என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் வாக்குறுதிகளை அள்ளி விடும் வேட்பாளர்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. வேலூரில் வாக்குறுதிகளை அள்ளி விடும் வேட்பாளர்கள்.
வேலூர்:
தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டதால் கொண்டாட்டங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும் பஞ்சமில்லை.
வேலூரில் தற்போது மாநகர உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. காலை தொடங்கி இரவு வரை வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு செல்கின்றனர்.
அவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணிவகுத்து செல்கின்றனர். அப்போது வீடு வீடாக சென்று பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர்.
அடிப்படை வசதிகள் அங்கு அடுக்கடுக்காக செய்து தருவோம். தினமும் காவிரி குடிநீர் கிடைக்க செய்வோம். அனைத்து பகுதிகளையும் சுகாதாரமாக பராமரிப்போம் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.
ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த நிலையில் வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மறுக்கின்றனர்.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர். சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ராஜ மரியாதை அளித்து வருகின்றனர்.
வீடு வீடாக சென்று குடும்பத் தலைவர் அல்லது குடும்ப தலைவிக்கு சால்வை அணிவிக்கின்றனர்.
உறவு முறைகளை சொல்லியும் ஓட்டுக் கேட்கின்றனர். ஒரு சில வேட்பாளர்கள் எங்களுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்று உரிமையுடன் கேட்கின்றனர். நடுநிலை வாக்காளர்கள் வேட்பாளர்களின் அதிரடி பிரசாரங்களை வேடிக்கை பார்க்கின்றனர்.
மொத்தத்தில் வேட்பாளர்கள் அள்ளி விடும் வாக்குறுதிகளால் தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது.
Next Story






