என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த வேட்புமனு பரிசீலனையை தேர்தல் பார்வையாளர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு
காலதாமதமாக வந்த வேட்பாளர்கள் மனு நிறுத்தி வைப்பு
வேலூர் மாவட்டத்தில் வேட்புமனுதாக்கல் பரிசீலனை இன்று நடந்தது. இதில் காலதாமதமாக வந்த வேட்பாளர்கள் மனு நிறுத்தி வைக்கப்பட்டது.
வேலூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது.
தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட தொடங்கினர்.
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் கட்சி வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.
சுயேச்சை வேட்பாளர்களும் பலர் ஆர்வமுடன் மனுதாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் மட்டும் வேலூர் மாநகராட்சியில் 157 பேர் மனுதாக்கல் செய்தனர்.
குடியாத்தம் நகராட்சியில் 98 பேரும், பேரணாம்பட்டு நகராட்சியில் 51 பேரும், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 30 பேரும்,
பள்ளிகொண்டா பேரூராட்சியில் 14 பேரும், பென்னாத்தூர் பேரூராட்சியில் 5 பேரும், திருவலம் பேரூராட்சியில் 26 பேரும் என மொத்தம் 381 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 28-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை மொத்தம் 505 மனுக்கள் பெறப்பட்டது.
கடைசி நாளான நேற்று வேலூர் மாநகராட்சியில் 302 பேரும், குடியாத்தத்தில் 89 பேரும், பேரணாம்பட்டில் 46 பேரும்,
ஒடுகத்தூரில் 42 பேரும், பள்ளிகொண்டாவில் 51 பேரும், பென்னாத்தூரில் 84 பேரும், திருவலத்தில் 28 பேரும் என மொத்தம் 642 பேர் மனு தாக்கல் செய்தனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை 1,147 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
வேட்புமனு பரிசீலனை 10 மணிக்கு தொடங்கும் என வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனு ஒருசில எனும்போது வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் ஒரு சில வேட்பாளர்கள் தாமதமாக வந்தனர்.
8 மணிக்கு பரிசோதனையின் போது வராத வேட்பாளர்களின் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தாமதமாக வந்த வேட்பாளர்கள் தங்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக எண்ணி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் உங்களது மனுக்கள் நிராகரிக்கப்படவில்லை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததால் சமாதானம் அடைந்தனர்.
வேலூர் மாநகராட்சியில் ஒரு சில வார்டுகளில் பெண்கள் போட்டியிடுவதற்காக எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி 41-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
41-வது வார்டில் அ.ம.மு.கவை சேர்ந்த ஆண் பிரமுகர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ள பிரதாப் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேட்புமனு பரிசீலனை யும் போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க அந்தந்த மையங்களும் முன்பாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Next Story






