என் மலர்
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று காலை சென்னை புழல் ஜெயிலில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார்.
அவரது தாய் அற்புதம்மாள் வரவேற்றார். முன்னதாக பேரறிவாளனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு தோற்று இல்லை என உறுதி செய்த பின்னரே அவரை அழைத்து வந்தனர்.
ஒரு மாதம் பரோலில் வந்த பேரறிவாளன் கொரோனா தொற்று காரணமாக தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம். வீட்டில் தான் அற்புதம்மாள் உடன் இருப்பதாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் டி.எஸ்.பி. பிரவீன் குமார் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 6 எஸ்.ஐ.க்கள் என 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரறிவாளன் வீட்டுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேரறிவாளன் பரோல் காலம் முடியும் வரை வீட்டில் இருந்து தினமும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும்.
ஆனால் பேரறிவாளன் பாதுகாப்பு கருதி அவரது வீட்டிலேயே தினமும் கையெழுத்து வாங்கப்படும் என போலீசார் கூறினர்.
இதற்கு முன்பு பேரறிவாளன் 2017, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் பரோலில் வந்தார்.
தற்போது அவர் 4-வது முறையாக பரோலில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் கவுதம் பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 62). திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் குண்டர் சட்டம் இவர் மீது பாய்ந்தது. இதனை தொடர்ந்து வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கடந்த 6-ந்தேதி சங்கருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
ஜெயில் டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்தார். அப்போது கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மேலும் அவருடைய உடல்நிலை மோசமானதை தொடர்ந்து வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கருக்கு கடந்த 25ந் தேதி கொரோனா நெகட்டிவ் என வந்தது.
இதனால் அங்கிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சங்கர் இறந்தார்.
அவருடைய உடல் கொரோனா விதிமுறைகளின்படி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வேலூர் ஜெயில் கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி வரை கருப்பு பூஞ்சை நோயால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் 8 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வேலூரில் உள்ள சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 2 பேர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களில் 13 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள். மேலும் சிலருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார்கள் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
சிஎம்சி ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை அதிகபட்சமாக 10 பேர் சிகிச்சை பெற்றனர். கடந்த சில நாட்களாக இந்த நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவர் வீடு திரும்பினார். இதையடுத்து அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்படவே அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி இருந்தது. இதையடுத்து அவரின் இடது கண் பாதிக்கப்பட்டது. அந்த கண்ணை டாக்டர்கள் அகற்றினர்.
இந்த நிலையில் நேற்று அவர் திடீரென உயிரிழந்து விட்டார். அவர் கொரோனாவுக்கு இறந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். கருப்பு பூஞ்சைக்கு ஒருவர் வேலூரில் பலியான சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் ஆம்பூரில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி வரை கருப்பு பூஞ்சை நோயால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் 8 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் வேலூரில் உள்ள சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 2 பேர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 பேரும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 13 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள்.
சிஎம்சி ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை அதிகபட்சமாக 10 பேர் சிகிச்சை பெற்றனர். கடந்த சில நாட்களாக இந்த நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
இதையடுத்து அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்படவே அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி இருந்தது. இதையடுத்து அவரின் இடது கண் பாதிக்கப்பட்டது. அந்த கண்ணை டாக்டர்கள் அகற்றினர்.
இந்த நிலையில் நேற்று அவர் திடீரென உயிரிழந்து விட்டார். அவர் கொரோனாவுக்கு இறந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். கருப்பு பூஞ்சைக்கு ஒருவர் வேலூரில் பலியான சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் ஆம்பூரில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவர் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலூர் வாணியர் வீதியில் ஜெயின் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 1,93,915 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கொரோனாவுக்கு ஊசி போட்டுகொண்டதால் கொரோனாவை அவர்கள் வெற்றிகொண்டுள்ளனர். ஆனால் இங்கே தவறான தகவலால் தடுப்பூசி போட்டு கொள்ள அஞ்சுகிறார்கள்.
தடுப்பூசி போட்டு கொண்டு உங்களையும் சமுதாயத்தையும் காத்து கொள்ளுங்கள். அப்போது தான் கொரோனாவை நாம் முழுமையாக ஒழிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கணவன்-மனைவி இருவரும் 29 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி, முருகன் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நளினி, முருகன் ஆகியோர் தனித்தனியாக வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினியிடம் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும்படி கடிதம் வழங்கி உள்ளனர்.
நளினி எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் உள்ள தனது தாயார் பத்மா (வயது 81) முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் அருகில் இருந்து கவனித்து கொள்ளவும், இலங்கை நாட்டில் வசித்த தனது மாமனாரும், முருகனின் தந்தையுமான வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆகிறது. அவருக்கு சடங்குகள் செய்ய வேண்டி உள்ளது. எனவே எனக்கும், கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று முருகன் எழுதியுள்ள கடிதத்தில், தந்தை வெற்றிவேல் கடந்தாண்டு இறந்தபோது இறுதிசடங்கு செய்வதற்காக பரோலில் செல்ல அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை. தற்போது தந்தை இறந்து ஓராண்டுகள் ஆகிறது. எனவே அவருக்கு சடங்குகள் செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக நளினி, முருகனின் வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.
நளினி, முருகன் வழங்கிய கடிதம் தமிழக முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு தபால் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது என்று ஜெயில் சூப்பிரண்டு தெரிவித்தார்.
முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ரெயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ஒரு தம்பதியினர் காட்பாடிக்கு ரெயிலில் வந்தனர்.
வேலூர் அடுத்த கணியம்பாடிக்கு ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தவர்கள் காட்பாடியிலிருந்து கணியம்பாடி செல்ல ஆட்டோ இருக்கிறதா? என்று பார்த்தனர். அப்போது நோயாளிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வாங்கியிருந்த ஒரு சில ஆட்டோக்கள் ஓடின.

காட்பாடியில் இருந்து கணியம்பாடி 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு ரூ.3 ஆயிரமா? என்று அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஊரடங்கு நேரத்தில் எந்தவித போக்குவரத்தும் இல்லையே என வருந்தினர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த பைகள், குழந்தைகளுடன் 20 கி.மீ தூரம் நடந்தே கணியம்பாடிக்கு சென்றனர்.
ரெயில்கள் ஓடுவதால் ரெயில் நிலையத்தில் கட்டண விவரங்களுடன் பதிவு செய்த ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் சாலைப்பேட்டையைச் சேர்ந்தவர் எழிலரசி (வயது 40). குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்த இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
ஏற்கனவே அவரது தாயார் பாப்பம்மாளும் (60) கொரோனா தொற்று காரணமாக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த பாப்பம்மாளும் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மகளும், தாயாரும் அடுத்தடுத்து கொரோனாவிற்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 544 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 375 பேருக்கு தொற்று உறுதியானது. வேலூர் மாநகராட்சி பகுதியில் சுமார் 200 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கிராமப்புற பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 375 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 712 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 768 பேர் குணமடைந்துள்ளனர். 633 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்து 311 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி எழிலரசி (வயது 40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கோபாலகிருஷ்ணன் பல ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். எழிலரசி கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்துப கடந்த 15-ந் தேதி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் 17-ந் தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் உடல்நிலை மோசமாகவே 21-ந் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை எழிலரசி பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் எழிலரசியின் படத்தை வைத்து அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) மாறன்பாபு தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
தற்போது வரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொரோனோ தொற்றுக்கு 4 டாக்டர்களும், 6 செவிலியர்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு செவிலியர் கடந்த ஆண்டுக்கு கொரோனோ தொற்றால் இரு முறை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த ஆண்டும் மூன்றாவது முறையாக கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






