search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணித்து போராட்டம்
    X

    கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    வேலூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணித்து போராட்டம்

    • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    மணிப்பூரில் தொடரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெறும் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    அதன்படி வேலூர் கோர்ட்டில் வக்கீல்கள் இன்று முதல் வரும் 3 நாட்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோர்ட்டு வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுமதி கபிலன், கிரிமினல் பார் அசோசியேஷன் தலைவர் ரவிராமன், சிவில் பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தலைமை தாங்கினார்.

    கிரிமினல் ஆர் அசோசியேசன் செயலாளர் பாஸ்கரன், வக்கீல்கள் பாலமுருகன், பாலு, தாமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுக்க கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கவிதா, ஜமுனா, சத்யா, நித்தியா, கவுதமி, பிருந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×