என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வேலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஜெயில் கைதி மரணம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வேலூர் ஜெயில் கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் கவுதம் பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 62). திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் குண்டர் சட்டம் இவர் மீது பாய்ந்தது. இதனை தொடர்ந்து வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கடந்த 6-ந்தேதி சங்கருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    ஜெயில் டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்தார். அப்போது கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மேலும் அவருடைய உடல்நிலை மோசமானதை தொடர்ந்து வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சங்கருக்கு கடந்த 25ந் தேதி கொரோனா நெகட்டிவ் என வந்தது.

    இதனால் அங்கிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சங்கர் இறந்தார்.

    அவருடைய உடல் கொரோனா விதிமுறைகளின்படி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வேலூர் ஜெயில் கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    Next Story
    ×