என் மலர்tooltip icon

    வேலூர்

    • அதிகாரி தகவல்
    • விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 31 பள்ளிகளைச் சேர்ந்த 6,418 மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம் கோட்டம்) வேலூர் மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்துக் கழகத்தின் வேலூர் மண்டலத்தின் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 620 அரசு, தனியார் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ. ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

    இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் 2-ம் கட்டமாக 31 பள்ளிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட 6,418 பஸ் பாஸ் பெறப்பட்டு, சம்ப ந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கி, மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • வழக்கு தொடுத்து எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது

    வேலூர்:

    காட்பாடி அடுத்த வீரபத்திரபுரம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தை சேர்ந்த 42 பேரின் வீட்டுமனை பட்டா ஜாப்ரா பேட்டையில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு தற்காலிக பட்டா வழங்கிய நபர் தற்போது அந்த இடத்தை கொடுக்க மறுக்கிறார்.

    இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது.

    எனவே எங்களுக்கு சொந்தமான வீட்டுமனை பட்டாவை அளந்து கொடுக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தனர்.

    • புதர் மண்டி பராமரிப்பின்றி கட்டி டங்கள் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது
    • வணிக வளாகம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும்

    வேலூர்:

    கண்ணமங்கலம் கூட்ரோட்டில், கீழ்ப்பள்ளி ப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணமங்கலம் காவல் நிலையம் எதிரே உள்ள அரசு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் இடத்தில் பயணிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது.

    தற்போது புதர் மண்டி பராமரிப்பின்றி கட்டி டங்கள் பழுதடைந்து பயனற்று கிடக்கிறது.

    வேலூர், திருவண்ணா மலை மாவட்டத்தை இணைக்கும் சாலையாக உள்ள, இந்த கண்ணமங்கலம் கூட்ரோட்டில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    3 வழிதடங்களை இனைக்கும் இந்த இடத்தில் பயணிகளின் நலன் கருதி, பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, புதிதாக பயணிகள் தங்கும் விடுதி கட்டிடம் கட்ட வேண்டு மென பொதுமக்கள் கலெக்டர் மற்றும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஆகியோரிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன்படி பழுதடைந்த பயணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கலெக்டர் கூறுகையில்:-

    பழுதடைந்த கட்டிடங்களை சீரமைப்ப தோடு, வணிக வளாகம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    ஆய்வின்போது ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், மாவட்ட கவுன்சிலர் தேவி சிவா, ஊராட்சி மன்ற தலை வர்கள் சிவகுமார், விஜய பாஸ்கர், கண்ண மங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், தாசில்தார் செந்தில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • முதல் - அமைச்சர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்
    • பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது

    வேலூர்:

    வேலூர் பள்ளி கொண்டா சுங்க சாவடி அருகே வருகிற 17-ந்தேதி தி.மு.க. 75-வது ஆண்டு பவளவிழாவுடன் கூடிய முப்பெரும் விழா பிரமாண்டமாக நடக்கிறது.

    இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் கலந்து கொள்கின்றனர். முதல் - அமைச்சர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் பந்தக்கால் நட்டு ேமடை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது.

    இதில் அணைக்கட்டு மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், அணை க்கட்டு ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், அணைக்கட்டு மத்திய ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஹரிபிரசாத் உட்பட பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் ஊராட்சி, புதூர் கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதனை முன்னிட்டு நேற்று காலை கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    மேலும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகளான கோலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழை ப்பாளராக அணைக்கட்டு ஏம்.எல்.ஏ நந்தகுமார் கலந்துக்கொண்டு சிலம்பம் ஆடியும், கோவிலில் அருகே கட்டப்பட்டிருந்த உறி அடித்தும் விளையாடினார்.

    பின்னர் கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவத்தை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.

    இதனை தொடர்ந்து நடந்த சாமி திருவீதி உலாவில் புதூர், சோழவரம், பாப்பாந்தோப்பு, காட்டுப்புத்தூர், பென்னாத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்ப்பட்ட கிரா மத்தினர் கலந்துக்கொண்டு கிருஷ்ண ஜெயந்தி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    விழாவில் கணியம்பாடி ஒன்றியகுழு துணை தலைவர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாகோபி, பென்னாத்தூர் பேரூராட்சி செயலாளர் அருள்நாதன், பேரூராட்சி தலைவர் பவானிசசிகுமார், பேரூராட்சி துணை தலைவர் ஜீவசத்தியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதனம்
    • வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர், தொரப்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆகிய இருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த தகவலில் `ஆன்லைனில்' பகுதி நேர வேலையில் பங்கேற்று அதிகம் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளனர்.

    ஆர்வம் உள்ளவர்கள் அவர்கள் அனுப்பிய இணைப்பில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி இருந்தனர்.

    அதனை உண்மை என நம்பிய 2 பேரும் தங்களது முழு விவரத்தையும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

    மேலும் அவர்களுக்காக தனி கணக்கு தொடங்கி அதில் முதலீடு செய்து அவர்கள் அளித்த வேலையை செய்து முடித்துள்ளனர்.

    அவர்கள் கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்ததால் அவர்கள் முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகையும் சேர்ந்துள்ளது.

    அதன்படி சேவூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழிய தனது வங்கி கணக்கிலிருந்து கடந்த மாதம் மொத்தம் ரூ.13.64 லட்சமும், தனியார் பள்ளி ஆசிரியரும் தனது வங்கி கணக்கில் இருந்து கடந்த 30, 31- ந் தேதிகளில் ரூ.6.15 லட்சமும் அனுப்பியுள்ளனர்.

    அவர்கள் கூறியபடி முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகை கிடைத்ததும் அதை தங்களது வங்கி கணக்கு இருவரும் மாற்ற முயன்றனர்.

    ஆனால் அந்தப் பணத்தை மாற்ற முடியாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் இருவரும் வேலூர் மாவட்ட சைர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விநாயகர் சிலை மற்றும் பொம்மைகளை மர்ம கும்பல் திருடிச்சென்றனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்மடுகு கிராமம் அண்ணாதெருவை சேர்ந்தவர் சந்தியா (வயது 30). இவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதனை தொடர்ந்து சந்தியா தனது 2 பிள்ளை களுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவின் தாயார் இறந்து விட்டார்.

    இதனால் தினமும் மாலையில் வீட்டை பூட்டிக் கொண்டு அதே கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று தந்தை வெங்கடேசனுக்கு சமையல் செய்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பெற்றோர் வீட் டிற்கு சென்றுவிட்டு, நேற்று காலை வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட் டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.

    அதில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், எல்.இ.டி. டி.வி., மீன் தொட்டி, பூஜை அறையில் இருந்த விநாயகர் சிலை மற்றும் பொம்மைகளை மர்ம கும்பல் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து சந்தியா குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்
    • அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்

    அணைக்கட்டு:

    வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள சாத்துமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர், மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். அப்போது கலெக்டர் மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவு திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் கண்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    இதில் ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சு மிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மாணவர்கள் தலைமுடியை சரியாக வெட்டி வர வேண்டும்
    • கலெக்டர் பேச்சு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை தாங்கினார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபிநாதன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதற்கு மாண வர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஈடுபாடுடன் செயல்பட்டு இந்த பள்ளி மாநில அளவில் மிளிரும் பள்ளியாக உயர்த்த வேண்டும்.

    மாணவர்கள் ஒழுக்கத்து டன் இருக்க வேண்டும். தலைமுடியை சரியாக வெட்டிகொண்டு வர வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். மாணவர்கள் இவ்வாறு ஒழுக்கமாக இருந்தால் தான் பள்ளி உயரும், நீங்களும் உயருவீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். இதற்கு முன்னதாக மாணவர்கள் பள்ளி தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி ரவி, ஜோதிலட்சுமி ராஜ்குமார், சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றது
    • 10-க்கும் மேற்ப்பட்ட கிராமத்தினர் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த எடைத்தெரு கிராமத்தில் 72-ம் ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலா கலமாக கொண்டாட ப்பட்டது.

    இதனை முன்னிட்டு நேற்று காலை கிருஷ்ணருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    மேலும் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு களான கோலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, சிலம்பாட்டம் போன்றவை நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழை ப்பாளராக அணைக்கட்டு ஏம்.எல்.ஏ நந்தகுமார் கலந்துக்கொண்டு சிலம்பம் ஆடியும், கோவிலில் அருகே கட்டப்பட்டிருந்த உறி அடித்தும் விளையாடினார்.

    பின்னர் வழுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.

    விழாவில் மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வேணுகோபால், தனஞ்செயன், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை ெதாடர்ந்து போடிப்பேட்டை எல்லப்பன்பட்டி, அகரம் , அகரராஜாபாளையம், மகமதுபுரம், கரடிகுடி உள்ளிட்ட 10-க்கும் மேற்ப்பட்ட கிராமத்தினர் கலந்துக்கொண்டு கிருஷ்ண ஜெயந்தி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    • ஒடுகத்தூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது
    • போக்குவரத்து பாதிப்பு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    மரக்கிளை முறிந்து விழுந்தது

    அப்போது, சிவன் கோவில் அருகே இருந்த புளியமரக்கிளை முறிந்து அங்கு சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில், மின் கம்பம் இரண்டாக உடைந்து அந்தரத்தில் தொங்கியது. அப்போது, மின்சாரம் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

    இதையடுத்து, நகர செயலாளர் பெருமாள்ராஜா, வார்டு கவுன்சிலர்கள் ஜெயந்தி வெங்கடேசன், புனிதா சவுரிராஜன், கீர்த்தனா வாசு, வி.ஏ.ஓ. அபிலேஷ் ஆகியோர் உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் மின் கம்பம் மற்றும் சாலையில் விழுந்த புளியமரக்கிளைகளை அப்புறப்படுத்தினர்.

    இதனால், ஒடுகத்தூரில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பம் உடைந்ததால் அதனை சீரமைக்கும் பணியிலும் மின்வரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    அதேபோல் ஒடுகத்தூர், வேலூர் சாலையோரங்களில் வீடு மற்றும் மின்கம்பங்கள் அருகே புளியமரங்கள் அதிகம் உள்ளது.

    தற்போது, பருவமழை காலம் என்பதால் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
    • வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.

    'ஈஷா கிராமோத்வசம்' திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் வேலூர் வாலாஜா ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூரில் இன்று நடைபெற்றது. இதில் 'ஈஷா கிராமோத்சவம்' குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈஷா அவுட்ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. முதல்கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் வரும் 10-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள வன்னிவேடு பகுதியில் அமைந்திருக்கும் வாலாஜா ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டியும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியும் மற்றும் இருபாலருக்கான கபடி போட்டிகளும் நடைபெறவுள்ளன. வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும், த்ரோபால் போட்டியில் மொத்தம் 10 அணிகளும், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் தலா 6 அணிகளும் பங்கேற்க உள்ளன.

    இப்போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும். கிராமப்புற அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம். இதை பார்வையிட வரும் பொதுமக்களுக்காக பிற்பகல் வேளையில் பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    மண்டல அளவில் சிறப்பாக ஆடும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். வீரர்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈஷா கிராமோத்சவம் குழுவே கவனித்து கொள்ளும்.

    இறுதிப்போட்டிகள் கோவையில் ஆதியோகி முன்பு செப்டம்பர் 23-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிப்பார்கள். இத்திருவிழாவில் ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் வரை பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×