search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    ஒரு ரோஜா பூ போதும்...
    X

    ஒரு ரோஜா பூ போதும்...

    • ஒரு மணி நேரம் வாய்கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள்.
    • நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள். உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது.

    பெண்களோடு நெருங்கிப் பழகும் எல்லா ஆண்களுக்கும், பெண்கள் வித்தியாசமானவர்கள் என்ற அடிப்படை உண்மை புரிந்திருக்கும்.

    ஒரு பெண்ணோடு தர்க்கரீதியாக விவாதம் செய்ய முடியாது. அதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள். புரிந்து கொள்ள முடியாது.

    அவளது போக்கைப் பார்க்கும் போது, அவள் வேறு கிரகத்தைச் சேர்ந்தவளோ என்று நமக்கு நினைக்கத் தோன்றும்.

    அதே போல் தான் ஒரு பெண்ணின் நிலையும். எப்போது பார்த்தாலும் அறிவின் மூலமாகவே உலகத்தை உணர முயன்று கொண்டிருக்கும் முட்டாள்கள் என்று தான் ஆண்களைப் பற்றி அவர்கள் நினைப்பார்கள்.

    உணர்வு சம்பந்தப்பட்ட எதையும் புரிந்து கொள்ள லாயக்கில்லாதவர்கள் ஆண்கள் என்றுதான் பெண்கள் நினைக்கிறார்கள்.

    ஆண் வாதம் செய்கிறான். தர்க்கரீதியாக உண்மையைப் புரிய வைக்க முயற்சி செய்கிறான். ஆனால் அதை பெண்ணின் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. அது அவளுடைய வழியில்லை. தர்க்கத்திற்கும், பெண்ணிற்கும் சம்பந்தமேயில்லை.

    தன் மனைவியோடு பல மணிநேரம் செய்யும் வாதத்தைவிட, ஒரு சிறிய ரோஜாப்பூ அதிக மதிப்புடையது என்பதைப் பல கணவர்கள் புரிந்து கொள்வதில்லை.

    ஒரு மணி நேரம் வாய்கிழியப் பேசுவதைப் புரிந்து கொள்ளாத ஒரு பெண், கணவன் கொண்டு வந்து தரும் சிறிய ரோஜாப்பூவின் பின்னால் இருக்கும் அவனது அன்பைப் புரிந்து கொள்கிறாள்.

    நீங்கள் ஏன் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நாட்கணக்கில் வாதம் செய்யுங்கள். உங்கள் வார்த்தைகளில் ஒன்று கூட அவள் மண்டையில் ஏறாது.

    ஒரு சிறிய ரோஜா மலரைக் கொண்டு போய், "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று மென்மையாகச் சொல்லுங்கள். அவள் புரிந்து கொள்வாள்.

    பெண் உணர்ச்சிமிக்கவள். உணர்வு பூர்வமானவள். ஓர் ஆணால் ஒரு பெண்ணைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவள் சொல்வது, செய்வது எல்லாமே காரண-காரிய அறிவுக்குப் புறம்பானதாக இருக்கும்.

    கணவன் மனைவியிடம் எதையும் தர்க்க ரீதியில் பேசி புரியவைக்க முடியாது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கணவர்கள் மௌனமாகி விடுகிறார்கள். பின் செவிடுகளாகி விடுகிறார்கள்.

    பெண்களை பேச விடுகிறார்கள். அவள் "என்ன அபத்தத்தை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும். நாம் ஏன் அதைக் கவனிக்க வேண்டும்?" என்ற மனோபாவத்துக்கு வந்துவிடுவார்கள்.

    ஆண்கள் ஏன் பெண்டாட்டி தாசர்களாக, ஆமாம்சாமிகளாக இருக்கிறார்கள்? ஏறக்குறைய எல்லா ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் இருக்க முடியும்.

    எவ்வளவு நேரம் தான் மனைவியோடு வாதம் செய்ய முடியும் சொல்லுங்கள். மனைவியோடு வாதம் செய்வதில் பயனேயில்லை.

    அப்படி வாதம் செய்யும் போது நீங்கள் முட்டாளைப் போல் காட்சியளிப்பீர்கள். மனைவியோடு வாதிடுவதற்குப் பதிலாக சுவரோடு வாதிடலாம்.

    நீங்கள் வாதம் செய்வீர்கள். உங்கள் மனைவி பெருங்குரலெடுத்து அழுவாள். உங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாது. நீங்கள் அவளிடம், "அமைதி, அமைதி. நாம் உட்கார்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாமே!" என்று அவளிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் போது, அவள் சாமான்களைத் தூக்கியெறிய ஆரம்பிப்பாள். பாத்திரங்களைப் போட்டு உடைப்பாள். கதவை டமால் என்ற பெருஞ்சத்தத்துடன் சாத்துவாள்.

    அவளோடு பேசி என்ன பயன் என்று விரக்தி வந்துவிடும் உங்களுக்கு. அவளோடு எப்படித் தொடர்பு கொள்வது? அவளை எப்படிப் புரிந்து கொள்ளச் செய்வது என்று தவித்துக் கொண்டிருப்பீர்கள்.

    அவள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வீண் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிடுவீர்கள்.

    அதன் பின் பெண்டாட்டி தாசனாகிவிடுவீர்கள். அவளைப் பொறுத்த மட்டில் உங்கள் வாத-பிரதிவாதங்கள் எல்லாம் கவைக்கு உதவாத குப்பை.

    ஆண்கள் அறிவுபூர்வமானவர்கள்.

    பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள்.

    -ஓஷோ

    Next Story
    ×