என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

    தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நல்லம்மை ராமநாதன் மருத்துவமனையில் குடியாத்தம் ரோட்டரி சங்கம், கல்லப்பாடி சமுதாய சுகாதார நிலையம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட தொழில் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து கடந்த 63 நாட்களாக கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

    தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வி.அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுனர் கே.ஜவுரிலால்ஜெயின், தாசில்தார் வத்சலா, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கள்ளூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தடுப்பூசி முகாமை குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×