search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய மாணவர் படை
    X
    தேசிய மாணவர் படை

    சிவகாசி கல்லூரியில் தேசிய மாணவர் படை முகாம்

    சிவகாசி கல்லூரியில் தேசிய மாணவர் படை 7 நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
    சிவகாசி

    தேசிய மாணவர் படை யின் வருடாந்திர பயிற்சி முகாம் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் தொடங்கி 7 நாட்கள் நடை பெறுகிறது.

    பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த சுமார் 203 மாணவ-மாணவியர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

    பயிற்சி முகாமிற்கு பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி தாளாளர் சோலைசாமி  லெப்டினன்ட் கர்னல் சுனில் உத்தம் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் மற்றும் டீன் மாரிச்சாமி ஆகியோர் முகாமினை  தொடங்கி வைத்தனர்.

    முகாமில் அடிப்படை உடற்பயிற்சி, ஆயுதங்கள் கையாளுதல் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் மேப் ரீடிங், டிரில் போன்ற பயிற்சிகளை லெப்டினன்ட் கர்னல் சுனில் உத்தம் வழங்கினார்.

    மேலும் தேசிய ஒருமைப்பாடு, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய சிறப்பு வகுப்புகளும் நடைபெறுகிறது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பாக தங்கும் வசதி மற்றும் உணவு வசதி செய்து தரப்பட்டது. பயிற்சியின் முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    முகாமிற்கான ஏற்பாடு களை கல்லூரி நிர்வாகம், கல்லூரியின் தேசிய மாணவர் படையின்  இணை என்.சி.சி. அதிகாரி மாதவன் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
    Next Story
    ×