தேனீ கொட்டியதில் மூதாட்டி சாவு

வலியால் அலறி துடித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
தேனீ கொட்டியதில் மூதாட்டி சாவு
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்.

இவரது மனைவி யசோதா (வயது 69). இவர் நேற்று முன்தினம் தங்களது விவசாய நிலத்தில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த தேனீக்கள் யசோதாவை சூழ்ந்து கொண்டு உடல் முழுவதும் கொட்டியது.

வலியால் அலறி துடித்த யசோதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யசோதா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com