என் மலர்
நீங்கள் தேடியது "Run with the girl"
- 2-வது திருமணம், மிரட்டல், பெண்ணுடன் ஓட்டம்
- வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு
வேலூர்:
வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
அப்போது வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை சேர்ந்த ஹபீபா (வயது 19) என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கும் உமர் பாரூக் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
எனது கணவர் பேரணாம்பட்டில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். திருமணத்தின் போது எனது பெற்றோர் நகை பணம் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.
ஆனால் மேலும் ரூ 5 லட்சம் வரதட்சனை வாங்கி வர வேண்டும் என துன்புறுத்துகிறார். குழந்தை இல்லாததை காரணம் காட்டி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதேபோல் பேர்ணாம்பட்டை, அடுத்த தலக்காடு மாங்காய் தோப்பு பகுதியை சேர்ந்த துபேலா பர்வீன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் அஸ்லாம் பாஷா பேரணாம்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். எங்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் மகன் உள்ளார்.
வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு என்னை வீட்டில் இருந்து துரத்தி விட்டார். தட்டி கேட்டால் ஆட்களை வைத்து மகனை கடத்தி சென்று விடுவதாக மிரட்டல் இருக்கிறார். எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.
கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பத்தை சேர்ந்த மோகனா (வயது 24) என்பவர் கொடுத்த மனுவில் என்னுடைய கணவர் கார்த்திக் எங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். எனது கணவர் கம்பி வேலை செய்து வருகிறார்.
கடந்த 14 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற கணவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார்.
இதனால் நானும் எனது குழந்தைகளும் வாழ வழி இன்றி தவித்து வருகிறோம். கணவரை மீட்டு தர வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.
3 பெண்கள் கணவர்கள் மீது புகார் அளித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






