என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
வேலூர் மாவட்டத்தில் 375 பேருக்கு கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 15 பேர் பலி
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 544 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 375 பேருக்கு தொற்று உறுதியானது. வேலூர் மாநகராட்சி பகுதியில் சுமார் 200 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. கிராமப்புற பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 375 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 712 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 768 பேர் குணமடைந்துள்ளனர். 633 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்து 311 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story