என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்டத்தில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் வெளியீடு மற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் பணி மேற்கொள்வது குறித்து கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
     
    கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     
    கூட்டத்திற்கு பிறகு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
     
    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்கு பதிவு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கவும் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. 

    மாவட்டத்தில் 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டுள்ளன. தேர்தல் நாளன்று 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

    பதற்றமான வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். மைக்ரோ தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த தகவலும் வரவில்லை. 

    புகார்கள் வரும்பட்சத்தில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களிடம் அறிக்கை கேட்டு உள்ளோம் தவறாக வேட்பாளர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

    வேலூரில் பா.ம.க. வேட்பாளர் மிரட்டப்படுவதாக எந்த போலீசிலும் இதுவரை புகார் வரவில்லை. வேலூர் மாவட்டத்தில் இதுவரை தேர்தல் தொடர்பாக எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. வேலூரில் வாக்குறுதிகளை அள்ளி விடும் வேட்பாளர்கள்.
    வேலூர்:

    தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டதால் கொண்டாட்டங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும் பஞ்சமில்லை. 

    வேலூரில் தற்போது மாநகர உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. காலை தொடங்கி இரவு வரை வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு செல்கின்றனர். 

    அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணிவகுத்து செல்கின்றனர். அப்போது வீடு வீடாக சென்று பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர்.

    அடிப்படை வசதிகள் அங்கு அடுக்கடுக்காக செய்து தருவோம். தினமும் காவிரி குடிநீர் கிடைக்க  செய்வோம். அனைத்து பகுதிகளையும் சுகாதாரமாக பராமரிப்போம் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். 

    ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த நிலையில் வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மறுக்கின்றனர்.

    தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர். சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ராஜ மரியாதை அளித்து வருகின்றனர். 

    வீடு வீடாக சென்று குடும்பத் தலைவர் அல்லது குடும்ப தலைவிக்கு சால்வை அணிவிக்கின்றனர். 

    உறவு முறைகளை சொல்லியும் ஓட்டுக் கேட்கின்றனர். ஒரு சில வேட்பாளர்கள் எங்களுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று உரிமையுடன் கேட்கின்றனர். நடுநிலை வாக்காளர்கள் வேட்பாளர்களின் அதிரடி பிரசாரங்களை வேடிக்கை பார்க்கின்றனர். 

    மொத்தத்தில் வேட்பாளர்கள் அள்ளி விடும் வாக்குறுதிகளால் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.
    வேலூரில் பாலாற்று வெள்ளத்தால் பைப் லைன் சேதமடைந்தது. இதனால் காவிரி கூட்டு குடிநீர் விநியோகிப்பது தாமதமாக வருகிறது.
    வேலூர்:
    -
    கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த கனமழையால் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்தது.

    இந்த வெள்ளத்தில் பாலாற்று படுகையில் புதைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான பைப் லைன்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் காவிரி குடிநீரை நம்பியிருந்த திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். 

    இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன் சேதங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாதனூர் அருகே சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு பைப் லைன் முழுமையாக ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு மட்டும் மாதக்கணக்கில் பணி நடந்தது.

     சமீபத்தில் இந்த பணி நிறைவடைந்து. தற்போது செதுவாலை வரை பைப்லைன் சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. இதனால் குடியாத்தம், நகருக்கு அடுத்த 2 நாட்களில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆங்காங்கே உள்ள சிறிய சேதங்களை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய தொழில்நுட்பக் குழுவினர் இறங்கினர். 

    இதில் வேலூர் பிரதான பைப் லைனில் இருந்து காட்பாடி பகுதி காவிரி நீரைக் கொண்டு செல்லும் பைப்லைன் சீரமைக்கும் பணிகள் நேற்று போர்க்கால அடிப்படையில் நடந்து முடிந்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    செதுவாலை வரை காவிரி கூட்டு குடிநீர் பைப் லைன் சீரமைக்கும் பணி முடிந்துள்ளது. இதனால் குடியாத்தத்துக்கு 2 நாட்களில் காவிரி குடிநீர் கிடைக்கும். செதுவாலை வரை பிரதான பைப் லைன் பழுது சீரமைக்கப்பட்டுள்ளது. 

    பொய்கையில் பைப்லைன் பற்ற வைக்கும் பணி நடந்துள்ளது. தற்போது காட்பாடிக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைன் பழுது சரி பார்க்கும் பணி நடந்துள்ளது. 

    ஏறக்குறைய 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு வார காலத்தில் வேலூர் நகர மக்களுக்கு காவிரி நீர் விநியோக நடக்க வாய்ப்புள்ளது என்றனர்.

    வேலூரில் பரவலாக மழை பெய்தும் சரியான குடிநீர் கிடைக்கவில்லை. காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் எப்போது சரிசெய்யப்படும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

    பொதுமக்கள் குமுறலுக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
    வேலூர் மாநகராட்சி வார்டுகளை கைப்பற்றும் நோக்கத்தில் பணபலமிக்க வேட்பாளர்கள் பலரும், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை வாபஸ் பெற வைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    வேலூர்:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த ஜனவரி 28-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

    இதில் வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 505 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    நேற்று முன்தினம் நடந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 472 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதன்மூலம், 8-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் எம்.சுனில்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

    தொடர்ந்து இன்று மாலை வரை வேட்பு மனுக்கள் வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டு அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளன.

    இந்நிலையில் வேலூர் மாநகராட்சி வார்டுகளை கைப்பற்றும் நோக்கத்தில் பணபலமிக்க வேட்பாளர்கள் பலரும், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை வாபஸ் பெற வைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    களத்தில் எதிரணி வேட்பாளர்களுக்கு நிலவும் செல்வாக்கை பொறுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:-

    உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை ஒவ்வொரு வார்டிலும் உள்ள ஒவ்வொரு வாக்குகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த கால தேர்தல்களில் ஒரு ஓட்டில் கூட தோல்வியடைந்த வேட்பாளர்கள் பலர் உண்டு.

    இதனால், வேலூர் மாநகராட்சி வார்டுகளைப் பிடிக்க பணபலமிக்க வேட்பாளர்கள் பலர் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்ய தயாராக உள்ளதாகத் தெரிகிறது.

    அதேசமயம், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுவிட்டால் அவருக்கு செல்லக்கூடிய வாக்குகள் தங்களுக்கு சாதமாகும் என்பதாலும், ஒருவேளை எதிர்வேட்பாளர்கள் அனைவரும் வாபஸ் பெற்றுக்கொண்டால் போட்டியின்றி தேர்வாக முடியும் என்ற அடிப்படையிலும் பணபலமிக்க வேட்பாளர்கள் எதிர்வேட்பாளர்களிடம் குதிரை பேரம் நடத்தி வருகின்றனர்.

    இதற்காக நம்பிக்கைக்குரிய நபர்கள் மூலம் பேச்சு நடைபெற்று வருகிறது. இதில், களத்தில் எதிரணி வேட்பாளர்களுக்கு நிலவும் செல்வாக்கைப் பொறுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாக தெரிகிறது என்றார்.
    வேலூர் மாவட்டத்தில் 1,099 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்க்கப்பட்டு 48 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 1,099 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 48 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. என தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது.

    வேலூர் மாவட்டத்தில் 180 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., உள்பட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு 505 பேரும், குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 234 பேரும், பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 105 பேரும், 

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 72 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 79 பேரும், திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 63 பேரும், பென்னாத்தூர் பேரூராட்சியில் 14 வார்டுகளுக்கு 89 பேரும் என மொத்தம் 1,147 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. உதவிதேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வையில் வார்டு வாரியாக ஒவ்வொரு மனுவாக பரிசீலனை செய்யப்பட்டன. 

    வேட்பாளர் மற்றும் அவருடன் ஒருவர் மட்டும் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். உரிய தகவல் தெரிவிக்காதது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    சில இடங்களில் அ.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் வேட்புமனுக்களும் தள்ளுபடியானது.

    வேலூர் மாநகராட்சியில் 33, குடியாத்தம் நகராட்சியில் 8, பேரணாம்பட்டு நகராட்சியில் 1, ஒடுகத்தூரில் 3, பென்னாத்தூரில் 1, பள்ளிகொண்டாவில் 2 மனுக்கள் என மொத்தம் 48 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

    திருவலம் பேரூராட்சியில் மனு எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை. வேலூர் மாவட்டத்தில் 1,099 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர் மாநகராட்சி 8-வது வார்டில் தி.மு.க வேட்பாளர் சுனில்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

    நேற்று காட்பாடியில் உள்ள மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. அப்போது அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட 5 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

    இதையடுத்து சுனில்குமார் போட்டியின்றி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    விரிஞ்சிபுரம் பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர் பைக் 2 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
    வேலூர்:

    பாலாற்றில் கடந்த நவம்பர் மாதம் கரைபுரண்டு வெள்ளம் ஓடியது. கே.வி.குப்பத்தை அடுத்த வடுகன்தாங்கலை சேர்ந்த ராணுவவீரர் மனோகரன் (வயது 32). 

    இவர் நவம்பர் மாதம் 18-ந்தேதி மோட்டார் சைக்கிளில் விரிஞ்சிபுரம் பாலாற்று தரைப்பாலத்தை கடக்க முயன்றார். 

    பாலத்தை மூழ்கியபடி வெள்ளம் சென்று கொண்டிருந்தது. அதனால் அந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் மனோகரன் அதனை பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் பாலத்தை கடக்க முயன்றார். சிறிதுதூரம் சென்ற நிலையில் வெள்ளத்தின் வேகத்தில் மோட்டார் சைக்கிளுடன் அவர் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். 

    வேலூர் தீயணைப்பு வீரர்கள், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பாலாற்றின் பல்வேறு பகுதிகளில் படகுகள் மூலம் பல நாட்கள் தேடியும் மனோகரனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    பாலாற்றின் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் பாய்தோடியதால் மனோகரன் மற்றும் அவரின் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருந்தது. 

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு பின்னர் தரைப்பாலத்தில் இருந்து 150 அடி தூரத்தில் பாலாற்று மணலில் புதைந்தபடி மோட்டார் சைக்கிள் ஒன்று கிடந்தது. 

    இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மோட்டார் சைக்கிளை மீட்டு விசாரித்தனர். 

    இதுகுறித்து மனோகரனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு அந்த மோட்டார் சைக்கிள் மனோகரனுக்கு சொந்தமானது என்று உறுதி செய்தனர்.

    அதைத்தொடர்ந்து விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்துக்கு அந்த மோட்டார் சைக்கிள் எடுத்து செல்லப்பட்டது.
    வேலூர் பஸ் நிலையத்தில் முதியவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    மயிலாடுதுறையை சேர்ந்தவர் 55 வயது முதியவர். இவர் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று வேலூர் வந்தார். 
    சிகிச்சை முடிந்து ஊருக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணியளவில் பழைய பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றார்.

    அப்போது முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் முதியவருக்கு தண்ணீர் கொடுத்து எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் கை, கால்கள் அசைவு இன்றி இருந்தார். 

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை சோதனை செய்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. 

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு உள்பட அ.தி.மு.க. வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் தேர்தல் பார்வையாளரிடம் அ.தி.மு.க. புகார் அளிக்க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் திரண்டு வந்தனர்.
    மேலூர்:
    -
    வேலூர் மாநகராட்சி 2--வது மண்டலத்துக்கு உட்பட்ட 24 வது வார்டில் அ.தி.மு.க., வேட்பாளர் சி.கே.எஸ்.வினோத்குமார், தி.மு.க., வேட்பாளராக சுதாகரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    வேட்புமனு பரிசீலனை நேற்று நடந்தது. அப்போது தி.மு.க., வேட்பாளர் சுதாகர் அ.தி.மு.க., வேட்பாளர் வினோத்குமார் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒரு மனு கொடுத்தார். 

    அதில் வினோத்குமார் ஒப்பந்ததாரர் பணி எடுத்து செய்கிறார் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. மாலை பரிசீலிக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.
     
    இதுகுறித்து தகவலறிந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு,  பொருளாளர் எம்.மூர்த்தி,  தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ.பி.சதீஷ் குமார், முன்னாள் தொகுதி செயலாளர்  சி.கே.சிவாஜி உள்பட நிர்வாகிகள் 2-வது மண்டலத்திற்கு வருகை தந்தனர். அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    அப்போது வேட்பாளர் வினோத்குமார்  ஒப்பந்ததாரர் பணியை தான் செய்யவில்லை என்றும் தன்னுடைய தந்தை செய்கிறார் என்றும் அதற்கான ஆவணங்களை கொண்டுவந்து காண்பித்தார். 

    ஆனால் உதவித் தேர்தல் அலுவலர் வசந்தி 24-வது வார்டு வேட்புமனுவை மாலையில் பரிசீலிப்பதாக தெரிவித்தார். 

    அதனால் அ.தி.மு.க., நிர்வாகிகள் அங்கேயே முகாமிட்டு இருந்தனர். மாலை 4 மணிக்கு உதவி தேர்தல் அலுவலர் வேட்பாளர் வினோத்குமாரிடம் அவருடைய தந்தை சி.கே. சிவாஜியின் பெயரில் உள்ள ஒப்பந்த பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை கேட்டார். அதற்கெல்லாம் உரிய ஆவணங்களை வேட்பாளர் வினோத்குமார் உதவி தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். 
    இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் அங்கு  அதிகளவில் கூடியதால் ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து மனு குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. மாலை 4.45 மணி வரை மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்று தெரிவிக்கப்படவில்லை. 

    இந்த நிலையில் மாலை 4.50 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வசந்தி,  இது தொடர்பாக மாநகராட்சி தேர்தல் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து, அங்கிருந்து ஜீப்பில் ஏறி புறப்பட ஆயத்தமானார்.

    இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் அவரது ஜீப்பை முற்றுகையிட்டனர். முடிவு அறிவிக்கப்படாமல் எங்கும் செல்லக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    மேலும் வேட்பாளர் வினோத்குமார் உள்பட நிர்வாகிகள் 2-வது மண்டல அலுவலக நுழைவுவாயில் கேட் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 
    தகவலறிந்து வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 
    பின்னர் அது குறித்து உதவி தேர்தல் அலுவலர் வசந்தியிடம் கூறினார். 
    பின்னர் அவர் ஜீப்பில் இருந்து இறங்கி தன்னுடைய அறைக்கு சென்றார்.  24-வது வார்டு தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்களை அழைத்தார். 

    அ.தி.மு.க., வேட்பாளர் வினோத்குமாரின் மனுவை நிராகரிப்பதாக கூறி அவரை வெளியே அனுப்பி விட்டனர் .அவர் காரணம் கேட்டதற்கு எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார். 

    இந்த சம்பவத்தால் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் இதுகுறித்து அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜனனீ சதீஷ்குமார், மைக்கேல், பாலச்சந்திரன், அண்ணாமலை, தாஸ், சி.கே.சிவாஜி ஆகியோர் வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப்பை சந்தித்து புகார் மனு அளித்தனர். 

    அதில் 24-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் சி.கே.எஸ்.வினோத்குமார், 25-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன், 7-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் தனலட்சுமி ரவி ஆகியோரது வேட்புமனு வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுக்களை ஏற்று அவர்கள் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து தேர்தல் பார்வையாளர் கூறுகையில்:-

    மாநகராட்சி தேர்தல் அதிகாரி, சத்துவாச்சாரி உதவி தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் அறிக்கை கேட்டுள்ளேன் அவர்கள் அறிக்கை அனுப்பிய பிறகு 2 அறிக்கைகளையும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவேன் அவர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் என்றார்.
    வேலூரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய 30 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர், 

    வேலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பழைய மீன் மார்க்கெட், லாங்கு பஜார், மண்டி தெரு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில்ஆய்வு செய்தனர்.

    லாங்கு பஜார் மண்டித் தெருவில் ஏராளமான கடைகள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்தன. சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை பழைய மீன் மார்க்கெட் வளாகத்திற்கு மாற்றவும், 

    கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் வாகனங்களை பழைய பஸ் நிலையத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தார். 

    மேலும் பழைய பஸ் நிலையம், சாரதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள் வெளியூர்களிலிருந்து வேலூரில் ஓடும் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் தலைமையிலான போலீசார் நேற்று அத்துமீறி பழைய பஸ் நிலையத்திற்குள் வந்த ஆட்டோக்கள், 

    சாரதி மாளிகை அருகே தடுப்புகளுக்கு வெளியே நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் கோட்டை முன்பாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் என 30 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்து போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    மேலும் 30 ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
    வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,189 வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள், குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகள், பேரணாம்பட்டில் 21 வார்டுகள், 

    பேரூராட்சிகளான பள்ளிகொண்டா 18 வார்டு, ஒடுகத்தூர், பென்னாத்தூர், திருவலத்தில் 15 வார்டுகள் இங்கு போட்டியிட மொத்தம் 1147 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 

    வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடந்து வருகிறது. இதில் தகுதியில்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகளான ஆம்பூரில் 210 மனுக்களும், வாணியம்பாடியில் 292, திருப்பத்தூர் 219, ஜோலார்பேட்டை 123, பேரூராட்சிகளான 

    ஆலங்காயம் 63, உதயேந்திரம் 64, நாட்டறம்பள்ளி 71 என  மொத்தம் 1042 மனுக்கள் வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. 

    அந்த மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடந்து வருகிறது.
    வேலூர் மாவட்டத்தில் வேட்புமனுதாக்கல் பரிசீலனை இன்று நடந்தது. இதில் காலதாமதமாக வந்த வேட்பாளர்கள் மனு நிறுத்தி வைக்கப்பட்டது.
    வேலூர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. 

    தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட தொடங்கினர். 

    அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் கட்சி வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். 

    சுயேச்சை வேட்பாளர்களும் பலர் ஆர்வமுடன் மனுதாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் மட்டும் வேலூர் மாநகராட்சியில் 157 பேர் மனுதாக்கல் செய்தனர். 

    குடியாத்தம் நகராட்சியில் 98 பேரும், பேரணாம்பட்டு நகராட்சியில் 51 பேரும், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 30 பேரும், 
    பள்ளிகொண்டா பேரூராட்சியில் 14 பேரும், பென்னாத்தூர் பேரூராட்சியில் 5 பேரும், திருவலம் பேரூராட்சியில் 26 பேரும் என மொத்தம் 381 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    கடந்த 28-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை மொத்தம் 505 மனுக்கள் பெறப்பட்டது.

    கடைசி நாளான நேற்று வேலூர் மாநகராட்சியில் 302 பேரும், குடியாத்தத்தில் 89 பேரும், பேரணாம்பட்டில் 46 பேரும், 
    ஒடுகத்தூரில் 42 பேரும், பள்ளிகொண்டாவில் 51 பேரும், பென்னாத்தூரில் 84 பேரும், திருவலத்தில் 28 பேரும் என மொத்தம் 642 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    மாவட்டம் முழுவதும் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை 1,147 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
    வேட்புமனு பரிசீலனை 10 மணிக்கு தொடங்கும் என வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

    மனு ஒருசில எனும்போது வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் ஒரு சில வேட்பாளர்கள் தாமதமாக வந்தனர். 

    8 மணிக்கு பரிசோதனையின் போது வராத வேட்பாளர்களின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தாமதமாக வந்த வேட்பாளர்கள் தங்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக எண்ணி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் உங்களது மனுக்கள் நிராகரிக்கப்படவில்லை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததால் சமாதானம் அடைந்தனர்.

    வேலூர் மாநகராட்சியில் ஒரு சில வார்டுகளில் பெண்கள் போட்டியிடுவதற்காக எடுக்கப்பட்டு உள்ளது. 

    இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 41-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

    41-வது வார்டில் அ.ம.மு.கவை சேர்ந்த ஆண் பிரமுகர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

    வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ள பிரதாப் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    வேட்புமனு பரிசீலனை யும் போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க அந்தந்த மையங்களும் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு கட்சியில் சீட் கிடைக்காதவர்கள் சுயேட்சையாக களத்தில் இறங்கியுள்ளனர்.
    வேலூர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 28-ந்தேதி மனு தாக்கல் தொடங்கியது. 

    மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.

    வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கட்சியில் சீட் கேட்டு விண்ணப்பித்தனர். 

    விண்ணப்பித்த ஒரு சிலருக்கு கட்சி சார்பில் போட்டியிட சீட் வழங்கவில்லை. இதனால் கட்சியின் மீது அதிருப்தி அடைந்த அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் கட்சி சார்ந்த வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக மனு தாக்கல் செய்தனர். 

    தங்களது கட்சியை சேர்ந்தவர்களே தங்களுக்கு எதிராக சுயேட்சையாக போட்டி யிடுவதால் கட்சி அங்கீகாரத்துடன் போட்டி யிடும் வேட்பாளர்கள் ஓட்டுகள் சிதறி தோல்வி அடைந்து விடுவோமோ? என கலக்கத்தில் உள்ளனர்.

    வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வேட்புமனு வாபஸ் இன்று நடைபெறுகிறது. 

    அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சையாக களம் இறங்கியவர்களை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்துவார்கள் என கூறப்படுகிறது.

     இதனால் வேலூர் மாநகராட்சி தேர்தலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
    ×