என் மலர்
செய்திகள்

அதிமுக-பா.ஜனதா கூட்டணி நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்புக்கான கூட்டணி: மத்திய மந்திரி பியூஸ்கோயல் பேட்டி
பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பிற கட்சிகள் இணைந்திருப்பது தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் சேர்ந்த கூட்டணி என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார். #ADMKAlliance #PiyushGoyal
தூத்துக்குடி:
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மற்றும் தமிழக மின் உற்பத்தி- பகிர்மான கழகம் இணைந்து என்.எல்.சி. தமிழ்நாடு மின் நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடியில் 1000 மெகாவாட் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா தூத்துக்குடி துறைமுக பள்ளி மைதானத்தில் இன்று நடந்தது.
அதில் கலந்து கொள்வதற்காக மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ் கோயல் இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
மத்தியில் மோடியும், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்திற்கு நல்ல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பிற கட்சிகள் இணைந்திருப்பது தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் சேர்ந்த கூட்டணி.
இன்று நமது நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக பயங்கரவாதத்தால் நாம் பல சவால்களை சந்தித்து வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் நமக்கு ஒரு வலிமையான தலைவர் தேவைப்படுகிறார். அப்படிப்பட்ட தலைவராக, நாட்டை பாதுகாக்கக்கூடிய தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார்.
தமிழக மக்கள் சரியான முடிவு எடுத்து எங்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். அப்படி வாக்களிக்கும் போது மத்தியில் வலிமையான அரசு அமைவதோடு அனைவருக்கும் எல்லா திட்டங்களும் கிடைக்கின்ற வகையில் நல்லாட்சி அமைய தமிழக மக்கள் உதவி புரிவார்கள்.

காஞ்சிபுரத்தில் வருகிற 6-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசினார்.
பேட்டியின் போது அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜூ, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ் ணன், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று மத்தியிலும், மாநிலத்திலும் வலிமையான அரசாங்கத்தை உருவாக்கும். நமது ராணுவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் காங்கிரஸ் பேசி வருகிறது. இது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவது போல் உள்ளது.

Next Story