என் மலர்
வேலூர்
- ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைகிறது
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், சீவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் த.அகோரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அஜீஸ், ஒன்றிய திமுக பொருளாளர் லிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
மணிப்பூரில் தொடரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெறும் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதன்படி வேலூர் கோர்ட்டில் வக்கீல்கள் இன்று முதல் வரும் 3 நாட்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுமதி கபிலன், கிரிமினல் பார் அசோசியேஷன் தலைவர் ரவிராமன், சிவில் பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தலைமை தாங்கினார்.
கிரிமினல் ஆர் அசோசியேசன் செயலாளர் பாஸ்கரன், வக்கீல்கள் பாலமுருகன், பாலு, தாமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கவிதா, ஜமுனா, சத்யா, நித்தியா, கவுதமி, பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 2-வது திருமணம், மிரட்டல், பெண்ணுடன் ஓட்டம்
- வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு
வேலூர்:
வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
அப்போது வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை சேர்ந்த ஹபீபா (வயது 19) என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கும் உமர் பாரூக் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
எனது கணவர் பேரணாம்பட்டில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். திருமணத்தின் போது எனது பெற்றோர் நகை பணம் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.
ஆனால் மேலும் ரூ 5 லட்சம் வரதட்சனை வாங்கி வர வேண்டும் என துன்புறுத்துகிறார். குழந்தை இல்லாததை காரணம் காட்டி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதேபோல் பேர்ணாம்பட்டை, அடுத்த தலக்காடு மாங்காய் தோப்பு பகுதியை சேர்ந்த துபேலா பர்வீன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் அஸ்லாம் பாஷா பேரணாம்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். எங்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் மகன் உள்ளார்.
வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு என்னை வீட்டில் இருந்து துரத்தி விட்டார். தட்டி கேட்டால் ஆட்களை வைத்து மகனை கடத்தி சென்று விடுவதாக மிரட்டல் இருக்கிறார். எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.
கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பத்தை சேர்ந்த மோகனா (வயது 24) என்பவர் கொடுத்த மனுவில் என்னுடைய கணவர் கார்த்திக் எங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். எனது கணவர் கம்பி வேலை செய்து வருகிறார்.
கடந்த 14 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற கணவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார்.
இதனால் நானும் எனது குழந்தைகளும் வாழ வழி இன்றி தவித்து வருகிறோம். கணவரை மீட்டு தர வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.
3 பெண்கள் கணவர்கள் மீது புகார் அளித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- முகாம்கள் 24-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது
- கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
வேலூர்:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செம்மையாக நடைமுறைபடுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம், விண்ணப்பங்களை கைபேசி செயலியின் மூலம் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகள், விண்ணப்ப பதிவு முகாம்கள் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3,02,447 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் ரேசன் கடைகள் மூலமாக 20.07.2023 முதல் 23.07.2023 வரை இல்லங்களுக்கு சென்று நேரடியாக வழங்கப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று செயலியில் பதிவேற்றும் செய்யும் 397 முதற்கட்ட முகாம்கள் 24-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 24-ந் தேதி அன்று நடைபெற்ற முதல் நாள் முகாமில் வேலூர் வட்டத்தில் 6,716, காட்பாடி வட்டத்தில் 3675, அணைக்கட்டு வட்டத்தில் 3243, குடியாத்தம் வட்டத்தில் 3307, கீ.வ.குப்பம் வட்டத்தில் 3568, பேரணாம்பட்டு வட்டத்தில்3347 என மொத்தம் 23,856 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
வேலூர் வட்டத்திற்கு உட்பட்ட தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, அரியூர் அரசு தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் முகாம்களை கலெக்டர்பெ.குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- போலீசார் பேச்சுவார்த்தை
- போக்குவரத்து பாதிப்பு
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை 25-வது வார்டுக்கு உட்பட்ட விநாயகர் நகர் பகுதியில் 2 மற்றும் 3-வது தெருக்கள் உள்ளன.இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மாநகராட்சி சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குறைந்த நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட தாகவும், கூடுதல் நேரம் குடி நீர் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை குறைந்தநேரமே குடிநீர் வினியோகம் செய்யப்பட் டுள்ளது. அதனால் அதிருப்தி அடைந்த விநாயகர்நகர் பொதுமக்கள் காலி குடங்களுடன் பழைய முன்சீப் கோர்ட்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள், வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப் போது பொதுமக்கள், 15 நாட் களுக்கு ஒருமுறை வழங்கப் படும் குடிநீர் அத்தியாவசிய தேவைக்கு போதுமானதாக இல்லை. இதனால் நாங்கள் கடைகளில் பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத் தும் நிலை உள்ளது.
எங்களுக்கு கூடுதல் நேரம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு மாநக ராட்சி அலுவலர்கள், நாளை (இன்று) காலை முதல் கூடுதல் நேரம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கிலோ ரூ.130-க்கு விற்பனை
- பொதுமக்கள் அதிர்ச்சி
வேலூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர், மதனப்பள்ளி, புங்கனூர் மற்றும் கர்நாடகாவில் இருந்து வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் தக்காளி வருவது வழக்கம்.
கடந்த சில மாதங்களாக ஆந்திரா கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் வேலூர் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து பாதியாக குறைந்தது.
இதனால் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி விலை மளமளவென 100 ரூபாயை எட்டியது.
மேலும் கத்திரிக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்தது.
நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் காய்கறிகளின் விலைகளை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு சிலர் காய்கறிகளின் விலை உயர்ந்து உள்ளதால் காய்கறிகளை வாங்காமல் திரும்பிச் சென்றனர்.
கடந்த சில நாட்களாக கிலோ ரூ.90 முதல் 100 வர விற்பனையானது. இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் நேற்று ரூ.100-க்கு விற்கப்பட்ட நடுத்தர வகை தக்காளி இன்று காலை 130 ரூபாய்க்கும், ரூ 80-க்கு விற்கப்பட்ட சிறிய வகை தக்காளி ரூ 100-க்கு விற்கப்படுகிறது.
தக்காளி விலை மீண்டும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- அகரம் ஆற்றில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
- தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் கருங்காலி ஊராட்சி, அகரம் ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியுடைய டிரைவர் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர் என்பவரை தேடி வருகின்றனர்.
- சோதனை தீவிரபடுத்த டி.ஐ.ஜி. உத்தரவு
- ஆந்திர எல்லையோர சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி நிலையத்தில் நேற்று மாலை வேலூர் சரக டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பரதராமி அடுத்த கன்னிகாபுரம் அருகே தமிழக ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக காவல்துறையின் சோதனை சாவடியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் பரதராமி சோதனை சாவடி முக்கியமானது. இரவு நேரங்களில் கூடுதலாக வெளிச்சம் தேவைப்படுவதால் இங்கு உடனடியாக உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சோதனை சாவடியில் இரவில் மிளிரும் வகையிலான நவீன பேரிகார்டுகள் அமைக்கப்படும்.
வெளி மாநிலங்களில் வரும் வாகனங்களை கனரக வாகனங்கள், பஸ்கள், லாரிகள், கார்கள் என தனித்தனியாக அதன் பதிவு எண்களை பதிவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து தினம் தோறும் வரும் வாகனங்கள் பதிவு எண்களை தனியாக குறிப்பிட்டு அதில் சந்தேகப்படுமான பொருட்கள் இருந்தாலும் சந்தேகம் இருந்தாலும் உடனடியாக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் சோதனை சாவடியில் உள்ள போலீசார் விழிப்பு டன் இருக்க வேண்டும் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் போதைப் பொருட்க ளான கஞ்சா குட்கா உள்ளிட்டவை கடத்தி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஒரு சப் இன்ஸ்பெக்டர் 4 போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உறவினர்கள் கடும் வாக்குவாதம்
- அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் இல்லை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட போதிய டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லை. மேலும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
இந்நிலையில் நேற்று சிகிச்சைக்காக வந்த நோயாளிகளை டாக்டர்கள் நிற்கவைத்து வைத்தியம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் ஆவேசமடைந்து உட்கார வைத்து வைத்தியம் பார்க்காமல் நிற்க வைத்தே வைத்தியம் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கேட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்
- ஒடுகத்தூர் கால்நடை ஆஸ்பத்திரியில் பரபரப்பு
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 13). இவர் சண்டை சேவல் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த சேவலுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், ஒடுகத்தூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு சென்றதும் சேவல் திடீரென ஆஸ்பத்திரி பின் புறம் உள்ள புதருக்குள் பறந்து சென்றது.
புதருக்குள் சென்ற சேவலை தேடி சந்துரு சென்றார். அப்போது அங்கிருந்த மலைப்பாம்பு சேவலை விழுங்கி கொண்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்துரு என் சேவல் போச்சி, என் சேவல் போச்சி என அழுதுகொண்டே புதருக்குள் இருந்து வெளியே வந்தான்.
டாக்டர்கள் சிறுவனை விசாரித்தபோது, மலைப்பாம்பு சேவலை விழுங்கியதை கூறினர். இதைதொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த ஒடுகத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் தலைமையிலான படை வீரர்கள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
- திருச்சியில் விவசாய கண்காட்சி நடைபெறுவதால் தேதி மாற்றம்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறஉள்ளது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
மேலும் கடந்த மாதம் விவசாயிகளிடம் இருந்துபெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். இந்த தகவலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக வெள்ளிக்கிழமை தான் குறைதீர்வுகூட் டம் நடைபெறும். இந்தமாதம் வருகிற வெள்ளிக்கிழமை திருச்சியில் விவசாய கண் காட்சி நடைபெறுவதால் அங்கு விவசாயிகள் செல்ல உள்ளதால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கண்ணில் பலத்த காயம்
- போலீசார் விசாரணை
காட்பாடி:
காட்பாடி செங்குட்டை பகுதியில் கடந்த 21-ந் தேதி ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கூழ்வார்க்கும் திருவிழாவும், இரவு பாட்டுக் கச்சேரியும் நடந்தது. அப்போது அதே பகு தியை சேர்ந்தமோகன், மணி இருவரும் நடனம் ஆடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கும், அதே பகுதியை கார்த்திக் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன், மணி ஆகிய இருவரும் சேர்ந்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவரது வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு சிகிச் சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். மோகனை தேடி வருகின்றனர்.






