என் மலர்
வேலூர்
டோலிகட்டி நோயாளியை தூக்கி வரும் அவலத்தை தடுக்க மலைக்கிராமத்தில் தற்காலிக ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதி அதிக மலை கிராமங்களை கொண்டதாகும். சுமார் 20- ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மலை கிராமங்களுக்கு சாலை வசதி என்பது இன்னமும் நிறைவேறாத நிலையிலேயே உள்ளது. இதனால் கர்ப்பிணிகள், நோய்வாய் படுபவர்களை மலை கிராமங்களுக்கு கீழே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டோலி கட்டி தூக்கி வரும் நிலையே தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளக்கல் மலை பகுதியை சேர்ந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் வனப்பகுதிக்குள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் டோலி கண்டி தூக்கி வரப்பட்ட சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.
வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்-சவுந்தர்யா தம்பதியினர், லட்சுமணன் உயிரிழந்த நிலையில் சவுந்தர்யா (31) பிள்ளைகளோடு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
நேற்று அப்பகுதி மக்கள் டோலி கட்டி 3 கிலோ மீட்டர் தூரம் வெள்ளக்கல்லில் இருந்து குருமலை வரை வனப்பகுதிக்குல் தூக்கி வந்தனர். பின்னர் குருமலையில் இருந்து வேன் மூலம் அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதேபோல கடந்த ஆண்டு கர்ப்பிணி பெண் ஒருவர் டோலி கட்டி தூக்கிசெல்லப்பட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குருமலை பகுதியில் நேரில் ஆய்வு செய்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 படுக்கையுடன் கூடிய தற்காலிக துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்து கொடுத்து, அரசு கட்டிடம் கட்ட நிதியும் ஒதுக்கியிருந்தார்.
ஆனாலும் இது போன்ற அவல நிலை அவ்வப்போது தொடர்வதால் மலை வாழ் மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். தங்கள் மலை கிராமங்களுக்கு விரைந்து சாலை அமைத்துகொடுக்க வேண்டும், குறிப்பாக மலையில் நிரந்தரமான மருத்துவருடன் கூடிய துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
கடந்த ஆண்டே குருமலையில் துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கியும் ஆனால் இதுநாள் வரை கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கவில்லை.
அரசு கட்டிடம் கட்டி அதில் மருத்துவரோடு கூடிய துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டால் இது போன்ற அவல நிலை தொடராது என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் குருமலை அரசு பள்ளியில் இன்று முதல் தற்காலிக ஆஸ்பத்திரி அமைக்க உத்தரவிடப்பட்டது. இதில் ஒரு டாக்டர், நர்சு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
காட்பாடியில் தக்காளி லாரியில் கடத்திய 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தப்படு-வதாக அந்தந்த மாவட்ட போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர்-கள் தமிழ்நாட்டில் இலவ-சமாக கொடுக்கப்-படும் ரேசன் அரிசியை கடத்தல் கும்பல் அந்தந்த மாவட்டத்தில் குழுவாக பிரிந்து குறைந்த விலைக்கு வாங்குகின்றனர்.
இதனை மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு, ஆட்டோ, கார் மூலம் ரெயில் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் ரெயில் பெட்டிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டு ரேசன் அரிசி கும்பல் தனக்கும் அந்த மூட்டைக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் சுற்றித் திரிவர். ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு அனுப்பி வைத்து அதனை பாலிஷ் செய்து அதிக லாபத்திற்கு விற்கப்படுகிறது.
இதனை அந்தந்த மாவட்ட போலீசார் அவ்வப்போது சோதனை செய்து தடுக்கின்றனர். இதனையும் மீறி நூதன முறையில் ரேசன் அரிசியை கடத்துகின்றனர்.
தக்காளி கூடைகள் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வேலூரில் இருந்து ஆந்திரா நோக்கி காட்பாடி சோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. அதனை வேலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தக்காளி கூடை-களுக்கு நடுவே 5 டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அரிசி மூட்டைகள் தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்தி சென்று விற்க முயன்றது தெரிந்தது.
நூதனமான முறையில் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்திய வேலூர் அப்துல்லா-புரம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கருணாகரன் ஆகியோரை குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை மோட்டூர் பகுதியை சோர்ந்தவர் அம்பிகா (வயது 63). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய நிலத்தில் விளைந்த உளுந்தை சாலையில் காய வைத்துவிட்டு வீட்டின் அருகே அமர்ந்து உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 25 வயதுடைய 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்களில் ஒரு வாலிபர் அம்பிகாவுடன் அமர்ந்திருந்த உறவினரை தண்ணி எடுத்து வரும்படி வீட்டுக்குள் அனுப்பியுள்ளார்.
இந்த நேரத்தில் அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை அந்த வாலிபர் திடீரென பறித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட அம்பிகா நகையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் 2 பவுன் நகை அவருடைய கையில் சிக்கிக் கொண்டது.
5 பவுனை அந்த வாலிபர் பறித்து கொண்டு பைக்கில் தயார் நிலையில் இருந்த மற்றொரு வாலிபருடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து அம்பிகா அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறதா என ஆய்வு போலீசார் செய்தனர்.
மேலும் இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை சேர்ந்த முறுக்கு வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து பஞ்சம் பிழைக்க 20 குடும்பங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் நகருக்கு வந்தோம். கடந்த 1995&ம் ஆண்டு முதல் வறுமை கோட்டுக்கு கீழ் வசித்து வருகிறோம்.
முறுக்கு வணிகம் செய்து வாழ்ந்து வருகிறோம் நாங்கள் 20 குடும்பங்கள் வீட்டுவரி, மின் கட்டணம் ஆகியவற்றை முறையாகக் கட்டி வருகிறோம்.
தற்போது மாவட்ட நிர்வாகம் கட்டளைப்படி குடி இருந்த வீட்டை காலி செய்யுங்கள் என அதிகாரிகள் கூறியதன்படி நாங்கள் இடத்தை காலி செய்து விட்டோம். இதுவரை எங்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை.
இதனால் சுமார் 20 வணிகக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு மாற்றி இடம் வழங்கி எங்கள் குடும்பத்திற்கு வாழ்வளிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
வேலூரில் கடந்த சில நாட்களாக 103 டிகிரி வெயில் கொளுத்தி வந்தது. இதனால் அனல் காற்றில் மக்கள் அவதிப்பட்டனர்.
வேலூர்:
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு சூறை காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது. மழையுடன் சூறை காற்று வீசியதால் கிராம புறங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.
திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட தெருக்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஆலங்காயத்தில் 18.70 மில்லி மீட்டரும், திருப்பத்தூரில் 9.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வந்த நிலையில் கோடை மழையால் குளிர்ச்சியாக சீதோஷ்ண நிலை மாறியுள்ளது.
ஆம்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதியிலும் கருமேகங்கள் திரண்டு சூறை காற்று வீசியது. காற்று பலமாக வீசியதால் குறைவான அளவிலே மழை பெய்தது.
வேலூரில் கடந்த சில நாட்களாக 103 டிகிரி வெயில் கொளுத்தி வந்தது. இதனால் அனல் காற்றில் மக்கள் அவதிப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று வீசியது. அத்துடன் 12.15 மணிக்கு லேசான சாரல் மழையும் பெய்தது. கனமழை பெய்யாதா? என்று காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், நேற்றும் வெயில் வறுத்து எடுத்தது. மாலை 4.15 மணிக்கு நிலைமை அடியோடு மாறியது. திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல காற்று வீசும் வேகமும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் சூறைக்காற்று சுழன்று, சுழன்று வீசியதில் சாலையில் இருந்த பேனர்கள், விளம்பர பலகைகள் பறந்தன. சாலைகளில் பைக்குகளில் சென்றவர்கள் வண்டி ஓட்ட முடியாமல் தடுமாறினர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இந்நிலைமை நீடித்தது. புழுதிப்புயல்போல் வீசியதால் சாலைகள் முழுவதும் மணல் குவிந்து கிடந்தது.
பிறகு லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது. சிறு, சிறு தூரல்கள் மட்டுமே அவ்வப்போது விழுந்தது. இதனால், ஓரளவு வெப்பம் தணிந்து காணப்பட்டது. இருப்பினும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வேலூர் நகரைச் சுற்றியுள்ள காட்பாடி, கணியம்பாடி, பொய்கை, பள்ளிகொண்டா போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது.
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு சூறை காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது. மழையுடன் சூறை காற்று வீசியதால் கிராம புறங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.
திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட தெருக்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஆலங்காயத்தில் 18.70 மில்லி மீட்டரும், திருப்பத்தூரில் 9.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வந்த நிலையில் கோடை மழையால் குளிர்ச்சியாக சீதோஷ்ண நிலை மாறியுள்ளது.
ஆம்பூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதியிலும் கருமேகங்கள் திரண்டு சூறை காற்று வீசியது. காற்று பலமாக வீசியதால் குறைவான அளவிலே மழை பெய்தது.
வேலூரில் கடந்த சில நாட்களாக 103 டிகிரி வெயில் கொளுத்தி வந்தது. இதனால் அனல் காற்றில் மக்கள் அவதிப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று வீசியது. அத்துடன் 12.15 மணிக்கு லேசான சாரல் மழையும் பெய்தது. கனமழை பெய்யாதா? என்று காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், நேற்றும் வெயில் வறுத்து எடுத்தது. மாலை 4.15 மணிக்கு நிலைமை அடியோடு மாறியது. திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல காற்று வீசும் வேகமும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் சூறைக்காற்று சுழன்று, சுழன்று வீசியதில் சாலையில் இருந்த பேனர்கள், விளம்பர பலகைகள் பறந்தன. சாலைகளில் பைக்குகளில் சென்றவர்கள் வண்டி ஓட்ட முடியாமல் தடுமாறினர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இந்நிலைமை நீடித்தது. புழுதிப்புயல்போல் வீசியதால் சாலைகள் முழுவதும் மணல் குவிந்து கிடந்தது.
பிறகு லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது. சிறு, சிறு தூரல்கள் மட்டுமே அவ்வப்போது விழுந்தது. இதனால், ஓரளவு வெப்பம் தணிந்து காணப்பட்டது. இருப்பினும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வேலூர் நகரைச் சுற்றியுள்ள காட்பாடி, கணியம்பாடி, பொய்கை, பள்ளிகொண்டா போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூரில் நள்ளிரவில் புஷ்ப பல்லக்குகள் பவனி வந்தது.
வேலூர்:
வேலூரில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று புஷ்ப பல்லக்குகள் பவனியால் விழா களைகட்டும். அன்றைய தினம் இரவு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரியில் இருந்தும் திரளான பக்தர்கள் விழாவை காண வேலூரில் கூடுவது வழக்கம்.
இதனால் வேலூர் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த நிலையில் கோரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புஷ்ப பல்லக்கு விழா நடைபெறவில்லை இந்த ஆண்டு கொரோனா கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டு சித்ரா பவுர்ணமியை யொட்டி புஷ்ப பல்லக்கு விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோவிலில் இருந்து அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் புஷ்பப் பல்லக்கு, அரிசி மண்டி வியாபாரிகள் சார்பில் வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் புஷ்ப பல்லக்கு, வெல்லமண்டி வியாபாரிகள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோவில் பல்லக்கு, மோட்டார் வாகன பணிமனை உரிமையாளர்கள் சார்பில் காட்பாடி ரோடு விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் புஷ்ப பல்லக்கு,
வாணியர் வீதி கனகதுர்க்கை அம்மன் கோவில் பல்லக்கு, புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சார்பில் வேம்புலி அம்மன் கோவில் புஷ்ப பல்லக்கு, புஷ்ப தொழிலாளர்கள் சார்பில் அரச மரப்பட்டை லட்சுமி நாராயண சாமி கோவிலில் இருந்து பூப்பல்லக்கு ஆகிய பல்லக்குகள் வண்ண மின் விளக்கு களாலும் மலர் களாலும் அலங்கரிக்கப்பட்டு பவனி வந்தது-.
விழாவை யொட்டி வேலூரில் 4 இடங்களில் இன்னிசைக் கச்சேரி நடந்தது. திரளான பக்தர்கள் இன்னிசைக் கச்சேரியை ரசித்தபடி புஷ்ப பல்லக்கையும் பார்த்து ரசித்தனர்.
நள்ளிரவு புஷ்ப பல்லக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து மண்டி வீதிக்கு வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. பின்னர் திருப்பதி தேவஸ்தானம், அண்ணாசாலை, வழியாக கோட்டை முன்பு நிலையை வந்தடைந்தன.
விடிய விடிய நடந்த இந்த புஷ்ப பல்லக்கை வழிநெடுக பக்தர்கள் கண் விழித்து காத்திருந்து ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர். சித்ரா பவுர்ணமி புஷ்பப் பல்லக்கையொட்டி ஏ.டி.எஸ்.பி சுந்தரமூர்த்தி தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காட்பாடியில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிக்கனத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.
வேலூர்:
காட்பாடி அரசு சட்டக் கல்லூரி அருகில் இருந்து பெட்ரோல் டீசல் சிக்கனத்தை வலியுறுத்தி இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் சைக்கிள் பேரணி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு காட்பாடி டி.எஸ்.பி பழனி தலைமை தாங்கி சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சென்னை பகுதி அதிகாரி திலகவதி, வேலூர் மாவட்ட விற்பனை அதிகாரி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெட்ரோல் டீசல் கேஸ் சிக்கனத்தை வலியுறுத்தி சில்க் மில், ஓடை பிள்ளையார் கோவில், ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா, காங்கேய நல்லூர் ரோடு வழியாக வந்து மீண்டும் அரசு சட்டக்கல்லூரி முன்பாக சைக்கிள் பேரணி முடிவடைந்தது. பேரணியில் வேலூர் மாவட்ட விநியோ-கஸ்தர்கள் 150&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வேலூர் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் அடுத்த விரிஞ்சி புரம் விமான நிலைய சந்திப்பு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்-பெக்டர்கள் ரவி, சேகரன் போலீஸ்காரர்கள் கோபால், மணி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேலூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 500 கிலோ எடையுள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காரில் இருந்த 2 வடமாநில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெங்களூரி லிருந்து சென்னைக்கு குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்தனர். பின்னர் காருடன் குட்காவை பறிமுதல் செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
காட்பாடி கிளித்தான் பட்டறையில் லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
வேலூர்:
காட்பாடி கிளிதான் பட்டறையை சேர்ந்தவர் ராமன் (வயது 45).இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்கிற குள்ளன். நண்பர்களான இருவரும் கிளிதான் பட்டறையில் உள்ள தனியார் தங்கும் விடுதி அருகே மது அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் வழக்கம்போல் மது அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அருகில் இருந்த கட்டையை எடுத்து ராமனை சரமாரியாக தாக்கினார்.
இதில் ராமனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயமடைந்த ராமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ராமன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வத்திடம் என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மண்டலத்தில் 3,286 பேருக்கு இலவச மின் இணைப்பு ஆணை வழங்கப்பட்டது.
வேலூர்:
தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2001 முதல் மின் இணைப்பு கோரி லட்சக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்து காத்திருந்தனர்.
இதில் 2001 முதல் 2016-ம் ஆண்டு வரை பதிவு செய்து காத்திருக்கும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஓராண்டுக்குள் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 23-&ந்தேதி தொடங்கி வைத்தார்.
இந்த ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் மின்வாரியத்தின் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர் மாவட்டத்தில் 1,204 விவசாயிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 2,082 விவசாயிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 286 விவசாயிகளுக்கு கடந்த மார்ச் 31-க்குள் இலவச மின் இணைப்பு வாங்கப்-பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த இரு மாவட்டங்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த இலக்கு நிறைவு செய்யப்-பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 2021-22-ம் ஆண்டில் விவசாய மின் இணைப்பு பெற்ற பயனாளிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி சனிக்கிழமை காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக் கழகம், குடியாத்தம், பள்ளிகொண்டா ஆகிய 3 இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வி.ஐ.டி. பல்கலைக்-கழகத்-தில் நடந்த நிகழ்ச்சியில் நூற்றுக்-கணக்கான விவசாயிகள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
பின்னர் இலவச மின் இணைப்பு ஆணையை விவசாயிகளிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், வேலூர் டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
இதில் கோட்டாட்சியர் பூங்கொடி, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், மின் பகிர்மான கழக வேலூர் மண்டல தலைமை பொறியாளர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேலூரில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
வேலூர்:
வேலூர் டோல்கேட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜப்பான் ஷிட்டோ&ரியோ சார்பில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன், கராத்தே வீரர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்.
ஹாய், கட்டா 2 பிரிவுகளில் அனைத்து வயது பிரிவினருக்கான கராத்தே போட்டி நடந்தது. போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட இந்தியாவில் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கராத்தே ரமேஷ் பயிற்சியாளர் லட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தத்தில் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் காணொளி காட்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
குடியாத்தம்:
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி கருத்தரங்க மண்டபத்தில் தமிழ்நாடு மின்சாரவாரியம் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டதை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சிகள் மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரிய குடியாத்தம் கோட்ட செயற்பொறியாளர் வி.எம்.வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறி யாளர்கள் ஆர்.சீனிவாசன் பி. வெங்கடேசன், பி.பெருமாள், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன் பிரபு, ஜோதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் மாலினி ஜோதிராம் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், ஆம்பூர் எம்.எல்.ஏ. ஏ.சி. வில்வநாதன், குடியாத்தம் தாசில்தார் லலிதா, குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு முதல்வர் பேசிய வாழ்த்துரை நிகழ்ச்சி அனைவரும் கண்டுகளித்தனர்.
தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிகாரிகளிடமும் சட்டமன்ற உறுப்பினர்கள் இடமும் பேசினார்கள் அப்போது பேசிய அதிகாரிகள் குடியாத்தம் கோட்டத்தில் 309 விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் மின்னிணைப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர் முடிவில் இளநிலை பொறியாளர் முத்துராமன் நன்றி கூறினார்.






