என் மலர்
வேலூர்
வேலூரில் தக்காளி வரத்து குறைவால் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர்:
வேலூர் மாநகரின் முக்கிய காய்கறி, பழ வியாபார மையமான நேதாஜி மார்க்கெட் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து அங்கிருந்த மொத்த விற்பனை காய்கறி கடைகள் மாங்காய் மண்டி அருகேயும், சில்லரை விற்பனை காய்கறி கடைகள் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்திலும் தற்காலிகமாக இயங்கி வருகின்றன.
மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் லாரிகளில் வருகின்றன. கடந்த சில நாட்களாக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டிற்கு மிகக்குறைந்த அளவே தக்காளி லாரிகள் வருகின்றன. அதனால் அதன் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. அதன் காரணமாக சில்லரை விற்பனை காய்கறி கடைகள், மளிகை கடைகளில் கடந்த ஒருமாதமாக தக்காளி கிலோ ரூ.40-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் விலை மேலும் அதிகமாகி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. அதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நேதாஜி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.பாலு கூறுகையில், வேலூர் மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த மாதம் ஆந்திராவில் இருந்து தினமும் 15 லாரிகளில் தக்காளிகள் வந்தன. தற்போது 5 லாரிகளில் வருகின்றன. ஆந்திராவில் பெய்யும் மழை காரணமாக மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. 25 கிலோ அடங்கிய ஒரு பாக்ஸ் முன்பு ரூ.300 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகின்றன. அதனால் தக்காளி விலை அதிகமாகி உள்ளது. இங்கிருந்து தக்காளி வாங்கி செல்லும் சில்லரை காய்கறி, மளிகை கடை வியாபாரிகள் கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து ரூ.50 முதல் ரூ.60 வரை அதனை விற்பனை செய்கிறார்கள். மற்ற காய்கறிகளின் விலை உயரவில்லை.
தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் அதிகளவு காய்கறிகளை சேமித்து வைக்க தேவையான வசதிகள் இல்லை. தக்காளிகள் மழையில் நனைந்தால் கெட்டுபோகும் என்பதால் வியாபாரிகள் அதிகளவு சேமித்து வைப்பதில்லை என்று தெரிவித்தார்.

வாலாஜா அருகே 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சைல்டுலைன் அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
வேலூர்:
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு வாலாஜா அருகேயுள்ள வாங்கூர் கிராமத்தில் 14 வயது சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக புகார் வந்தன. அதன்பேரில் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், அணி உறுப்பினர் நிரோஷா மற்றும் வாலாஜா போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளியின் 14 வயது மகளுக்கும், மாந்தாங்கல் கூட்ரோட்டை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த திருமணத்தை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியின் பெற்றோரிடம் 18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைல்டுலைன் அலுவலர்கள் எழுதி வாங்கிக்கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 280 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,378ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 3,098 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,378 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,344 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

முகாம் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று மாவட்ட வழங்கல் அலுவலர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல், உள்ளிட்ட அறிகுறி காணப்படும் பரிசோதனை செய்வதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் ஒரு நாளைக்கு 10 வார்டுகள் வீதம் 6 நாட்கள் 60 வார்டுகளிலும் நேற்று முதல் பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் நாளான நேற்று வேலூர் சைதாப்பேட்டை, சத்துவாச்சாரி, தொரப்பாடி, கஸ்பா, அலமேலுமங்காபுரம், தாராபடவேடு, கொணவட்டம் உள்பட 10 வார்டுகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இதில், அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி காணப்பட்ட நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. இந்த முகாமை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி சத்துவாச்சாரி பகுதி 5-ல் நடைபெற்ற முகாமை மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய முகாமில் 3.30 மணி வரை மிகவும் குறைந்த அளவு பொதுமக்களே வந்து பரிசோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர் அந்த பகுதி மக்களிடம் விசாரித்தார். அப்போது முகாம் குறித்த தகவல் தெரியவில்லை என்று பலர் தெரிவித்தனர்.
அதனால் அதிருப்தி அடைந்த மாவட்ட வழங்கல் அலுவலர் அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்களிடம் முகாம் குறித்து ஆட்டோவில் ஒலிபெருக்கி அல்லது தண்டோரோ போட்டு ஏன் விழிப்புணர்வு செய்யவில்லை என்று கண்டித்தார்.
மேலும் சத்துவாச்சாரியில் பகுதியில் முகாம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிவித்து பொதுமக்களை அழைத்து வரும்படி அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் முகாமில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கர்ப்பிணி கைதி கும்மிடிபூண்டியில் பிடிப்பட்டார். இது தொடர்பாக பெண் சிறை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (33) என்பவரும் கடந்தசில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். கிருஷ்ணவேணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமாருடன் (25) பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து சுரேசுடன் பேசுவதை கிருஷ்ணவேணி தவிர்த்து வந்தார். சுரேஷ் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் கிருஷ்ணவேணி கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி அஜித்குமாருடன் சேர்ந்து அவரை கொலை செய்தார். இதுதொடர்பாக ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
சென்னை கும்மிடிப்பூண்டியில் பதுங்கிய கிருஷ்ணவேணி அதே பகுதியைச் சேர்ந்த கோபியை (28) திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான கிருஷ்ணவேணி கடந்த மே மாதம் ஆரணிக்கு வந்தபோது போலீசார் அவரை கைது செய்து வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 5-ந் தேதி கிருஷ்ணவேணி மற்றும் அஜித்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
7 மாத கர்ப்பிணியான கிருஷ்ணவேணியின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி குறைவால் கடந்த 7-ந்தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் குளியலறைக்கு சென்ற அவர் மாற்றுச்சேலை அணிந்து அங்கிருந்து தப்பியோடினார்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் நேற்று வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதேபோல் சிறை துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவின்பேரில் 5 ஆண் சிறை காவலர்கள், 5 பெண் சிறை காவலர்கள் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 5 தனிப்படையினரும் ஆரணி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் கும்மிடிப்பூண்டியில் கணவர் வீட்டில் பதுங்கியிருந்த கிருஷ்ணவேணியை சிறை காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் மடக்கி பிடித்தனர். அவரை, அங்கிருந்து வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் இருந்து அவர் தப்பி செல்ல உதவியது யார்? கும்மிடிப்பூண்டிக்கு சென்றது எவ்வாறு? என்பது குறித்து வேலூருக்கு வந்த பின்னர் விசாரணை நடத்தப்பட உள்ளது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கிருஷ்ணவேணி மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2-ம் நிலை பெண் சிறைகாவலர் கலாவதியை பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக சிறை துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
வேலூரில் ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, கொள்ளையடிக்க முயன்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே ஒரு தனியார் வங்கி உள்ளது. அதையொட்டி ஏ.டி.எம். மையமும் அமைந்துள்ளது. ஆற்காடு சாலையில் சி.எம்.சி. மருத்துவமனை மற்றும் மருத்துவமனை நர்சுகள், டாக்டர்கள் குடியிருப்பு வளாகங்கள் ஆகியவை அமைந்துள்ளதால் இரவில் வாகனப் போக்குவரத்தால் பரபரப்பாகக் காணப்படும். வேலூர் வடக்குப் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் ஆற்காடு சாலை வழியாக மோட்டார்சைக்கிள்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏ.டி.எம். மையத்தின் உள்ளே ஒருவர் அமர்ந்து இருப்பது தெரிய வந்தது. அவரை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தின் கதவை திறந்து பார்த்தனர்.
அதில் ஒரு சிறுவன், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அவனை, போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அந்தச் சிறுவனிடம் விசாரணை நடத்தினார். அவன், சைதாப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது. அவன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவன் கைது செய்யப்பட்டான்.
மேலும் அவன் கூறுகையில், தன்னுடன் அதேபகுதியைச் சேர்ந்த முனியப்பனின் மகன் ஆனந்தன் என்கிற பைக் ஆனந்தன் (வயது 24), பாலாஜியின் மகன் தினேஷ்குமார் (23) ஆகியோர் வந்தனர், தான் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது, இருவரும் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு மரத்தின் கீழே நின்று கொண்டு அந்த வழியாக யாரேனும் வருகிறார்களா? என நோட்டமிட்டு தனக்கு தகவல் கூறினர். அந்த நேரத்தில் போலீசார் வந்ததைப் பார்த்ததும் இருவரும் தப்பியோடி விட்டதாக, தெரிவித்தான்.
இதையடுத்து சிறுவன் கூறிய தகவலின்பேரில் தப்பியோடிய ஆனந்தன், தினேஷ்குமார் ஆகியோரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட ஆனந்தன் மீது திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனந்தன் மேலும் 2 பேருடன் சேர்ந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளான். சரியான நேரத்தில் ரோந்துச் சென்றதன் காரணமாக பல லட்சம் மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்படுவது தடுக்கப்பட்டது. இந்த 3 பேரும் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என விசாரித்து வருகிறோம், என்றனர்.

வேலூர் மாவட்டத்தில் ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் 45 ரேசன் கடைகள் மூடப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 2,772 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,981 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தில் 45 ரேசன் கடைகள் மூடப்பட்டது.
ரேசன் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் கடைகள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
இதற்கிடையே மாற்று ஊழியர்களை நியமித்து நாளை முதல் ரேசன் கடைகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 209 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,981 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,772 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,981 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,038 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. வேலூர் மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகளில் அதிகம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகள் உள்ள பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதைத்தவிர தொற்று அதிகரித்து வரும் வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் ஆய்வு செய்ய பல்வேறு அரசு துறையினர் அடங்கிய 200-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல், சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் ஆகிய உடல்நலக்குறைவு உள்ளவர்களை கண்டறிகின்றனர். பின்னர் அவர்களுக்கு அருகே உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், தொற்று இருப்பது உறுதியானால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மளிகை, காய்கறி, மருந்து பொருட்கள் வாங்க 2,600 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் மாவட்டத்தில் 2-வது சித்த மருத்துவ சிகிச்சை மையமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்துத்துறை ஊழியர்களுக்கும், நோய் தொற்று உள்ளவர்கள் உள்பட 15 ஆயிரம் பேருக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்படும். கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் ‘நெகட்டிவ்’ என்று வந்தவர்களுக்கு அவர்களின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 148 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,770 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,622 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,770 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1,034 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த 100 நபர்களுக்கு சித்த மருத்துவ முறையில் குணப்படுத்தவற்கான சிகிச்சை தொடங்கியது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 2,500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,300 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள நபர்களுக்கு அடுக்கம்பாறை, குடியாத்தம், வேலூர் பென்ட்லேன்ட், இ.எஸ்.ஐ. மற்றும் சி.எம்.சி. மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பாதித்த 40 வயதுக்கு உட்பட்ட நபர்கள் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, ராஜகோபால் பாலிடெக்னிக்கில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த நபர்களுக்கு சித்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். அதன்படி வேலூர் தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் ஒருங்கிணைந்த வேலூர் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சுசிகண்ணம்மாவிடம் சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளை வழங்கினார். இதில், டாக்டர் தில்லைவாணன், யோகா பயிற்றுனர் கவிதா, வேலூர் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், கல்லூரியில் முதற்கட்டமாக 100 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காலை 50 பேர், மாலை 50 பேர் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 விதமான மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. அதைத்தவிர தினமும் மூச்சுப்பயிற்சி, யோகா மற்றும் மன அழுத்தத்தை குறைக்க ஆலோசனை உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது. 100 பேருக்கும் ஒருவார காலம் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அனைவரும் முழுமையாக குணமடைந்து விடுவார்கள். குணமடையாத நபர்களுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்படும்.
குணமடைந்து வீட்டிற்கு சென்ற நபர்கள் சில நாட்கள் சாப்பிட சித்த மருந்துகள் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

குடியாத்தம் பகுதியில் பெய்த மழையால் கொட்டாற்றில் ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
குடியாத்தம்:
குடியாத்தம் நகரம், கிராமப்புற பகுதியில் நேற்று முன்தினம் இரவு பல மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேல் ஆலத்தூர், பட்டு மேல்முட்டுகூர், சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பல மணி நேரம் தொடர்ந்து பெய்த பலத்த மழையால் குடியாத்தம் நகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
அதேபோல் குடியாத்தம் எல்லைப்பகுதியான சைனகுண்டாவை அடுத்த ஆந்திர மாநில பகுதியிலும் பலத்த மழை பெய்தது. நேற்று சைனகுண்டா, கொட்டமிட்டா, மேல்கொல்லப்பல்லி, மோடிகுப்பம் வழியாகச் செல்லும் கொட்டாற்றில் ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதே கொட்டாற்றில் ஆர்.கொல்லப்பல்லி பாலத்தைத் தாண்டி மழை வெள்ளம் ஓடியது. குடியாத்தம் பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு இடத்தில் ஆற்றில் ஓடிய மழை வெள்ளத்துக்கு விவசாயிகளும், கிராம மக்களும் பூஜை செய்து மலர் தூவினர். மழை வெள்ளத்தால் குடியாத்தம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.