என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்.
வேலூரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய 30 ஆட்டோக்கள் பறிமுதல்
வேலூரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய 30 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்,
வேலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பழைய மீன் மார்க்கெட், லாங்கு பஜார், மண்டி தெரு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில்ஆய்வு செய்தனர்.
லாங்கு பஜார் மண்டித் தெருவில் ஏராளமான கடைகள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்தன. சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை பழைய மீன் மார்க்கெட் வளாகத்திற்கு மாற்றவும்,
கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் வாகனங்களை பழைய பஸ் நிலையத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தார்.
மேலும் பழைய பஸ் நிலையம், சாரதி மாளிகை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள் வெளியூர்களிலிருந்து வேலூரில் ஓடும் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் தலைமையிலான போலீசார் நேற்று அத்துமீறி பழைய பஸ் நிலையத்திற்குள் வந்த ஆட்டோக்கள்,
சாரதி மாளிகை அருகே தடுப்புகளுக்கு வெளியே நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் கோட்டை முன்பாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் என 30 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்து போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் 30 ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
Next Story






