என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியூர் அரசு தொடக்க பள்ளியில் மகளிர் உதவித் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் விண்ணப்ப பதிவு நடைபெறுவதை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் ரூ.1000 பெற ஒரே நாளில் 23,856 பெண்கள் பதிவு
- முகாம்கள் 24-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது
- கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
வேலூர்:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செம்மையாக நடைமுறைபடுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம், விண்ணப்பங்களை கைபேசி செயலியின் மூலம் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகள், விண்ணப்ப பதிவு முகாம்கள் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3,02,447 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் ரேசன் கடைகள் மூலமாக 20.07.2023 முதல் 23.07.2023 வரை இல்லங்களுக்கு சென்று நேரடியாக வழங்கப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று செயலியில் பதிவேற்றும் செய்யும் 397 முதற்கட்ட முகாம்கள் 24-ந் தேதி முதல் தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 24-ந் தேதி அன்று நடைபெற்ற முதல் நாள் முகாமில் வேலூர் வட்டத்தில் 6,716, காட்பாடி வட்டத்தில் 3675, அணைக்கட்டு வட்டத்தில் 3243, குடியாத்தம் வட்டத்தில் 3307, கீ.வ.குப்பம் வட்டத்தில் 3568, பேரணாம்பட்டு வட்டத்தில்3347 என மொத்தம் 23,856 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
வேலூர் வட்டத்திற்கு உட்பட்ட தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, அரியூர் அரசு தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நடைப்பெற்று வரும் முகாம்களை கலெக்டர்பெ.குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.






