என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதக்கும் மீன்கள் படகு மூலம் அகற்றப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் கோட்டை133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையை சுற்றிலும் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் வற்றாத தண்ணீரை கொண்டுள்ளது.

    இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் அகழிநிரம்பி அதில் இருந்து உபரி நீர் வெளியேறி ஜலகண் டேஸ்வரர் கோவிலுக்குள் புகுந்தது.

    இதனால் சில நாட்கள் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தண்ணீர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.தற்போது அகழியில் நீர் மட்டம் குறைந்த காரணத்தினால் கோவிலுக்குள் புகுந்த தண்ணீரும் வெளியேறியது.
    வேலூரில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக கோட்டை அகழியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. 

    ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் அகழியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

    தொல்பொருள் துறை அதிகாரிகள் அகழியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற ஏற்பாடு செய்தனர்.அதன்படி இன்று படகு மூலம் ஊழியர்கள் அகழியில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

     ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் இன்று காலை முதல் மாலை வரை செத்து மிதந்த மீன்கள் அகற்றும் பணி நடந்தது.
    வேலூர், ஆற்காடு சாலையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகரின் முக்கிய சாலையாக ஆற்காடு சாலை திகழ்கிறது.எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதற்கு ஆக்கிரமிப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. 

    காமராஜர் சிலை சந்திப்பு பகுதியில் இருந்து காகிதப்பட்டறை கலெக்டர் அலுவலகம் வரை சாலையின் ஒரு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அதிரடியாக அகற்றப்பட்டன.

    இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொண்டனர். அப்போது கடைகளின் முன் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மேற்கூரைகள், படிக்கட்டுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
     
    மேலும் சில இடங்களில் தள்ளுவண்டி கடைகளும் தகரத்தால் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்பட்டன.

    ஆக்கிரமிப்பு அகற்றியதால் ஆற்காடு சாலை பல இடங்களில் 100 அடிக்கு மேல் அகலமாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிக்காமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    வேலூரில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் நடந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் இன்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர், மாநகர் மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், இணை செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர் பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிக்கான தேர்தல் மாநகர அ.தி.மு.க அலுவலகம் மற்றும் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    மாநகரத்திற்கு காட்பாடி கட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் சின்னையா, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் மனுக்கள் பெற்றனர்.

    மாநகர மாவட்ட செயலாளர் பதவிக்கு தற்போதைய மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். கே.அப்பு மற்றும் பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சதீஷ் குமார், சூளை ஆனந்தன் ஆகியோர் மனு அளித்தனர். மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் ராமு மற்றும் அ.தி.மு.க மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் டி.ஆர்.முரளி ஆகியோர் சார்பாக மாவட்ட செயலாளர் பதவிக்கு விண்ணப்பம் அளிக்க வந்தனர்.

    அவர்களை வேலூர் மாநகர மாவட்ட நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். ராமு, முரளி ஆகியோர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கூடாது.அவர்கள் புறநகர் மாவட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் ராமு, முரளி ஆகியோர் சார்பில் மனு கொடுக்க வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அவர்களை மனு கொடுக்க விடாமல் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க நிர்வாகிகள் உங்கள் மாவட்டத்தில் சென்று மனு அளியுங்கள் என தொடர்ந்து ஆவேசமாக குரல் எழுப்பினர்.

    அப்போது தேர்தல் பொறுப்பாளர்கள் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாநகர் மாவட்ட பதவிக்கு விண்ணப்பிக்கலாமா என்பது குறித்து கட்சி மேலிடத்தில் கேட்டு பின்னர் வாங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதனால் ராமு மற்றும் முரளி சார்பாக மனு அளிக்க வந்தவர்கள் மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

    இந்த சம்பவத்தால் அ.தி.மு.க உட்கட்சி தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டது. இன்றுத மாலை 5 மணி வரை விண்ணப்பம் அளிக்க கால அவகாசம் உள்ளது.

    புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் கந்தனேரியில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் வேலழகன் மனு அளித்தார்.
    வேலூரில் நெரிசல் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகரின் முக்கிய சாலையாக ஆற்காடு சாலை திகழ்கிறது. இந்த சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளிமாநிலங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையின் இருபுறமும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். பலர் கடைகளின் முன்பே வாகனங்களை நிறுத்தி வந்தனர்.இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக பல வருடங்களாக இருந்து வந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில்
    இன்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. மாநில நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் மற்றும் அதி காரிகள் மேற்பார்வையில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த கூரைகள் விளம்பர போர்டுகள் சிமெண்ட் சிலாப்புகள் படிக்கட்டுகள் உள்பட அனைத்தையும் அகற்றினர்.

    அகற்றப்பட்ட பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டு அங்கிருந்தும் அப்புறப்படுத்தப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றபட்டபோது வியாபாரிகள் பலர் தங்களது பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டனர்.

    எனினும் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அகற்றினர். ஆற்காடு ரோட்டில் கலெக்டர் அலுவலகம் வரை ஆக்கிரமிப்பு அகற்ற பட உள்ளது.

    இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், கருணாகரன் போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆக்கிரமிப்பையொட்டி ஆற்காடு சாலை பரபரப்பாக காணப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ஆற்காடு ரோட்டில் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் எடுத்துள்ளனர். ஆனால் சாலையோரம் மின்கம்பங்கள் உள்ளது. இந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது. 

    மின்கம்பங்களை உடனடியாக அகற்றி சாலையோரம் வைக்கப்பட வேண்டும். அதன் பிறகு அங்கு புதிய சாலை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் இனிவரும் நாட்களில் ஆக்கிரமிப்பு செய்வதை ஓரளவு தடுக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
    திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் வாணியம்பாடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மனு அளித்தார்
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் இன்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர், மாநகர் மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், இணை செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர் பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிக்கான தேர்தல் மாநகர அ.தி.மு.க அலுவலகம் மற்றும் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    மாநகரத்திற்கு காட்பாடி கட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் சின்னையா, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் மனுக்கள் பெற்றனர்.

    மாநகர மாவட்ட செயலாளர் பதவிக்கு தற்போதைய மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். கே.அப்பு மற்றும் பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சதீஷ் குமார், சூளை ஆனந்தன் ஆகியோர் மனு அளித்தனர். மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் ராமு மற்றும் அ.தி.மு.க மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் டி.ஆர்.முரளி ஆகியோர் சார்பாக மாவட்ட செயலாளர் பதவிக்கு விண்ணப்பம் அளிக்க வந்தனர்.

    அவர்களை வேலூர் மாநகர மாவட்ட நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். ராமு, முரளி ஆகியோர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கூடாது. அவர்கள் புறநகர் மாவட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் ராமு, முரளி ஆகியோர் சார்பில் மனு கொடுக்க வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அவர்களை மனு கொடுக்க விடாமல் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க நிர்வாகிகள் உங்கள் மாவட்டத்தில் சென்று மனு அளியுங்கள் என தொடர்ந்து ஆவேசமாக குரல் எழுப்பினர்.

    அப்போது தேர்தல் பொறுப்பாளர்கள் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாநகர் மாவட்ட பதவிக்கு விண்ணப்பிக்கலாமா என்பது குறித்து கட்சி மேலிடத்தில் கேட்டு பின்னர் வாங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதனால் ராமு மற்றும் முரளி சார்பாக மனு அளிக்க வந்தவர்கள் மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

    இந்த சம்பவத்தால் அ.தி.மு.க உட்கட்சி தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பம் அளிக்க கால அவகாசம் உள்ளது.

    புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் கந்தனேரியில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் வேலழகன் மனு அளித்தார்.

    திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் வாணியம்பாடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மனு அளித்தார்

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் ராணிப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்தார். இதேபோல் செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் தூசி மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

    மாவட்ட செயலர் பதவிக்கு ரூ.25 ஆயிரம் மற்ற பதவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்று வேட்புமனுக்களை பொறுப்பாளர்களிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் கட்சித் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு அந்த பதவிக்கு யார் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட உள்ளது.




    பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில், கச்சுகுடா எக்ஸ்பிரஸ், கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள திருவலத்தில் கோவை, பெங்களூரு-சென்னை ரெயில் பாதையில் இன்று காலை மின்ஒயர் அறுந்து விழுந்தது.

    இதனால் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில், கச்சுகுடா எக்ஸ்பிரஸ், கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    காட்பாடி ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் ஒயர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
    தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு டி.சி. வழங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    அப்போது கலெக்டர் கூறுகையில்:-

    வேலூர் மாவட்டத்தில் இடைநின்ற பள்ளி மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்சமந்தை மலைகிராமங்களில் பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

    இதனால் பீஞ்சமந்தையில் உள்ள ஆண்கள் விடுதி தற்போது மாணவி-கள் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் ஆண்கள் விடுதி செயல்படுத்தப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மாணவ மாணவிகளுக்கு டி.சி கொடுக்க மறுத்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு டிசி கொடுக்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பள்ளி மேலாண்மை மறு-கட்ட-மைப்பு முதற்கட்டமாக 151 அரசு நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பள்ளி மேலாண்மை குழு மறு-கட்டமைப்பு சார்ந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்-புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் 7 வாகனங்கள் 8 ஒன்றியங்-களில் பொது-மக்கள் அதிகமாக கூடும் 140 இடங்களில் நடமாடும் ஊர்திகள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத்ஆகியோர் கலந்து கொண்டனர்.
    வேலூர் அம்மன் கோவிலில் புற்றுக்கு வெளியே வந்து பால் முட்டை சாப்பிடும் நாகப்பாம்பார் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் வேப்பங்காடு பகவதி மலையில் பகவதி அம்மன் கோவில் அமைந்-துள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் பாம்பு புற்று ஒன்று உள்ளது. 

    இதில் செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அப்போது புற்றின் மேல் முட்டை, பால் போன்றவை வைத்து வழிபடுகின்றனர். 

    பக்தர்கள் பலர் புற்றுக்குள் முட்டையை போடுகின்றனர். இதனை அதில் வாழும் நாகப்பாம்பு ஒன்று சாப்பிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பக்தர்கள் சிலர் புற்றின்மேல் முட்டை மற்றும் பால் வைத்தனர்.

    அப்போது புற்றின் உள்ளே இருந்து நாகப்பாம்பு வெளியே வந்தது. அது முதலில் பால் குடித்தது. பின்னர் முட்டையை சாப்பிட்டது. அதற்கு பிறகு புற்றின் மேல் நின்று படம் எடுத்தபடி 30 நிமிடம் நின்றது.இதை பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமா-னோர் பாம்பு புற்றின் அருகில் சென்று பார்த்து வழிபட்டனர். பின்னர் மீண்டும் நாக பாம்பு புற்றுக்குள் சென்று விட்டது.தொடர்ந்து பாம்புக்கு பால் முட்டை போன்றவற்றை பக்தர்கள் வழங்கி வருகின்றனர்.
    குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களிடம் தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு மீட்புப் பணி தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஒரு வார காலமாக குடியாத்தத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தொழிற் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு துறையினர் தீ பாதுகாப்பை அறிவோம்-உற்பத்தியை அதிகரிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

    குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் நேற்று குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் தீ தடுப்பு பாதுகாப்பு மற்றும் உயிர் மீட்புகள் பற்றிய விரிவான விளக்கமும், செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    குடியாத்தத்தில் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்ய அனுமதித்ததால் தனியார் பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ஆற்காடு ராணிப்பேட்டை செல்லும் தனியார் பஸ்சில் நேற்றுமுன்தினம் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணிகள் பயணம் செய்ததும் மேலும் பஸ்ஸின் பின்புறம் தொங்கியபடி பயணிகள் சென்றது குறித்து சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது.

    இதனை தொடர்ந்து அந்த தனியார் பஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன்,  போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்-கண்ணன், வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் ஆகியோர் போக்குவரத்துத் துறைக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா, குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் அந்த தனியார் பஸ்சை குடியாத்தம் பஸ்  நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்தனர்.

    மேலும் அந்த பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்த அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணிகளை ஏற்றக்கூடாது.

    மேலும் பஸ்சின் பின்பகுதியில் தொங்கியபடி பயணிகளை ஏற்றக் கூடாது அப்படி ஏற்றிச் செல்லும் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும், ஓட்டுநர் கண்டக்டர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு போலீசாரும், போக்குவரத்து அதிகாரி-களும் அறிவுறுத்தினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பஸ் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைக்-கப்பட்டது. 

    தனியார் பஸ் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குடியாத்தம் நகரில் இருந்து பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கு பள்ளி விடும் சமயங்களில் செல்லும் பஸ்களில் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி செல்வது வாடிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதிகாரிகள் அசம்பாவிதம் ஏற்படும் முன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    குடியாத்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர காவல்நிலையத்தில் குடியாத்தம் துணை கோட்ட காவல்துறையினருக்கான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் நிர்மலா, செந்தில்குமாரி, ராஜன்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், குமரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் துணை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டது. 

    இந்த வழக்குகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் சீண்டல்கள், பெண்களுக்கு எதிரான கேலி கிண்டல் குறித்து போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்ததால் உடனடியாக அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பெண்-களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.
    தனது குழந்தையை கண்டவுடன் மனம் மாறிய இளம்பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர்.
    குடியாத்தம்:

    பெங்களூரு பாபுஷா பாளையா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பைக் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். அவர் 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அதே பகுதியில் கணவன்-மனைவி வசித்து வந்தனர். தம்பதிக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.

    குழந்தை பிறந்ததும் தனது மனைவிக்கு வாலிபர் செல்போன் வாங்கிக் கொடுத்தார். அந்த செல்போனில் வீடியோ கால் மூலம் வேலைக்கு சென்ற பின் அடிக்கடி தனது குழந்தையை போனில் பார்த்து மகிழ்ந்து வந்துள்ளார்.

    குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாபுஷா பாளையா பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். அவருக்கும் இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இந்நிலையில் கடந்த 14-ந்தேதி 5 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு அந்த இளம்பெண் ஆட்டோ டிரைவருடன் குடியாத்தம் அருகே உள்ள கிராமத்திற்கு வந்தார்.

    வீட்டில் உள்ளவர்களிடம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு இளம்பெண் ஆட்டோ டிரைவருடன் ஓட்டம் பிடித்துள்ளார். மனைவியை காணாமல் திடுக்கிட்ட வாலிபர் இதுகுறித்து பெங்களூரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    இந்நிலையில் குடியாத்தம் ஆட்டோ டிரைவர் நேற்று குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தான் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டதாகவும் என கூறி மனு அளித்தார்.

    அந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் பெண்ணின் உறவினர்கள் குறித்து விசாரித்தனர்.

    அப்போது பெண்ணுக்கு உறவினர்கள் இல்லை என அவர் கூறியுள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் இளம்பெண்ணுக்கு திருமணமாகி 5 மாத குழந்தை இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் பெங்களூரு போலீசார் குடியாத்தம் போலீசாரிடம் தொடர்பு கொண்டு இளம்பெண் குறித்து கேட்டறிந்தனர்.

    இதையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் தாலுகா போலீசார் ஆட்டோ டிரைவரையும், இளம்பெண்ணையும் அழைத்து வந்து அறிவுரை கூறினர். 5 நாட்களாக தாயை காணாமல் 5 மாத பிஞ்சுக்குழந்தை கதறி அழுது துடித்துள்ளது. குழந்தைக்காக மனம் இறங்கி வரும்படி போலீசார் அந்த இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறினர்.

    அதேபோல் ஆட்டோ டிரைவரிடம் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாக எடுத்து கூறினர்.

    அப்போது இளம்பெண் ஆட்டோ டிரைவருடன் தான் இருப்பேன் என அடம்பிடித்தார். இந்த நிலையில் அந்த குழந்தையை பெண்ணின் தாய் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். தனது குழந்தையை கண்டவுடன் மனம் மாறிய இளம்பெண் தனது கணவருடன் பெங்களூரு செல்வதாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் இளம்பெண்ணுக்கும், அறிவுரை கூறி கணவருடன் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் ஆட்டோ டிரைவரையும் எச்சரித்து அனுப்பினர்.
    ×