என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,189 வேட்புமனுக்கள் பரிசீலனை
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,189 வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள், குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகள், பேரணாம்பட்டில் 21 வார்டுகள்,
பேரூராட்சிகளான பள்ளிகொண்டா 18 வார்டு, ஒடுகத்தூர், பென்னாத்தூர், திருவலத்தில் 15 வார்டுகள் இங்கு போட்டியிட மொத்தம் 1147 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடந்து வருகிறது. இதில் தகுதியில்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகளான ஆம்பூரில் 210 மனுக்களும், வாணியம்பாடியில் 292, திருப்பத்தூர் 219, ஜோலார்பேட்டை 123, பேரூராட்சிகளான
ஆலங்காயம் 63, உதயேந்திரம் 64, நாட்டறம்பள்ளி 71 என மொத்தம் 1042 மனுக்கள் வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அந்த மனுக்களின் மீதான பரிசீலனை இன்று நடந்து வருகிறது.
Next Story






