என் மலர்
கதம்பம்
- சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும்.
- இரண்டு நாட்கள் கழித்து ஊறிய வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
"குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்" என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக் கற்றாழையின் மற்றொரு பெயர்.
தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
கற்றாழை மடலைக் கீறி சாறு எடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.
கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
இச்செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச்சிக்கல் தீரும்.
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப்புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லது கட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
-ப்யாரீப்ரியன்
- அம்பல் > அம்பலம் என்றால் கூடுகிற இடம். அக்காலத்திலே கோயில் தானே மக்கள் கூடுகிற இடம்.
- இன்றைக்கும் மலையாள மொழியில் கோயிலை ‘அம்பலம்’ என்றே அழைக்கின்றனர்.
திருச்சிற்றம்பலம் என்பதற்கு பொருள் என்ன?
சிற்றம்பலம் - என்ற அழகிய தமிழ்ப் பெயரோ தற்காலத்தில் 'சிதம்பரம்' - எனச் சிதைந்து விட்டது!
சிற்றம்பலம் > சித்தம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்!
திருச்சிற்றம்பலம் - என அழகுத் தமிழில் அழைக்க வேண்டிய நாம் சிதம்பரம் என்ற புரியாத சொல்லைப் புழங்கிக் கொண்டிருக்கிறோம்.
அதன் காரணமாக சிதம்பரம் அறிந்த நமக்கு - அதன் பண்டைய பெயரான 'திருச்சிற்றம்பலம்' - தெரியவில்லை!
அம்பல் > அம்பலம் என்றால் கூடுகிற இடம். அக்காலத்திலே கோயில் தானே மக்கள் கூடுகிற இடம். இன்றைக்கும் மலையாள மொழியில் கோயிலை 'அம்பலம்' என்றே அழைக்கின்றனர். அம்பலம் என்பதற்கு அரங்கம் /அரண்மனை என்ற பொருளும் உண்டு.
தில்லையில் இருக்கும் ஆடலரசன் கோயில் என்பது மூன்றாம் நூற்றாண்டு காலத்திலிருந்த 'சிறிய அம்பலம்' ஆகும் .
சிறிய அம்பலம் = சிற்றம்பலம்.
அதை அந்நாளில் 'சிற்றம்பலம்' என்றே அழைத்தனர். பின்னர் பேரரசுச் சோழர் காலங்களில் அது பேரம்பலம் ஆயிற்று. பொற்கூரை வேயப்பட்டு பொன்னம்பலமும் ஆயிற்று.
தில்லையும் மதுரையும் தமிழர்கள் வரலாற்றில் பெரும் பங்கு கொண்டவை.
சோழர்கள் முடி சூடிக்கொண்ட இடம் = பொன்னம்பலம்.
பாண்டியர்கள் முடி சூடிக் கொண்ட இடம் = வெள்ளம்பலம் (மதுரை வெள்ளியம்பலம்).
சிற்றம்பலம் - என்ற அழகிய தமிழ்ப் பெயரை சித்தம்பரம் > சிதம்பரம் எனத்திரித்து பின்
சித் + அம்பரம் என்று பிரித்து "ஞான ஆகாசம்" என்று பொருள் சொல்லி இன்று புது விளக்கங்கள் சொல்லப்படுகிறது.
-நித்தியானந்தபாரதி
- ஒரு மணி நேரம் வாய்கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள்.
- நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள். உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது.
பெண்களோடு நெருங்கிப் பழகும் எல்லா ஆண்களுக்கும், பெண்கள் வித்தியாசமானவர்கள் என்ற அடிப்படை உண்மை புரிந்திருக்கும்.
ஒரு பெண்ணோடு தர்க்கரீதியாக விவாதம் செய்ய முடியாது. அதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள். புரிந்து கொள்ள முடியாது.
அவளது போக்கைப் பார்க்கும் போது, அவள் வேறு கிரகத்தைச் சேர்ந்தவளோ என்று நமக்கு நினைக்கத் தோன்றும்.
அதே போல் தான் ஒரு பெண்ணின் நிலையும். எப்போது பார்த்தாலும் அறிவின் மூலமாகவே உலகத்தை உணர முயன்று கொண்டிருக்கும் முட்டாள்கள் என்று தான் ஆண்களைப் பற்றி அவர்கள் நினைப்பார்கள்.
உணர்வு சம்பந்தப்பட்ட எதையும் புரிந்து கொள்ள லாயக்கில்லாதவர்கள் ஆண்கள் என்றுதான் பெண்கள் நினைக்கிறார்கள்.
ஆண் வாதம் செய்கிறான். தர்க்கரீதியாக உண்மையைப் புரிய வைக்க முயற்சி செய்கிறான். ஆனால் அதை பெண்ணின் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. அது அவளுடைய வழியில்லை. தர்க்கத்திற்கும், பெண்ணிற்கும் சம்பந்தமேயில்லை.
தன் மனைவியோடு பல மணிநேரம் செய்யும் வாதத்தைவிட, ஒரு சிறிய ரோஜாப்பூ அதிக மதிப்புடையது என்பதைப் பல கணவர்கள் புரிந்து கொள்வதில்லை.
ஒரு மணி நேரம் வாய்கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள்.
நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள். உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது.
ஒரு சிறிய ரோஜா மலரைக் கொண்டு போய், "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று மென்மையாகச் சொல்லுங்கள். அவள் புரிந்து கொள்வாள்.
பெண் உணர்ச்சிமிக்கவள். உணர்வு பூர்வமானவள். ஓர் ஆணால் ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவள் சொல்வது, செய்வது எல்லாமே காரண-காரிய அறிவுக்குப் புறம்பானதாக இருக்கும்.
கணவன் மனைவியிடம் எதையும் தர்க்க ரீதியில் பேசி புரியவைக்க முடியாது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கணவர்கள் மௌனமாகி விடுகிறார்கள். பின் செவிடுகளாகி விடுகிறார்கள்.
பெண்களை பேச விடுகிறார்கள். அவள் "என்ன அபத்தத்தை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும். நாம் ஏன் அதைக் கவனிக்க வேண்டும்?" என்ற மனோபாவத்துக்கு வந்துவிடுவார்கள்.
ஆண்கள் ஏன் பெண்டாட்டி தாசர்களாக, ஆமாம்சாமிகளாக இருக்கிறார்கள்? ஏறக்குறைய எல்லா ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் இருக்க முடியும்.
எவ்வளவு நேரம் தான் மனைவியோடு வாதம் செய்ய முடியும் சொல்லுங்கள். மனைவியோடு வாதம் செய்வதில் பயனேயில்லை.
அப்படி வாதம் செய்யும் போது நீங்கள் முட்டாளைப் போல் காட்சியளிப்பீர்கள். மனைவியோடு வாதிடுவதற்குப் பதிலாக சுவரோடு வாதிடலாம்.
நீங்கள் வாதம் செய்வீர்கள். உங்கள் மனைவி பெருங்குரலெடுத்து அழுவாள். உங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாது. நீங்கள் அவளிடம், "அமைதி, அமைதி. நாம் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாமே!" என்று அவளிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் போது, அவள் சாமான்களைத் தூக்கியெறிய ஆரம்பிப்பாள். பாத்திரங்களைப் போட்டு உடைப்பாள். கதவை டமால் என்ற பெருஞ்சத்தத்துடன் சாத்துவாள்.
அவளோடு பேசி என்ன பயன் என்று விரக்தி வந்துவிடும் உங்களுக்கு. அவளோடு எப்படித் தொடர்பு கொள்வது? அவளை எப்படிப் புரிந்து கொள்ளச் செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பீர்கள்.
அவள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வீண் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
அதன் பின் பெண்டாட்டி தாசனாகிவிடுவீர்கள். அவளைப் பொறுத்த மட்டில் உங்கள் வாத-பிரதிவாதங்கள் எல்லாம் கவைக்கு உதவாத குப்பை.
ஆண்கள் அறிவுபூர்வமானவர்கள்.
பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள்.
-ஓஷோ
- அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது. அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது.
- ஒரு தளத்தில் இருந்து மேலே சென்றுவிட்டால் மறுபடியும் கீழே வர முடியாது. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.
அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது. அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில்...
1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.
3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்றுவிட்டால் மறுபடியும் கீழே வர முடியாது. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.
இதுதான் அந்த விதிமுறைகள்....
இதையெல்லாம் படித்து பார்த்துவிட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்.
"கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்...
முதல் தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்".
இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...
இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்"
மேலும் "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...
மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
மற்றும்
"வசீகரமானவர்கள்"
அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்....
நாலாவது தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள்"
இதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...?
கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும்.
அப்படி என்று முடிவு செய்துவிட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...
ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
"வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள்"
மற்றும் "மிகவும் "ரொமாண்டிக்" ஆனவர்கள்"
அவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..
சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..
அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....?
சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்துவிட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்....
ஆறாவது தளம் அறிக்கை பலகையில்,
"இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது.. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம், பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான்"...
"எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!
" கீழே படிகளில் இறங்கவும்".
என்று எழுதியிருந்தது...
- தென்கச்சி சுவாமிநாதன்
- பொற்கிழியோடு திருவில்லிப்புத்தூர் திரும்பிய ஆழ்வார், பொற்கிழியை விற்று பெருமாளுக்கு ஒரு கோயிலைக் கட்டினார்.
- பெருமாளின் கண் திருஷ்டியைப் போக்க பெரியாழ்வார் பாடிய “பல்லாண்டு’’ பாடல் மிக முக்கிய பாடலாக பெருமாள் கோயில்களில் பாடப்படுகிறது.
பெரியாழ்வார் கனவில் ஒருநாள் பெருமாள் தோன்றி உடனடியாக மதுரை சென்று பாண்டியன் சந்தேகத்தை தீர்க்குமாறு அருளினார்.
வல்லபதேவ பாண்டியனுக்கு இருந்த சந்தேகம் "மறுபிறவியில் ஏற்றம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?'' என்பது தான்.
மதுரை அரசவைக்குள் பெரியாழ்வார் நுழைந்தார். பாண்டியனுக்கு இப்படி ஒரு மனிதன் தம் தேசத்தில் இருப்பதே தெரியாது. பெரியாழ்வார் விளக்கம் அளித்தார். மன்னன் சந்தேகம் தீர்ந்தது. அரசன் அறிவித்த பொற்கிழி ஆழ்வாரை நோக்கி வந்தது. பொற்கிழியோடு ஆழ்வார் அரண்மனையை விட்டு வெளியே வந்தார்.
சைவ நகரத்தில் ஆழ்வாருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. யானை மீது ஆழ்வாரை அமர வைத்து மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த கண்கொள்ளாக் காட்சியை கருடன் மேல் அமர்ந்து வந்து பெருமாள் கண்டுகளித்தார். பெருமாளைக் கண்ட ஆழ்வார் அகமகிழ்ந்தார்.
ஆனால் தன்னால் பெருமாள் கண் திருஷ்டிக்கு உண்டானதை உணர்ந்தார். கண் திருஷ்டி போக ஒரு பதிகம் பாடினார். அந்த பதிகம் "பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம்..'' என்பதே.
அந்த பொற்கிழியோடு திருவில்லிப்புத்தூர் திரும்பிய ஆழ்வார், பொற்கிழியை விற்று பெருமாளுக்கு ஒரு கோயிலைக் கட்டினார். அந்த கோயிலே தமிழ் நாட்டின் அடையாளமாக பின்னாளில் மாறியது. தமிழ்நாடு அரசைக் குறிக்கும் லோகோவில் இந்த கோபுரம் தான் இடம்பெற்றுள்ளது.
பெருமாளின் கண் திருஷ்டியைப் போக்க பெரியாழ்வார் பாடிய "பல்லாண்டு'' பாடல் மிக முக்கிய பாடலாக பெருமாள் கோயில்களில் பாடப்படுகிறது. திருப்பதி பெருமாள் கோயில் நடை திறக்கும்போதும் சாத்தும்போதும் "பல்லாண்டு.. பல்லாண்டு'' பாடல் பாடப்படும். திருப்பதி கோயிலின் சக்திக்கு ஆதாரமாக அந்த பதிகம் இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
தமிழின் ஒரு சொல் வெல்லும்... ஒரு சொல் கொல்லும் என்ற கவிஞர் வாலியின் சொற்கள் தான் ஞாபகம் வருகிறது.
- சதீஷ்
- முத்தம் கொடுப்பதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும் என கூறுகிறார்கள்.
- தினமும் மனைவியை முத்தமிடுபவர்கள் நீண்டகாலம் வாழ்ந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது.
உலகம் முழுவதும் நாளை (14-ந்தேதி) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை காதலர் வாரம் கொண்டாடுகிறார்கள். இந்த வாரத்தின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு தினமாக கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் 7-ந்தேதி ரோஜா தினத்தில் தொடங்கும் இந்த வாரம் மறுநாள் ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, பிராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, வாலண்டைஸ்டே என கொண்டாடப்படுகிறது.
அதன்படி காதலர்தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 13-ந்தேதி அன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது. முத்தம் என்பது அன்பை வெளிக்காட்டும் ஒரு வழியாக உள்ளது. முத்தம் கொடுப்பதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும் என கூறுகிறார்கள்.
தினமும் மனைவியை முத்தமிடுபவர்கள் நீண்டகாலம் வாழ்ந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இதேபோல 1980-களில் ஒரு ஆய்வில் வேலைக்கு செல்வதற்கு முன்பு மனைவியை முத்தமிடும் ஆண்கள் குறைவான விபத்தில் சிக்குகிறார்கள் என்றும், அதிக வருமானத்துடன் இருந்ததாகவும் கூறுகிறது.
முத்தமிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்றும், முத்தத்தின் போது உருவாக்கும் கூடுதல் உமிழ்நீர் பல ஆபத்தான பாக்டீரியாக்களை அழித்து இதய துடிப்பை அதிகரிப்பதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
முத்தம் ரத்தத்தில் உள்ள கார்டிசோல் என்ற மனஅழுத்த கார்மோனின் அளவை குறைக்க உதவுகிறது என்றும் நன்மைகளை பட்டியலிடுகிறது.
உதட்டில் முத்தம், கைகளில் முத்தம், நெற்றியில் முத்தம், மூக்கில் முத்தம், கண்களை திறந்து முத்தம், கண்களை மூடிக்கொடுப்பது, கன்னத்தில் முத்தம், கண்களில் முத்தம், கழுத்தில் முத்தம் என முத்தத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.
இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. கைகளில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம். நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தம்.
மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால் நீ மிகவும் அழகாய் இருக்கிறாய். உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தம் என்கிறார்கள். கண்களை திறந்து முத்தம் கொடுக்கும் போது, உங்களது துணை ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். கன்னத்தில் முத்தம் கொடுத்தால் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்றும், கண்களின் மேல் முத்தம் கொடுத்தால் நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்றும், கழுத்தில் முத்தம் கொடுத்தால் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தமாம்.
இதுதவிர பிரஞ்சு முத்தம் என்பது தீவிரமான மற்றும் உணர்ச்சி மிக்க முத்தத்தில் ஒரு வடிவம். இது ஒருவரையொருவர் ஆழமாக காதலிக்கும் நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
- மூச்சுப்பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும்.
- சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.
மூச்சு ஒருநாழிகைக்கு 360 சுவாசம்
ஒருநாளைக்கு 21600 சுவாசம்
மூச்சுப்பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். இதே முறையில் ஒருவனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.
நம்முள் சுவாசம் நடக்கும் அளவு:
அமர்ந்திக்கும்போது 12 அங்குலம்
நடக்கும்போது 16 அங்குலம்
ஓடும்போது 25 அங்குலம்
உறங்கும்போது 36 அங்குலம்
உடலுறவு கொள்ளும்போது 64 அங்குலம்
சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்:
11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.
6 அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்.
4 அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்..
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்.
உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை. அன்ன பானம் நீங்கும்.
எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும் என்பதைப் பற்றி காண்போம்.
ஞாயிறு, செவ்வாய் , சனி - இம்மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.
வெள்ளி, திங்கள் , புதன் - இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.
வியாழக்கிழமை - பூர்வபட்சம் (வளர்பிறை) - சந்திர கலை ஓட வேண்டும்.
அமரபட்சம் (தேய்பிறை) - சூரிய கலை ஓட வேண்டும்.
இம்முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.
சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.
- சிவசங்கர்
- யமுனை நதி ராதைக்கும் கோபியருக்கும் மட்டுமல்ல, காதலின் சின்னமாக போற்றப்படும் மும்தாஜுக்கும் பொருந்தும்.
- 7 உலக அதியசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மஹால் 1983 ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தாஜ்மஹாலை வடிவமைத்துக் கட்டிய ஆர்கிடெக்ட்- உஸ்தாத் அஹமத் லஹூரி. இன்றைய பாகிஸ்தான் பஞ்சாபில் பிறந்த பெர்ஷிய வம்சத்தைச் சேர்ந்த அஹமத் லஹூரி, டெல்லி செங்கோட்டைக்கு அடிக்கல் நாட்டியவர்.
யமுனை நதி ராதைக்கும் கோபியருக்கும் மட்டுமல்ல, காதலின் சின்னமாக போற்றப்படும் மும்தாஜுக்கும் பொருந்தும்.
யமுனையாற்றின் தெற்குக்கரையில் அமைந்த 42 ஏக்கர் பரப்பளவு வளாகத்தில் பிரதான கல்லறை 1632 ல் ஆரம்பித்து 16 ஆண்டுகள் கழித்து 1648 கட்டி முடிக்கப்பட்டது. நுழைவுவாயில், திருச்சுற்று மாளிகை, மேற்கில் உள்ள பள்ளிவாசல் கிழக்கில் உள்ள மாற்று மண்டபம் போன்றவை பின்னர் கட்டப்பட்டு 1653 முற்றுப் பெற்றது.
கட்டுமானப் பணியில் சுமார் 20000 கலைஞர்களும் தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
அந்தக்காலத்தில் கட்டி முடிக்க 320 கோடி செலவாகி இருக்கிறது. தற்போதைய மதிப்பில் சுமார் 7200 கோடி ரூபாயாகும்.
7 உலக அதியசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மஹால் 1983 ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மஹால் கட்டி முடிக்கும்போது இருந்த அதே நிலையில் பராமரிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1996 ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தாஜ்மஹாலைச் சுற்றிய 10400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதி Taj Trapezium Zone என்று அறிவிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அகற்றப்பட்டன.
வருடத்திற்கு சுமார் 60 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
நீல வானத்தின் பின்னணியில் பச்சைப் பசேல் புல்வெளியின் செந்நிற கட்டுமானங்களும் தளங்களுக்கும் நடுவே சூரிய ஒளியிலும் நிலவொளியிலும் ஜொலிக்கும் தூய வெண்மை நிற கல்லறை பார்ப்பவரை உண்மையிலே மயக்கம் கொள்ளத்தான் செய்கிறது.
-ஆனந்தன் சன்னாசி
- இந்தி திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் அத்தனை பேரின் இசையிலும் வாணி ஜெயராம் குரல் ஒலிக்கத்தவறவேயில்லை.
- சாஸ்திரிய சங்கீத கச்சேரிகளுக்காக அடிக்கடி சென்னை வந்துபோக வேண்டியிருந்ததால் 1974ல் சென்னைக்கே இடம் பெயர்ந்தார் வாணி.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கேள்வியின் நாயகனே போன்ற பாடல்கள், அந்தக்காலத்தின் இசைத்தட்டுகளாக சுழன்று சுழன்று ரெக்கார் பிளேயரின் ஊசிகளையே சுலபத்தில் காலி செய்திருக்கும்.
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்காக பூமியிலே கடமைகள் உண்டு
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று
- கவிஞர் கண்ணதாசன் வரிகள் வாணி ஜெயராம் குரலில் நம் காதில் பாயும்போது... மெய்சிலிக்காத தருணங்கள் உண்டா.
இந்திய சினிமாவுக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்களில் டாப் லிஸ்ட்டில் வருவார் வாணி ஜெயராம்.
வங்கி ஊழியராய் வாழ்க்கையை தொடங்கிய அவரின் ஆரம்பம் வெகுசுவாரஸ்யமானது. மார்ச்,1969. மும்பையில் முதன்முறையாக ஒரு இளம்பெண் இசைக்கச்சேரி செய்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு எதேச்சையாக வருகிறார் வசந்த் தேசாய். 1940களிலும் 50களிலும் பட்டையை கிளப்பிய இசைமேதை.
1959ல் கூன்ஜ் உதி ஷெனாய் என்றொரு படம். நம்மூர் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி எப்படி என்.பி.என்.சேதுராமன் சகோதரர்களின் நாதஸ்வர இசையை திரையில் தத்ரூபமாக காட்டி இசைக்கலைஞராக வியக்க வைத்தாரோ அதேபோல் ஷெனாய் வாத்திய கலைஞராக ஜுப்ளி ஸ்டார் ராஜேந்திரகுமார் நடித்திருப்பார். மன்னிக்கவும் வாழ்ந்து காட்டியிருப்பார்.
ஏனெனில் படத்திற்காக ஷெனாய் வாசித்தது புகழ்பெற்ற உஸ்தாத் பிஸ்மில்லா கான். பாரத ரத்னா பட்டியலில் இடம்பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் அப்படியொரு இசைப்பொக்கிஷம் பிஸ்மில்லா கான். இப்படியெல்லாம் பல வரலாறு கொண்ட கூன்ஜ் உதி ஷெனாய் படத்துக்கு இசையமைத்தவர்தான் வசந்த் தேசாய்.
இப்படிப்பட்டவர்தான் அன்றைய இளம்பெண்ணின் கச்சேரியை கேட்க நேரிட்டது. மனுஷன் ஆடிப்போய்விட்டார்.
குரலா இது என்று வியந்து வியந்து, தான் இசையமைத்த Guddi படத்தில் பாட உடனே வாய்ப்பு கொடுத்தார். அதுவும் எப்படி? படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களையும் பாடும் அளவுக்கு.
முதல் படத்திலேயே இப்படி சாதனை படைத்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல, நம்ம இசைமேதை பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள்தான்.
லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே என்ற சகோதரிகள் குரல் வளத்தால் சாம்ராஜ்யம் நடத்திவந்த இந்திய திரையுலகை வாணி ஜெயராமின் குரலும் இணையாக தாலாட்ட ஆரம்பித்தது.
இந்தி திரையுலகில் புகழ்பெற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் அத்தனை பேரின் இசையிலும் வாணி ஜெயராம் குரல் ஒலிக்கத்தவறவேயில்லை.
சாஸ்திரிய சங்கீத கச்சேரிகளுக்காக அடிக்கடி சென்னை வந்துபோக வேண்டியிருந்ததால் 1974ல் சென்னைக்கே இடம் பெயர்ந்தார் வாணி.
இங்கே சுசீலாவும் எஸ்.ஜானகியும் கொடிகட்டிப்பறந்த நேரம். எம்.எஸ்.விஸ்வநாதன் புண்ணியத்தில் தமிழிலும் வாணி வெற்றிக்கொடி ஏற்ற ஆரம்பித்தார்.
மற்றவர்கள் எளிதில் பின்பற்றி பாடமுடியாத அளவுக்கு குரல் வளமும், ஏற்ற இறக்கங்களை காட்டுவதில் அசாத்திய திறமையும் வாய்ப்பது என்பது அபூர்வ ரகம்.
இன்றைக்கும் மேடை கச்சேரிகளில் பாடுபவர்கள், இப்படிப்பட்ட அபூர்வராக குரலை எட்டிப்பிடிக்க கடுமையாக போராடவேண்டி வரும். முகபாவனைகளை எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு மாற்றி மாற்றி மாற்றினால்தான் வாணியின் பாடலை கொஞ்சமாவது தேற்ற முடியும்.
ஹிந்தி, உருது, மராத்தி, குஜராத்தி, ஒரியா, போஜ்புரி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் தமிழ் என நாட்டின் அத்தனை மொழிகளிலும் இசையருவியை பாயவிட்ட அற்புதமான குரலரசி.
- ஏழுமலை வெங்கடேசன்
- மூன்று வயது முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் குடிக்கும் அளவில் இருந்து ஐந்து பங்கு நீர் சேர்த்து கொடுங்க.
- மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஓமம் தண்ணீர் மட்டும் கொடுத்து வாருங்கள்.
உடலில் தேங்கும் கழிவுகளே நோய்களின் ஆரம்பம் ஆகும். உடற்கழிவுகள் மலம், மூத்திரம், வியர்வை, கோழை, சளி, மூலமாக தான் வெளியேறும். வாந்தி, பேதி, மூலமும் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுகிறது. அதனை நிறுத்துவதன் மூலம் உடலில் அடுத்த கட்ட நோய்கள் பிறக்கின்றன. உடற்கழிவுகளை வெளியேற்ற எளிமையான குடிநீரை காண்போம்...
கர்ப்பிணி பெண்கள் முயற்சி செய்ய வேண்டாம்.
தேவையான பொருட்கள்...
திப்பிலி 6
மிளகு 12
சீரகம் மூன்று சிட்டிகை
ஓமம் இரண்டு சிட்டிகை
சோம்பு 1 உப்பு ஸ்பூன் அளவு
இரண்டு சிறிய துண்டு இஞ்சி (தோல் சீவியது)
ஒரு கை புதினா
இவை அனைத்தையும் அரைத்து இதனுடன் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி ஒரு நாள் முழுவதும் தேவைபடும் நீரில் கலந்து வைத்துக் கொண்டு பத்து வயது முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் குடிக்கவும்.
மூன்று வயது முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் குடிக்கும் அளவில் இருந்து ஐந்து பங்கு நீர் சேர்த்து கொடுங்க.
மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஓமம் தண்ணீர் மட்டும் கொடுத்து வாருங்கள். வாரத்திற்கு இரண்டு / மூன்று முறை பயன்படுத்தினால் போதுமானது.
பலன்கள் :- உடலில் உள்ள கழிவுகள் நீங்குவதுடன் சோம்பல், அலுப்பு, மலச்சிக்கல், பசியின்மை, அஜீரணம், சுவாசக் கோளாறுகள், இரத்த ஓட்ட சீர்கேடுகள், தலைவலி குணமாகும். இதில் கூறப்பட்டுள்ள எல்லா பொருட்களுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்...
-முனைவர் பா. ஜெயப்ரசாத்
- கன்னி ராசிக்காரர்கள் ஏலக்காயை தண்ணீரில் கலந்து குளிக்கவும்.
- துலாம் ராசிக்காரர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்துக் குளிக்கவும்.
ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் அவரவர் ராசிப்படி குளியல் செய்து கிரக தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேஷம்- சூரிய உதயத்திற்கு முன் செம்பருத்திப் பூக்களை தண்ணீரில் சேர்த்துக் குளிக்கவும்.
ரிஷபம் - எள்ளை தண்ணீரில் போட்டு குளிக்கவும்.
மிதுனம் -தண்ணீரில் சிறிது கரும்புச்சாறு கலந்து குளிப்பது நல்லது.
கடகம் - பஞ்சகவ்யம் தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.
சிம்மம் - கங்கை நீர் மற்றும் குங்குமம் கலந்து குளிக்கவும்.
கன்னி - ஏலக்காய் தண்ணீர் கலந்து குளிக்கவும்.
துலாம் - ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்துக் குளிக்கவும்.
விருச்சிகம்- சிவப்பு சந்தனத்தை தண்ணீரில் கலந்து சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும்.
தனுசு - தண்ணீரில் மஞ்சள் மற்றும் கடுகு கலந்து குளிக்கவும்.
மகரம் - கருப்பு எள்ளுடன் குளிக்கவும்.
கும்பம் - கருப்பு எள்ளுடன் தண்ணீரில் குளிக்கவும்
மீனம் - தண்ணீரில் மஞ்சள் கலந்து குளிக்கவும்.
-சிவசங்கர்
- செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதனால், மூட்டுவலியை குறைக்க, குணமடைய செய்ய முடியும்.
- செப்புப் பாத்திரங்களில் நீரைப் பருகுவதனால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு காண முடியும்.
நாம் இன்று தண்ணீர் பருக பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள் 100% உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை. முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மையை பாதிக்கும் தன்மை உடையவை.
ஆனால், நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்புப் பாத்திரங்கள் இதற்கு நேர் எதிராக 100% ஆரோக்கிய நன்மைகளை தருபவையாக இருக்கின்றன. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்...
1) பாக்டீரியாக்களைக் கொல்லும்:
செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன. முக்கியமாக வயிறு உபாதைகள் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கப் பயன்படுகிறது செப்புப் பாத்திரங்கள்.
2) தைராய்டு:
தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்த, சீரான முறையில் செயல் இயக்கம் நடைபெற, வெகுவாக உதவுகிறது செப்புப் பாத்திரங்கள். செப்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.
3) மூட்டு வலி:
செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதனால், மூட்டுவலியை குறைக்க, குணமடைய செய்ய முடியும்.
4) மூளையின் செயல்திறன்:
மூளையில் நியூரான்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை மையிலின் என்னும் உறைமூடி பாதுகாக்கிறது. இந்த மையிலின் உறைகளைப் பாதுகாக்க செப்பு உதவுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
5) செரிமானம்:
செப்புப் பாத்திரங்களில் நீரைப் பருகுவதனால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு காண இயலும்.
6) இரத்த சோகை:
சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் பெருமளவில் உற்பத்தி செய்ய செப்பு நீர் பயன்படுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவதனால் இரத்த சோகை கோளாறுக்கு சீரான தீர்வு காண முடியும்.
7) புற்றுநோய்
புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் தவிர்க்க செப்புப் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் நீர் உதவுகிறது. மற்றும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.
8) இளமை காக்கும்:
செப்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் சருமத்தின் முதிர்ச்சி அடையும் தன்மையைக் குறைத்து உங்களை என்றும் இளமையாக வைத்துக்கொள்ள இது பயனளிக்கிறது.






