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது. அ.தி.மு.க. பொதுச்செய லாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. #ADMK #ElectionCommission #Sasikala
    Next Story
    ×