என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் சீவூர் நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள்
- ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைகிறது
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், சீவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் த.அகோரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அஜீஸ், ஒன்றிய திமுக பொருளாளர் லிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






