என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாய நிலத்தில் புகுந்து வாழை, தென்னை மரங்களை நாசம் செய்த காட்டு யானைகள்
- பட்டாசு வெடித்து, மேளம் அடித்து விரட்டினர்
- அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாரங்கள், பத்தலப்பல்லி, பாலூர், குண்டலப்பல்லி, ரங்கம்பேட்டை, ஜங்குமூர் ஆகிய பகுதிகள் வனப்ப குதியையொட்டி அமைந் துள்ளது.
இதனால் அவ் வப்போது வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி கிராமங் களுக்கு வந்து செல்லும் நிலை தொடர்ந்து வருகி றது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜங்குமூர் கிராமத் தில் உள்ள ஒருவரது விவ சாய நிலத்தில் தடுப்பு வேலிகளை சாய்த்து 6 காட்டு யானைகள் புகுந்தது.
மேலும், அங்கு பயிரி டப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங் களை நாசம் செய்தது. அருகே இருந்த 60 தென்னை மரங்கள், பயிரிடப்பட்டிருந்த கத்தரிக்காய், சோளம் உள் ளிட்டவகைளை மிதித்து சேதப்படுத்தியது. இதனைக் கண்ட நிலத்தின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்களிடம் இணைந்து பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை காட்டிற்குள் விரட்டினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானைகள் மிதித்து சேதப்படுத்திய வாழை தென்னை மரங்களை பார்வையிட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






