search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?
    X

    திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?

    • அம்பல் > அம்பலம் என்றால் கூடுகிற இடம். அக்காலத்திலே கோயில் தானே மக்கள் கூடுகிற இடம்.
    • இன்றைக்கும் மலையாள மொழியில் கோயிலை ‘அம்பலம்’ என்றே அழைக்கின்றனர்.

    திருச்சிற்றம்பலம் என்பதற்கு பொருள் என்ன?

    சிற்றம்பலம் - என்ற அழகிய தமிழ்ப் பெயரோ தற்காலத்தில் 'சிதம்பரம்' - எனச் சிதைந்து விட்டது!

    சிற்றம்பலம் > சித்தம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்!

    திருச்சிற்றம்பலம் - என அழகுத் தமிழில் அழைக்க வேண்டிய நாம் சிதம்பரம் என்ற புரியாத சொல்லைப் புழங்கிக் கொண்டிருக்கிறோம்.

    அதன் காரணமாக சிதம்பரம் அறிந்த நமக்கு - அதன் பண்டைய பெயரான 'திருச்சிற்றம்பலம்' - தெரியவில்லை!

    அம்பல் > அம்பலம் என்றால் கூடுகிற இடம். அக்காலத்திலே கோயில் தானே மக்கள் கூடுகிற இடம். இன்றைக்கும் மலையாள மொழியில் கோயிலை 'அம்பலம்' என்றே அழைக்கின்றனர். அம்பலம் என்பதற்கு அரங்கம் /அரண்மனை என்ற பொருளும் உண்டு.

    தில்லையில் இருக்கும் ஆடலரசன் கோயில் என்பது மூன்றாம் நூற்றாண்டு காலத்திலிருந்த 'சிறிய அம்பலம்' ஆகும் .

    சிறிய அம்பலம் = சிற்றம்பலம்.

    அதை அந்நாளில் 'சிற்றம்பலம்' என்றே அழைத்தனர். பின்னர் பேரரசுச் சோழர் காலங்களில் அது பேரம்பலம் ஆயிற்று. பொற்கூரை வேயப்பட்டு பொன்னம்பலமும் ஆயிற்று.

    தில்லையும் மதுரையும் தமிழர்கள் வரலாற்றில் பெரும் பங்கு கொண்டவை.

    சோழர்கள் முடி சூடிக்கொண்ட இடம் = பொன்னம்பலம்.

    பாண்டியர்கள் முடி சூடிக் கொண்ட இடம் = வெள்ளம்பலம் (மதுரை வெள்ளியம்பலம்).

    சிற்றம்பலம் - என்ற அழகிய தமிழ்ப் பெயரை சித்தம்பரம் > சிதம்பரம் எனத்திரித்து பின்

    சித் + அம்பரம் என்று பிரித்து "ஞான ஆகாசம்" என்று பொருள் சொல்லி இன்று புது விளக்கங்கள் சொல்லப்படுகிறது.

    -நித்தியானந்தபாரதி

    Next Story
    ×