என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடிக்கு குடிநீர் கொண்டு செல்லும் பைப் லைன் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
    X
    காட்பாடிக்கு குடிநீர் கொண்டு செல்லும் பைப் லைன் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    வேலூரில் காவிரி குடிநீர் எப்போது கிடைக்கும்

    வேலூரில் பாலாற்று வெள்ளத்தால் பைப் லைன் சேதமடைந்தது. இதனால் காவிரி கூட்டு குடிநீர் விநியோகிப்பது தாமதமாக வருகிறது.
    வேலூர்:
    -
    கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த கனமழையால் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்தது.

    இந்த வெள்ளத்தில் பாலாற்று படுகையில் புதைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான பைப் லைன்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் காவிரி குடிநீரை நம்பியிருந்த திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். 

    இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன் சேதங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாதனூர் அருகே சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு பைப் லைன் முழுமையாக ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு மட்டும் மாதக்கணக்கில் பணி நடந்தது.

     சமீபத்தில் இந்த பணி நிறைவடைந்து. தற்போது செதுவாலை வரை பைப்லைன் சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. இதனால் குடியாத்தம், நகருக்கு அடுத்த 2 நாட்களில் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆங்காங்கே உள்ள சிறிய சேதங்களை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய தொழில்நுட்பக் குழுவினர் இறங்கினர். 

    இதில் வேலூர் பிரதான பைப் லைனில் இருந்து காட்பாடி பகுதி காவிரி நீரைக் கொண்டு செல்லும் பைப்லைன் சீரமைக்கும் பணிகள் நேற்று போர்க்கால அடிப்படையில் நடந்து முடிந்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    செதுவாலை வரை காவிரி கூட்டு குடிநீர் பைப் லைன் சீரமைக்கும் பணி முடிந்துள்ளது. இதனால் குடியாத்தத்துக்கு 2 நாட்களில் காவிரி குடிநீர் கிடைக்கும். செதுவாலை வரை பிரதான பைப் லைன் பழுது சீரமைக்கப்பட்டுள்ளது. 

    பொய்கையில் பைப்லைன் பற்ற வைக்கும் பணி நடந்துள்ளது. தற்போது காட்பாடிக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைன் பழுது சரி பார்க்கும் பணி நடந்துள்ளது. 

    ஏறக்குறைய 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு வார காலத்தில் வேலூர் நகர மக்களுக்கு காவிரி நீர் விநியோக நடக்க வாய்ப்புள்ளது என்றனர்.

    வேலூரில் பரவலாக மழை பெய்தும் சரியான குடிநீர் கிடைக்கவில்லை. காவிரி கூட்டு குடிநீர் பைப்லைன் எப்போது சரிசெய்யப்படும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

    பொதுமக்கள் குமுறலுக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×