என் மலர்tooltip icon

    வேலூர்

    திருச்சி, கரூரில் நேற்று 101 டிகிரி வெயில் சுட்டெரித்தது. திருவண்ணாமலையிலும் 100 டிகிரி வெயில் கொளுத்தியது.
    வேலூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. கோடை மழையும் பரவலாக பெய்து வந்தாலும் வெயிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் சில வாரங்களாக வெயில் சதம் அடிப்பதும், பிறகு சற்று குறைவதுமாக போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் வெளியில் தலைகாட்டவே முடியாத அளவுக்கு வெப்ப காற்று வீசுகிறது.

    நேற்று வழக்கத்துக்கு மாறாக வெயில் கொளுத்தியது. இதனால் வெப்பத்தின் அளவு அதிகரித்து அனல்காற்று வீசியது. சாலைகளில் கானல் நீர் தெரிந்தது. வெயிலுக்கு பயந்து மக்கள் குடைபிடித்தபடி வெளியில் சென்றனர்.

    வெப்பக்காற்று வீசியதால் வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றி சென்று வந்தனர். கடுமையான வெப்பம் தாங்க முடியாமல் வியர்வை மழையில் நனைந்தபடி சென்றனர். நேற்று முன்தினம் வேலூரில் 103.1 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. நேற்று அதையும் தாண்டி இந்தாண்டின் அதிகபட்சமாக 103.3 டிகிரி வெயில் சுட்டெரித்தது. நேற்று நள்ளிரவில் கருமேகங்கள் திரண்டு இடிமின்னலுடன் கடுமையான மழை வருவது போல் வந்தது. ஆனால் சில துளிகள் மட்டுமே விழுந்தது. இதனால் மழையை எதிர் பார்த்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதேபோல் கரூர், திருச்சியிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. திருச்சி, கரூரில் நேற்று 101 டிகிரி வெயில் சுட்டெரித்தது. திருவண்ணாமலையிலும் 100 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இதேபோல் மதுரையிலும் வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பரவலான மழை பெய்ததால் வெயில் தாக்கம் தெரியவில்லை.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. மழை பெய்தாலும் அங்கு வெயிலின் தாக்கம் குறையவில்லை.

    காந்தி சிலை அகற்றியதை கண்டித்து தனி ஒருவராக சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் கவுன்சிலரால் வேலூர்&ஆற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோயில் பின்புறம் கடந்த 50 ஆண்டுகளாக காந்திசிலை உள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் முருகர் கோவில் பின்புறம் இருந்த காந்தி சிலையை நேற்று இரவு யாருக்கும் தெரியாமல் சாலை அமைக்கும் ஒப்பந்த தாரர் அப்புறப்படுத்திய தாக கூறப்படுகிறது.

    இன்று காலை காந்தி சிலையை அப்புறப் படுத்தியதை அறிந்த முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் தனி ஒருவராக முருகர் கோவில் முன்பாக ஆற்காடு சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆற்காடு சாலையில் இருபுறமும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் நெரிசலில் சிக்கி அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயபிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    அப்போது அவர் காந்தி சிலையை அப்புறப்படுத்திய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிட முடியாது. வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினால் இங்கேயே தீக்குளிப்பேன் என தெரிவித்தார். சாலை அமைக்கும் பணி முடிவடைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலையை வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

    இதனையடுத்து சமாதானம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். காந்தி சிலை அப்புறப்படுத்தியதை கண்டித்து முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனி ஒருவராக சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.9 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    பள்ளிகொண்டா:

    வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் நடமாட்டத்தை அறவே ஒழிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். 

    அதன்படி போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மேலும் பெங்களூரில் இருந்து வேலூர் வழியாக சென்னைக்கு குட்கா பொருட்கள் கார் வேன்களில் அடிக்கடி கடத்தி செல்லப்படுகிறது. 

    இதனை தடுக்க போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    நேற்று இரவு பள்ளிகொண்டா போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீஸ்காரர்கள் ஷியாம் சுந்தர், சத்ரியன் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் பெங்களூரிலிருந்து வேன் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் தடை செய்யப்பட்ட ரூ.9.09 லட்சம் மதிப்பிலானகுட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் சென்னைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து வேனை ஓட்டி வந்த ஓசூரை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேன் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூரில் இன்று நள்ளிரவில் 7 புஷ்ப பல்லக்குகள் பவனி நடைபெறுகிறது.
    வேலூர்:

    வேலூர் மாநகர பகுதியில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று புஷ்ப பல்லக்குகள் பவனி வரும் விழா கண் கொள்ளா காட்சியாக இருக்கும். 

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழா நடக்கவில்லை. கொரோனா பாதிப்பு தொற்று முற்றிலும் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

    விழாக்கள் நடத்தவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர், அரிசி மண்டி உரிமையாளர்கள் சார்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகர், வெல்ல மண்டி உரிமையாளர்கள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர், பூ மார்க்கெட் தொழிலாளர்கள் சார்பில் லாங்கு பஜார் வேம்புலி அம்மன், மோட்டார் வாகன பணியாளர்கள் சங்கம் சார்பில் விஷ்ணு துர்கை அம்மன் உட்பட 7 புஷ்ப பல்லக்குகள் ஊர்வலத்தில் பங்கேற்க உள்ளது.

    அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு மண்டி வீதி  வழியாக இரவில் வருகிறது.  மண்டி வீதி வந்தடையும் பூப்பல்லக்குகளில் வீற்றிருக்கும் உற்சவ மூர்த்திகளுக்கு அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டு வானவேடிக்கைகள் நடக்கிறது. 

    பின்னர் மேளதாளங்களுடன் 7 பூப் பல்லக்குகள் புறப்பட்டு  லாங்கு பஜார், கமிசரி பஜார், பில்டர் பெட்ரோடு திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அண்ணாசாலை வழியாக கோட்டைக்கு வருகிறது. அங்கு வானவேடிக்கைகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுகின்றனர்.
    வேலூரில் 103 டிகிரி வெயிலால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டது. சில வாரங்களாக வெயில் சதம் அடிப்பதும், பிறகு சற்று குறைவதுமாக போக்கு காட்டிக் கொண்டிருக் கிறது. பகல் நேரத்தில் வெளியில் தலைகாட்டவே முடியாத அளவுக்கு வெப்ப காற்று வீசுகிறது.

    நேற்று வழக்கத்துக்கு மாறாக வெயில் கொளுத்தியது. இதனால் வெப்பத்தின் அளவு அதிகரித்து அனல்காற்று வீசியது. சாலைகளில் கானல் நீர் தெரிந்தது. வெயிலுக்கு பயந்து மக்கள் குடை பிடித்தபடி வெளியில்  சென்றனர்.

    வெப்பக்காற்று வீசிய தால் வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றி சென்று வந்தனர். கடுமையான வெப்பம் தாங்க முடியாமல் வியர்வை மழையில் நனைந்தபடியே நடையைக் கட்டினர். 

    நேற்று அதிகபட்சமாக வேலூரில் 103.1 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்த்து. வேலூரில் வெயில் கொளுத்தினாலும், பக்கத்து மாவட்டமான திருப்பத்தூரில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    வேலூரில் கோடை வெயில் தாக்கத்தை தணிக்க மழை பெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வருண பகவானை வேண்டி உள்ளனர்.
    காட்பாடியில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற கோரி பா.ம.க.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    பா.ம.க சார்பில் மத்திய ரெயில்வே மந்திரியாக வேலு இருந்தபோது அறிவிக்கப்பட்ட ரெயில்வே திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரி இன்று காட்பாடி ரெயில் நிலையம் முன்பாக பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்-திற்கு பா.ம.க மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் பி. கே.வெங்கடேசன், கே.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே மந்திரியாக இருந்த வேலு திண்டிவனம்-நகரி, திருவண்ணாமலை -திண்டிவனம், தர்மபுரி-மொரப்பூர், ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி, சென்னை- மகாபலிபுரம்- கடலூர், ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரெயில்வே திட்ட பணிகளை அறிவித்தார். கடந்த 16 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரி கோஷமிட்டனர். 

    ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் பாபி கதிரவன் காட்பாடி ஒன்றிய செயலாளர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.9 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
    பள்ளிகொண்டா:

    வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் நடமாட்டத்தை அறவே ஒழிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி போலீசார் ஆங்காங்கே வாகன சோதனை செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மேலும் பெங்களூருவில் இருந்து வேலூர் வழியாக சென்னைக்கு குட்கா பொருட்கள் கார் வேன்களில் அடிக்கடி கடத்தி செல்லப்படுகிறது.

    இதனை தடுக்க போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீஸ்காரர்கள் ஷியாம் சுந்தர், சத்ரியன் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் பெங்களூருவிலிருந்து வேன் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் தடை செய்யப்பட்ட ரூ.9.09 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் சென்னைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து வேனை ஓட்டி வந்த ஓசூரை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேன் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிம்புதேவன், மாவட்ட தலைவர் லோகேஷ், குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொருளாளர் உமாபதி துணைத்தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

    மாநில துணை தலைவர் தேவதாஸ் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சங்கர் மேஸ்திரி கவுரவத் தலைவர் கோவிந்தராஜ் சட்ட ஆலோசகர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். எப்.சி கட்டண உயர்வு, வாகன பதிவு சான்றிதழ், வாகன தகுதி சான்றிதழ், புதுப்பிக்க சான்றிதழ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் .சுங்கச்சாவடி கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    வாகனங்கள் மீது போடப்படும் புதிய அபராத கட்டணத்தை குறைக்க வேண்டும். வாகன சோதனை என்று பொய் வழக்கு, ஆன்லைனில் வழக்கு, கெடுபிடி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். வேலூர் மாநகரில் தினம் தினம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சாலை வழித்தடத்தை மாற்றி அமைப்பது கைவிடவேண்டும். 

    யாரோ ஒரு நபர் குற்றச் செயலில் ஈடுபட்டதாக கூறி ஒட்டுமொத்த ஆட்டோ தொழிலாளர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
    வேலூர் நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ, மேயர் ஆய்வு செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாங்காய் மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாய் தூர்வாரும் பணியை வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். 

    அப்போது அங்கு வந்த மாங்காய் மண்டி வியாபாரிகள் ஒரு சிலர் டெண்டர் எடுக்காமலேயே மாங்காய் மண்டிக்கு பழங்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு வரி வசூல் செய்வதாகவும், மாங்காய் மண்டியில் சேரும் குப்பைகளை சேகரிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் மாங்காய் மண்டி அருகிலேயே மலைபோல் குவித்து விடுகின்றனர். 

    இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன வரி வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

    இதையடுத்து 31 வது வார்டு அவ்லியா ஷா தர்கா தெருவில் ஆய்வு செய்த போது அங்கிருந்த பொதுமக்கள் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்குவதாகவும், அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் திறந்தவெளியை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். 

    மேலும் மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து வீடுகளில் புகுந்து விடுவதாகவும் மதில் சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மேயர் சுஜாதா 6 மாதங்களில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தரைப்பாலம் சீரமைப்பு தொடங்கியது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா மாநில அளவில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவாகும். கொரோனாதொற்று காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர் . முன்னேற்பாடுகள் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு கவுண்டன்யமகாநதி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக கெங்கையம்மன் கோவில் தரைப்-பாலம் சீரமைக்கப்பட்டது. 

    சுமார் மூன்றடி உயரத்திற்கு கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. தற்போது கவுண்டன்யமகாநதி ஆற்றில் தண்ணீர் செல்லாததாலும், தரைமட்டத்தை விட கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் மூன்றடிக்கு மேல் உயரமாக, அகலம் குறைவாக இருப்பதாலும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

    கெங்கையம்மன் சிரசு திருவிழாவின்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்ல மிகவும் சிரமமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தின் உயரத்தை எந்திரங்கள் மூலம் 3 அடி அளவு குறைத்தும் தரைத்தளத்தை அகலப்படுத்தி அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

    இப்பணிகளை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் தேவகி கார்த்திகேயன், ஆட்டோ மோகன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப் -இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதால் அந்த வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. 

    3 நாட்களில் இப்பணிகள் முடிவு பெறும் என கூறப்படுகிறது. அதன்பின் வாகனங்கள் தரைப் பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    குடியாத்தத்தில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.திருக்கல்யாணத்தை முன்னிட்டு சாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோவில் தர்மகர்த்தா பி.ஹேமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஏ.அமுலு அமர், மீனாட்சி அம்மன் நகர் குடியிருப்போர் நலச்சங்க சட்ட ஆலோசகர் கே எம். பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருமாங்கல்யம் பிரசாதம் வழங்கப்பட்டது, தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கல்யாணம் மற்றும் கும்பாபிஷேக கமிட்டியினர், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    வேலூர்:

    அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி கழகங்களுக்கு நடந்த தேர்தலில் முதல் கட்டமாக வேலூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு;-

    வேலூர் மாநகர பகுதியில் காட்பாடி வடக்குப் பகுதி கழக நிர்வாகிகள் விவரம்:-

    பகுதி அவைத்தலைவராக குமார், பகுதி செயலாளராக ஜனார்த்தனன், பகுதி இணைச்செயலாளராக தேவிகா, பகுதி துணை செயலாளர்கள் தீபா, ராமமூர்த்தி, பகுதி பொருளாளர் குமார், மாவட்ட பிரதிநிதிகள் சுந்தரி, லோகநாதன், குமார்,

    காட்பாடி தெற்குப் பகுதி கழக நிர்வாகிகள்:-

    பகுதி அவைத்தலைவராக பூபாலன், பகுதி செயலாளராக ரவி, பகுதி இணைச் செயலாளராக வசந்தி, தொகுதி துணை செயலாளர்களாக செல்வி ரவி, ராஜேந்திரன், பகுதி பொருளாளராக சம்பத், மாவட்ட பிரதிநிதிகளாக அமுலுஜோதி, சுரேஷ்குமார், பாபு,

    காட்பாடி மேற்கு பகுதி கழக நிர்வாகிகள்:-

    பகுதி அவைத்தலைவராக ராஜா, பகுதி செயலாளராக நாராயணன், பகுதி இணைச் செயலாளராக சரஸ்வதி, பகுதி துணை செயலாளர்களாக சித்திரா ,கஜேந்திரன், பகுதி பொருளாளராக மோகன், மாவட்ட பிரதிநிதிகள் மல்லிகா ,கணேசன், சம்பத்,

    வேலூர் கிழக்கு பகுதி கழக நிர்வாகிகள்:-

    பகுதி அவைத்தலைவராக பிரகாசம், பகுதி செயலாளராக குப்புசாமி, பகுதி இணை செயலாளராக சரஸ்வதி, பகுதி துணை செயலாளர்களாக தரணி, குமார், பகுதி பொருளாளராக செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகளாக ஜமுனாராணி, பூபதி, மோகனவேல்,

    வேலூர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள்:-

    பகுதி அவைத்தலைவராக சிவாஜி, பகுதி செயலாளராக நாகு ( எ) நாகராஜன், பகுதி இணை செயலாளராக மகேஸ்வரி, பகுதி துணை செயலாளர்களாக கஸ்தூரி, பாபு, பகுதி பொருளாளராக கோட்டிஸ்,
    மாவட்ட பிரதிநிதிகளாக விஜயலட்சுமி, ஜமில் பாஷா, சதாசிவம்,

    சத்துவாச்சாரி கிழக்கு பகுதி கழக நிர்வாகிகள்:-

    பகுதி அவைத்தலைவராக ஜானகிராமன், பகுதி செயலாளராக ஏபிஎல் சுந்தரம், பகுதி இணைச் செயலாளராக சரளா சக்கரவர்த்தி, பகுதி துணை செயலாளர்களாக பிரியா உமாநாத் , சீனிவாசன், பகுதி பொருளாளராக சி.கே.சிவாஜி, மாவட்ட பிரதிநிதிகளாக வந்தனா சம்பத், சோமு, குமார்
     
    சத்துவாச்சாரி மேற்குப் பகுதி கழக நிர்வாகிகள்:-

    பகுதி அவைத்தலைவராக ரேணுகோபால், பகுதி செயலாளராக அன்வர் பாஷா, பகுதி இணைச் செயலாளராக அம்மு என்கிற கோகிலா, பகுதி துணை செயலாளர்களாக ஜெயா ரவி, மீனாட்சி சுந்தரம், பகுதி பொருளாளராக நீல நாராயணன், மாவட்ட பிரதிநிதிகளாக மகேஸ்வரி, வெங்கடேசன் ,சேகர்,

    சத்துவாச்சாரி வடக்கு பகுதி கழக நிர்வாகிகள்:-

    பகுதி அவைத்தலைவராக ஆறுமுகம், பகுதி செயலாளராக ஜெய்சங்கர், பகுதி இணைச் செயலாளராக தமிழ்ச்செல்வி, பகுதி துணை செயலாளர்களாக கவிதா ராணி ,முரளி, பகுதி பொருளாளராக பன்னீர், மாவட்ட பிரதிநிதிகளாக மும்தாஜ் காலேஷா கிருஷ்ணன், ராஜி,

    அல்லா புரம் கிழக்கு பகுதி கழக நிர்வாகிகள்:-

    பகுதி அவைத்தலைவராக ரமேஷ், பகுதி செயலாளராக சொக்கலிங்கம், பகுதி இணைச் செயலாளராக நவநீதம், பகுதி துணை செயலாளர்களாக லட்சுமி ,கணபதி, பகுதி பொருளாளராக அசோகன், மாவட்ட பிரதிநிதிகளாக அருள்மொழி, சிவராமன், செந்தில்குமார்,

    அல்லாபுரம் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள்:-

    பகுதி அவைத்தலைவராக லோகநாதன், பகுதி செயலாளராக பாண்டியன், பகுதி இணைச் செயலாளராக வசந்தி, பகுதி துணை செயலாளர்களாக இந்துமதி, ராமலிங்கம், பகுதி பொருளாளராக விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகளாக ராணி, ரகுநாதன் ,ரமேஷ் பாபு,

    ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் காட்பாடி கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்:-

    ஒன்றிய அவைத் தலைவராக பிச்சாண்டி, ஒன்றிய செயலாளராக ஸ்ரீசைலம், ஒன்றிய இணைச் செயலாளராக சாந்தி, ஒன்றிய துணை செயலாளர்களாக செல்வி ஜோதி, தனஞ்செழியன், ஒன்றிய பொருளாளராக சுப்பிரமணி, மாவட்ட பிரதிநிதிகளாக வனிதா, கருணாமூர்த்தி, சம்பந்தன்,

    காட்பாடி மத்திய ஒன்றிய கழக நிர்வாகிகள்:-

    ஒன்றிய அவைத் தலைவராக மனோகரன், ஒன்றிய செயலாளராக சின்னதுரை, ஒன்றிய இணைச் செயலாளராக தரணி சுப்பிரமணி, ஒன்றிய துணை செயலாளர்களாக வசந்தி ரஜினி, வெங்கடேசன், ஒன்றிய பொருளாளராக சேட்டு, மாவட்ட பிரதிநிதிகளாக லதா ,தசராஜன், கிருபானந்தம்,

    காட்பாடி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்:-

    ஒன்றிய அவைத் தலைவராக ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளராக சுபாஷ், ஒன்றிய இணைச் செயலாளராக ஹேமாவதி, ஒன்றிய துணை செயலாளர்களாக கெஜலட்சுமி, வஞ்சூர் ரவிச்சந்திரன்,
    ஒன்றிய பொருளாளராக முனியாண்டி, மாவட்ட பிரதிநிதிகளாக பிரேமா, விஸ்வநாதன், கண்ணபிரான்,

    வேலூர் புறநகர் மாவட்டம் வேலூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்:-

    ஒன்றிய அவைத் தலைவராக துரை, ஒன்றிய செயலாளராக மணிமாறன், ஒன்றிய இணைச் செயலாளராக கீதா, ஒன்றிய துணைச் செயலாளராக ஸ்ரீதேவி ,முத்தமிழ் சுற்றுலா, ஒன்றிய பொருளாளராக பூபதி, மாவட்ட பிரதிநிதிகளாக சாந்தி, செந்தில்குமார், காந்தி,

    வேலூர் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்:-

    ஒன்றிய அவைத் தலைவராக ரங்கநாதன், ஒன்றியச் செயலாளராக நாகராஜ், ஒன்றிய இணைச் செயலாளராக ரஞ்சிதா, ஒன்றிய துணை செயலாளர்களாக புனிதா, கண்ணதாசன், ஒன்றிய பொருளாளராக சண்முகம், மாவட்ட பிரதிநிதிகளாக தசரதன், சுகுமார், வனிதா,
    ×