என் மலர்
விருதுநகர்
சிவகாசியில் தனியார் மதுபானக்கூடத்திற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதாக கிராம மக்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை யூனியன் செவல்பட்டி ஊராட்சி, அன்னபூரணியாபுரம் கிராமத்தில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் மனமகிழ் மன்றம் திறக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு அன்னபூரணியாபுரத்தில் மதுபானக்கூடம் திறக்கப்பட்டது.
இதனை கண்டித்து மதுபானக்கூடம் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 நாட்களாக போராட்டம் நடைபெற்ற போதும் மதுபானக்கூடம் மூடப்படாதது கிராம மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
மேலும் மாவட்ட குறைதீர்க்கும் நாள் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று மாலை மதுபானக்கூடத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மதுபாட்டில்கள் வைத்திருந்த அலமாரிகள் மீது செங்கல்களை வீசினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், தாசில்தார் தன்ராஜ் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் மதுபானக்கூடத்தை சூறையாடிய பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கையில் மண்எண்ணை கேன் மற்றும் தீப்பெட்டியை வைத்துக் கொண்டு தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தனர். கடையை மூடும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மதுபானக்கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதன் பிறகு மக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் தனியார் மதுபானக்கூடத்திற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன் விசாரணை நடத்தி கிராம மக்கள் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கிய உயர் மின்னழுத்த கம்பியில் ஒருவேளை மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.
விருதுநகர்:
தமிழகத்தில் ரெயில் சேவையை மேம்படுத்தும் வகையில் பெரும்பாலான வழித்தடங்கள் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு வருகின்றன. அதன்படி விருதுநகர்-மானாமதுரை இடையே அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இந்த வழித்தடத்தில் தற்போது உயர் மின்னழுத்த கம்பிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகளுக்கிடையே இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன
அதன்படி சென்னையிலிருந்து காரைக்குடி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இயக்கப்படுகிறது.
நேற்றிரவு 8.25 மணியளவில் சென்னையில் இருந்து கிளம்பிய சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது தொட்டியங்குளம் ரெயில் தண்டவாளத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் சரியாக பொருத்தப்படாமல் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த வழியாக சென்ற சிலம்பு எக்ஸ்பிரஸ் என்ஜினில் உயர் மின்னழுத்த கம்பிகள் சிக்கி பின்னிக் கொண்டது. இதனால் பயங்கர சத்தம் கேட்டதால் ரெயில் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். அவர் கீழே இறங்கி பார்த்தபோது உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து என்ஜினில் சிக்கி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரெயில்வே பணியாளர்கள் என்ஜினில் சிக்கியிருந்த மின்கம்பிகளை அகற்றினர்.
இதனையடுத்து சுமார் 3 மணி நேர தாமதத்திற்கு பின்னர் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.சுமார் 3 மணி நேரம் ரெயில் நடுவழியில் காட்டுப்பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஒரு சில பயணிகள் ஆட்டோ உதவியுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர் மின்னழுத்த கம்பியில் ஒருவேளை மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்த விபத்து காரணமாக விருதுநகரில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலும், அருப்புக்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இரண்டு மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது.
விதிகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:--
விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் கூடுதல் மாவட்ட வருவாய் அதிகாரியால் உரிமம் வழங்கப்பட்ட பட்டாசு ஆலைகள் மற்றும் கூடுதல் வெடிபொருள் கட்டுப் பாட்டு அலுவலரால் உரி மம் வழங்கப்பட்ட பட்டாசு ஆலைகள் அனைத்திலும், அரசு விதிமுறைகளின்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தில் குறிப் பிடப்பட்டுள்ள ஒரு தடவை அளவு மற்றும் ஆண்டளவிற்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்ட பட்டாசு மற்றும் இதர வெடிபொருட்களை மட்டுமே உற்பத்தி செய்யவோ, சேமித்து வைக்கவோ வேண்டும்.
உச்சநீதிமன்றம் தனது 29.10.2021-ந் தேதியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளவாறு பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. வெண்கலம் , பித்தளை , கன்மெட்டல் மற்றும் மரக்கட் டைகளால் செய்யப்பட்ட உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ரசாயன பொருட்கள் உபயோகப்படுத்தப்படும் அனைத்து நேர்வுகளிலும் அரசு சான்றிதழ் பெற்ற போர்மென் முன்னிலையிலேயே பணிகள் நடைபெற வேண்டும். 18 வயதிற்கும் குறைவான பணியாளர்கள் எவரையும் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தக்கூடாது. பட்டாசு தயாரிப்பில் பேரியம் உப்பு பயன்படுத்தப்படக்கூடாது.
இடி-மின்னல் ஏற்படும் நேரங்களில் தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். தொழிற்சாலை கிட்டங்கிகளுக்கு அருகே பட்டாசுகளை சோதனை செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அறைகளுக்கும் கூடுதலாக அறைகள் இருக்கக் கூடாது. மருந்து கலவைகள் கொண்ட கொள்கலன்கள், பேக்கிங் செய்யப்பட்ட பட்டாசு பெட்டிகள் ஆகியவற்றை தரையில் இழுத்துச் செல்லவோ அல்லது தள்ளிச் செல்லவோ கூடாது.
வெடி பொருட்களை தயார் செய்வதற்கான பணிகள் அவற்றிற்கென நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட அறைகளை தவிர்த்து பிற பகுதிகளில் செய்யக்கூடாது.
அனுமதிக்கப்பட்ட அளவுகளை மீறி அணுகுண்டு போன்ற வெடிகளை தயாரித்தல் கூடாது. அறைகளுக்கு இடையே வெளிப்புறங்களில் பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் கூடாது. தொழிற்சாலையின் உற்பத்தி அறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது. தொழிற்சாலையினை குத்தகைக்கு விடக்கூடாது அல்லது குத்தகை பணி யாளர்களை பணியில் அமர்த்துதல் கூடாது.
சிறுகற்களை கொண்ட வெங்காய வெடி போன்றவை தயாரித்தல் கூடாது. மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகளை ஆய்வு செய்ய அமைக் கப்பட்டுள்ள ஆய்வுக் குழுக்களின் ஆய்வின்போது ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய பட்டாசு தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட உரிமம் எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவகாசி கல்லூரியில் தேசிய மாணவர் படை 7 நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
சிவகாசி
தேசிய மாணவர் படை யின் வருடாந்திர பயிற்சி முகாம் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் தொடங்கி 7 நாட்கள் நடை பெறுகிறது.
பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த சுமார் 203 மாணவ-மாணவியர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமிற்கு பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி தாளாளர் சோலைசாமி லெப்டினன்ட் கர்னல் சுனில் உத்தம் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் மற்றும் டீன் மாரிச்சாமி ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்தனர்.
முகாமில் அடிப்படை உடற்பயிற்சி, ஆயுதங்கள் கையாளுதல் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் மேப் ரீடிங், டிரில் போன்ற பயிற்சிகளை லெப்டினன்ட் கர்னல் சுனில் உத்தம் வழங்கினார்.
மேலும் தேசிய ஒருமைப்பாடு, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய சிறப்பு வகுப்புகளும் நடைபெறுகிறது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பாக தங்கும் வசதி மற்றும் உணவு வசதி செய்து தரப்பட்டது. பயிற்சியின் முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடு களை கல்லூரி நிர்வாகம், கல்லூரியின் தேசிய மாணவர் படையின் இணை என்.சி.சி. அதிகாரி மாதவன் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு முன்பு திரண்ட முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:
கர்நாடகாவில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜேந்திர பாலாஜியை விருதுநகருக்கு போலீசார் அழைத்துவரும் தகவல் அறிந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தலைமையில் இரவில் திரண்டனர்.
அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 57 பேரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு முன்பு முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்ளிட்ட 25 பேர் திரண்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கோர்ட்டு முன்பு திரண்ட முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்பட 25 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜேந்திர பாலாஜியை விருதுநகருக்கு போலீசார் அழைத்துவரும் தகவல் அறிந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தலைமையில் இரவில் திரண்டனர்.
அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 57 பேரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு முன்பு முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்ளிட்ட 25 பேர் திரண்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கோர்ட்டு முன்பு திரண்ட முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உள்பட 25 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் பட்டாசு ஆலையில் 6 அறைகளில் சிறிய ரக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு ஒரு அறை தரைமட்டமானது.
இந்த வெடி விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிற்சாலை உரிமையாளர் கருப்பசாமி, செந்தில்குமார், அய்யம்மாள், காசி ஆகிய நான்கு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த முனியசாமி என்பவரும் உயிரிழந்தார்.
இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதரம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் நகர் பகுதியில் நேற்று நேதாஜி ரோடு, பஸ் நிலையம் அருகே முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நகராட்சி ஆணையாளர் மல்லிகா அறிவுறுத்தல் படி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் முகம் அணியாத மக்களிடம் அபராதம் விதித்தனர்.
எனவே பொதுமக்களும் உஷாராக இருக்க வேண்டும், கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் சிவகாசி, சாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஆலைகள் உள்ளன.
நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட வருவாய் துறை அனுமதி பெற்று பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை தவிர அனுமதி இன்றியும் சிலர் பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர். இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும், உயிர்ப்பலி நிகழ்வதும் நடந்து வருகிறது. அனுமதி பெற்ற ஆலைகளிலும் விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-
சிவகாசி-சாத்தூர் இடையே உள்ள விஜயகரிசல் குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40). இவர் ஏழாயிரம்பண்ணை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மஞ்சள்ஓடைப்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை பணியாளர்கள் வேலைக்கு வந்தனர். அவர்களோடு கருப்பசாமியும் மருந்து கலவை அறைக்கு சென்று பணியை தொடங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டது.
விபத்தின் காரணமாக மருந்து கலவைகள் வைக்கப்பட்டிருந்த அறை தரைமட்டமானது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். மேலும் வெடி விபத்து ஏற்பட்டதும் பக்கத்து அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி, கொம்மங்கிபுரம் காசி (40), சாத்தூர் காமாட்சிபுரம் செந்தில் (33) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கொம்மங்கிபுரம் ஜெகநாதன் மனைவி சரஸ்வதி, சீனிவாசன் மனைவி அய்யம்மாள் (47), பெருமாள் (48), மஞ்சள்ஓடைப்பட்டி முனியசாமி (26) ஆகியோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், ஏழாயிரம்பண்ணை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் மற்றும் வருவாய் துறையினரும் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் சிவகாசி, சாத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஆலைகள் உள்ளன.
நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட வருவாய் துறை அனுமதி பெற்று பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை தவிர அனுமதி இன்றியும் சிலர் பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர். இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும், உயிர்ப்பலி நிகழ்வதும் நடந்து வருகிறது. அனுமதி பெற்ற ஆலைகளிலும் விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-
சிவகாசி-சாத்தூர் இடையே உள்ள விஜயகரிசல் குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40). இவர் ஏழாயிரம்பண்ணை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மஞ்சள்ஓடைப்பட்டியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று காலை பணியாளர்கள் வேலைக்கு வந்தனர். அவர்களோடு கருப்பசாமியும் மருந்து கலவை அறைக்கு சென்று பணியை தொடங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டது.
விபத்தின் காரணமாக மருந்து கலவைகள் வைக்கப்பட்டிருந்த அறை தரைமட்டமானது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். மேலும் வெடி விபத்து ஏற்பட்டதும் பக்கத்து அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கிடந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி, கொம்மங்கிபுரம் காசி (40), சாத்தூர் காமாட்சிபுரம் செந்தில் (33) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கொம்மங்கிபுரம் ஜெகநாதன் மனைவி சரஸ்வதி, சீனிவாசன் மனைவி அய்யம்மாள் (47), பெருமாள் (48), மஞ்சள்ஓடைப்பட்டி முனியசாமி (26) ஆகியோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், ஏழாயிரம்பண்ணை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் மற்றும் வருவாய் துறையினரும் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கடந்த 1-ந்தேதி சிவகாசி அருகே உள்ள களத்தூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியான நிலையில், தற்போது மற்றொரு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே விபத்தில் பட்டாசு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னாண்டி(வயது 66). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் சின்னாண்டி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போது அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் ரிசர்வ்லைன் இந்திராநகரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது 66). இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக இவர் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டின் பின்புறம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்திய சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்கு வரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் தர்மராஜ்.
இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. அதனை நிறுத்தும்படி சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் சைகை காட்டினார். ஆனால் மோட்டார் சைக்கிள் நிற்காமல் செல்ல முயன்றது.
இருப்பினும் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்தனர்.விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேஷ் (வயது 26) என தெரியவந்தது.
விதிகளை மீறி வேகமாக வந்ததாக அவர் மீது சப்-இன்ஸ் பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கத்தியை காட்டி சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் கத்தியால் குத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ் பெக்டர் தர்மராஜ் புகார் செய்தார். அதன்பேரில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொல்ல முயற்சி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேசை கைது செய்தனர்.
வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை அதிபரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட களத்தூர் நாகலாபுரம் கிராமத்தில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது-.
இந்த விபத்தில் ஆலையில் உள்ள 7 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அங்கு பணி செய்து கொண்டிருந்த குமார், பெரியசாமி, வீரக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். முருகேசன் என்பவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இந்த விபத்தில் காயம் அடைந்த 8 பேர் சிவகாசி, மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்மாயன் புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டாசு ஆலை அதிபர் சிவகாசி தாலுகா புதுப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த வழிவிடுமுருகன் (வயது 42). தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர் மீது வெடி பொருட் களை அஜாக்கிரதையாக கையாளுதல் (286), மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுவது (337), இறப்பு ஏற்படுத்துதல் 304 ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் வழிவிடுமுருகனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தர விட்டுள்ளார். அதன்பேரில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் வழிவிடுமுருகனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.






