என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டு வருகிறது.
வேலூர்:
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த வார்டில் ஆக்சிஜன் வசதியுடன் 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து படுக்கைகளும் தனித்தனியாக திரை கொண்டு மூடும் வசதி, ஆக்சிஜன் உள்ளிட்ட சிறப்பம்சத்துடன் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் பென்ட்லெண்ட் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு மீண்டும் தயார்படுத்தி வருகின்றனர்.
இதுதவிர வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங் களில் தலா 10 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு முழுமையாக இன்னும் விலக்கிக் கொள்ளப் படவில்லை.
முகக் கவசம் அணிவது நடைமுறையில் தான் உள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 2 பேர் மட்டுமே பாதிக்கப் பட்டு ள்ளனர். கடந்த 4 நாட்களாக வேலூர் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
எனவே பொதுமக்கள் விதிகளை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் பரவாமல் தடுக்க முடியும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிகொண்டா அருகே பெங்களூரிலிருந்து சென்னைக்கு கடத்திய 39 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
கர்நாடக மாநிலம் பெங் களூரு உள் ளிட்ட பகு திகளில் இருந்து சென் னைக்கு கார் லாரிகள் மூலம் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறது.இதனை தடுக்க வேலூர் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் இரவு நேரங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே எஸ்.பி. தனிப்படையினர் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த மினி லாரியில் சோதனையிட்டனர். அதில் 9 மூட்டைகளில் குட்கா பான்மசாலா உள்ளிட்ட 112 கிலோ போதைப் பொருட்கள் இருந்தன.
இதனை கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் இமிடி நாயக்கன பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 33) என்பவரை கைது செய்தனர்.
இவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல விரிஞ்சிபுரத்தில் பெங்களூரில் இருந்து சென்னை வந்த காரில் சோதனை நடத்தினர். அதில் 30 மூட்டைகளில் சுமார் 200 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குட்கா பெங்களூரிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார். அவரது மனைவி, 2 மகள்கள் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூர்:
வேலூரில் வீட்டுக்குள் வைத்து எலக்ட்ரிக் பைக் பேட்டரிக்கு சார்ஜ் போட்டபோது பைக் வெடித்து சிதறியது. இதில் தந்தை, மகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் நடந்த 1 மாதத்திற்குள் மேலும் 2 இடங்களில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் ஆந்திராவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார். அவரது மனைவி, 2 மகள்கள் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம், விஜய சூர்யராவ்பேட்டை குலாபிபேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது35), டி.டி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஆர்த்தி(30), மகள்கள் பிந்து (10), சசி(6). சிவக்குமார் நேற்று முன்தினம் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு வாங்கினார்.
இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் சார்ஜ் செய்வதற்காக ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை தனியாக எடுத்து சென்று சார்ஜ் போட்டு வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கினார்.
அதிகாலை 3 மணியளவில் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. வீட்டில் உள்ள மின்சார ஒயர்களும் தீப்பிடித்து அறையில் இருந்து புகை வெளியேறியது.
இதில் தீக்காயமடைந்த சிவக்குமார் குடும்பத்தினர் அலறியடித்து எழுந்தனர். வீட்டில் இருந்து வெளியேற வழியில்லாமல், அவர்கள் சமையல் அறைக்கு ஓடிச்சென்று அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று படுகாயமடைந்த சிவக்குமார் மற்றும் குடும்பத்தினரை மீட்டனர்.
இதுகுறித்து போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.
அவரது மனைவி ஆர்த்தி. மகள்கள் பிந்துஸ்ரீ, சசி ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆர்த்தி அபாய கட்டத்தில் உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் வீட்டுக்குள் வைத்து எலக்ட்ரிக் பைக் பேட்டரிக்கு சார்ஜ் போட்டபோது பைக் வெடித்து சிதறியது. இதில் தந்தை, மகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் நடந்த 1 மாதத்திற்குள் மேலும் 2 இடங்களில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் ஆந்திராவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார். அவரது மனைவி, 2 மகள்கள் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம், விஜய சூர்யராவ்பேட்டை குலாபிபேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது35), டி.டி.பி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஆர்த்தி(30), மகள்கள் பிந்து (10), சசி(6). சிவக்குமார் நேற்று முன்தினம் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கு வாங்கினார்.
இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் சார்ஜ் செய்வதற்காக ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை தனியாக எடுத்து சென்று சார்ஜ் போட்டு வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கினார்.
அதிகாலை 3 மணியளவில் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. வீட்டில் உள்ள மின்சார ஒயர்களும் தீப்பிடித்து அறையில் இருந்து புகை வெளியேறியது.
இதில் தீக்காயமடைந்த சிவக்குமார் குடும்பத்தினர் அலறியடித்து எழுந்தனர். வீட்டில் இருந்து வெளியேற வழியில்லாமல், அவர்கள் சமையல் அறைக்கு ஓடிச்சென்று அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று படுகாயமடைந்த சிவக்குமார் மற்றும் குடும்பத்தினரை மீட்டனர்.
இதுகுறித்து போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.
அவரது மனைவி ஆர்த்தி. மகள்கள் பிந்துஸ்ரீ, சசி ஆகிய 3 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆர்த்தி அபாய கட்டத்தில் உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலக்ட்ரிக் பைக் பேட்டரிகள் தொடர்ந்து தீப்பிடித்து எரிவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்... நாடு முழுவதும் திறக்கப்படும் 3,500-ல் தமிழகத்தில் கூடுதலாக 83 மக்கள் மருந்தகங்கள்
வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் 1&ந்தேதி வரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசாங்கத்தின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை உழவர் களின் பங்களிப்பே நமது முன்னுரிமை என்கின்ற சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் வரும் 24.04.2022 முதல் 01.05.2022 வரை கிராம ஊராட்சி வாரியாக நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத விவசாயிகள், விவசாயம் மற்றும் பால் பண்ணை, கால்நடை பராமரித்தல், மீன் வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களை மேற்கொள் வோர் விவசாய கடன் அட்டை பெற்று பயனடையலாம்.
விவசாய கடன் அட்டை மூலம் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த தொழில்களுக்கு ஏற்றவாரு ரூ.1.6 லட்சம் முதல் ரூ.3லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
இக்கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதம் ஆகும். குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் முறையாக திரும்ப செலுத்தும் நிலையில் 3 சதவீத வட்டி மானியமாக பெறலாம். வேலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவித் திட்டத்தில் 58,352 எண்ணிக்கையிலான விவசாயிகள் பதிவு செய்து ஆண்டு ஒன்றிற்கு ரூ.6000 பிஎம்-கிசான் நிதி உதவி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு வங்கிகள், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் மாவட்டத்தில் 45,500 எண்ணிக்கையிலான விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் விடுபட்டுள்ள சுமார் 12,852 திட்ட பயனாளிகள் மேற்படி கிராம ஊராட்சிகள் வாரியாக நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று உரிய ஆவணங் களை விண்ணப்பம், ஆதார் அட்டை, சிட்டா பட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தகம், பான் கார்டு) அளித்து விவசாய கடன் அட்டை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இயற்கை பேரிடர் களினால் பாதிப்புக்குள் ளான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் அனைவரும் பெருமளவில் தங்கள் சாகுபடி செய்யும் பயிர்களை காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இயற்கை இடர் பாடுகளான பெருமழை, வெள்ளம், வறட்சி, புயல் / சூறாவளி, மோசமான வானிலை மாற்றம் ஆகிய பல்வேறு இயற்கை இடர்பாடுகளின் தாக்கத்திலிருந்து மீண்டு உரிய நிவாரணம் பெற விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றிடலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வேலூர் கிரீன் சர்க்கிளில் பஸ்சை மறித்து வாலிபர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிளில் இன்று காலை வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. காலை 7 மணியளவில் கிரீன் சர்க்கிள் பகுதியில் மது போதையில் வாலிபர் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
வாகனங்கள் வேகமாக வந்ததால் குறுக்கும் நெடுக்குமாக சென்ற வாலிபரை கண்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் கீழே அமர்ந்து கொண்டு பஸ் செல்ல முடியாமல் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் பஸ்சின் முன்பாக நின்று கொண்டு நகர மறுத்தார். இதனால் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாலிபரை எச்சரிக்கை செய்ததால் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து சென்றார்.
இதனால் இன்று காலை கிரீன் சர்க்கிள் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த கண்ணிகாபுரம் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி சித்ரா (வயது 54), அரசு பள்ளி ஆசிரியர். இவர்களது மகள் வினி வர்ஷா (22). சம்பவத் தன்று மகாலிங்கமும், சித்ராவும் வேலை சம்பந்தமாக வெளியே சென்றிருந்தனர். வினி வர்ஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் 2 பேர் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அவர்களை பார்த்ததும் இளம்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டியதும் இளம்பெண் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து அணைக் கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வேலூர் ஏ.டி.எஸ்.பி. தலைமையில் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் ஆய்வு செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர். விசாரணையில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்புதுறையிளனர் அணைத்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் கூடநகரம் ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் ஒரு பகுதியில் உள்ள கட்டிடத்தின் தரைதளத்தில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி பண்டல்கள், மாடியில் தீப்பெட்டி தயாரிக்க தேவையான குச்சிகள், மெழுகு உள்ளிட்டவை உள்ளன. நேற்று மாலை வழக்கம் போல் பணியாளர்கள் பணி முடித்து வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
இரவு சுமார் 8 மணி அளவில் இந்த தீப்பெட்டி தொழிற்சாலையின் மாடியில் திடீரென தீப்பற்றி கொண்டது. மாடியிலிருந்த தீப்பெட்டி பண்டல்கள் தீக்குச்சிகள் மெழுகு உள்ளிட்டவை பயங்கரமாக எரிய தொடங்கின.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடினர்.
அதற்குள் தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் பேர்ணாம்பட்டிலிருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வந்தது இடையில் 15 நிமிடம் தண்ணீர் இல்லாததால் தீப்பெட்டி தொழிற்சாலை மீண்டும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து பேர்ணாம்பட்டிலிருந்து வந்த தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் தனியார் டிராக்டர்கள் மூலமும் தண்ணீர் பாய்ச்சி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
மேலும் தீ பரவாமல் தடுக்கவும், விபத்தை தடுக்கும் வகையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் மற்றொரு கட்டிடத்தில் தயார் நிலையில் இருந்து பல லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் வாகனங்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலையின் தீ தடுப்பு பணிகளை குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நத்தம்பிரதீஷ், ஊராட்சி மன்ற தலைவர் அமுலுஅமர், நகரமன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், நவீன்சங்கர், சி.என்.பாபு உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கு என்ன காரணம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிக்கையில் அறிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டப்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. வகுப்பில் குறைந்த பட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குதல் சார்பாக இணையதளம் வழியாக விண்ணப்பங்களை 18.05.2022 வரை பள்ளிக் கல்வி துறையின் இணையதளத்தின் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
இணையதள முகவரி rte.tnschools.gov.in™ல் பதிவேற்றம் செய்ய நடைமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்படுகிறது. மேலும் பெற்றோர்கள் அந்தந்த ஒன்றியங்களிலுள்ள வட்டாரக் கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வட்டார வளமைய அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களிலும் இணைய வழியில் விண்ணப்பிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சேர்க்கைக்கு விண்ணப்-பிக்க தகுதியா-னவர்கள் நலிவடைந்த பிரிவினர்- ஆண்டு வருமானம் ரூ.2, லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி 3. சிறப்பு பிரிவினர்கள் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தை, துப்புரவு தொழிலாளியின் குழந்தைகள் தகுதியானவர்கள்.-
இருப்பிடச் சான்றிற்கான ஆதாரம் (குடும்ப அட்டை / ஆதார் அட்டை). சாதிச் சான்று. ஆண்டு வருமானச் சான்று. பிறப்புச் சான்று குழந்தையின் சமீபத்திய புகைப்படம் -2 குழந்தையின் வயதை நிரூபிப்பதற்கான ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
சம்ந்தப்பட்ட பள்ளியில் நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி. சேர்க்கைக்கு 31.07.2022 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பேரணாம்பட்டு அருகே மனைவியை அடித்துக் கொன்ற மேஸ்திரியை போலீசார் தேடி வருகின்றனர்
பேர்ணாம்பட்டு:
குடியாத்தத்தை அடுத்த மேல் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பூஷ்ணா (45).கட்டிட வேலை செய்து வந்தார். திருமணமான சில ஆண்டுகளிலேயே விஜயன் தனது மனைவி பூஷ்ணாவின் சொந்த கிராமமான பாஸ் மார்பெண்டா மலை கிராமத்திற்கு வந்து வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து. வந்ததாக கூறப்படுகிறது.மேலும் கடந்த 3 நாட்களாக இருவரும் கட்டிட வேலைக்கு செல்லவில்லை.
பூஷ்ணாவின் வீட்டிற்கு அவரது மருமகன் முருகன் என்பவர் நேற்று சென்றார். தலை கழுத்து பகுதியில் கட்டையால் தாக்கப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் பூஷ்ணா பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்து முருகன் அதிர்ச்சி அடைந்தார். பூஷ்ணாவின் கணவர் விஜயனை காணவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் ராமமூர்த்தி பேர்ணாம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் சபாரத்தினம் கேசவன் மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்ட பூர்ணாவின் உடலை கைப்பற்றி பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பூஷ்ணாவை அவரது கணவர் விஜயன் கொலை செய்து விட்டு தலைமறை வானது தெரிய வந்தது.
மனைவியை கொலை செய்து விட்டு விஜயன் ஆந்திரா தப்பிச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. விஜயனை ஆந்திரா மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் அரியூரில் ரூ2.50 கோடியில் அறிவு சார் மையம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்காக தற்போது அறிவு சார் மையம் (நாலேஜ் ஸ்டடி சென்டர்) கட்டப்பட உள்ளது.
இதற்காக அரியூர் பழைய போலீஸ் நிலையம் இருந்த இடத்தில் 25 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரியூரில் இன்று காலை அறிவு சார் மையம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் குமார், துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார், மண்டல குழு தலைவர் வெங்கடேசன் பகுதி செயலாளர்கள் அய்யப்பன், சங்கர்கணேஷ் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அறிவு சார் மையம் கட்டுவதற்காக பழைய போலீஸ் நிலையம் இருந்த கட்டிடம் மற்றும் அதன் அருகில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன. அதில் சுமார் 25 சென்ட் இடத்தில் பசுமை வளாகத்தில் ரூ.2.50 கோடியில் நவீன முறையில் ஸ்டடி சென்டர் கட்டிடம் அமைய உள்ளது.
இந்த கட்டிடத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அனைத்து விதமான வயதினருக்கும் கல்வி சம்பந்தமான புத்தகங்கள் பொது அறிவு புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன.
மேலும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் எளிதில் வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான புத்தகங்கள் இங்கு இடம் பெற உள்ளது. இந்த கட்டிடத்தில் முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட உள்ளது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து படிக்க கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் குழந்தைகள் வசதிக்காக மாண்டிச்சோரி முறையில் கல்வி பெறவும் இந்த வளாகத்தில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும் ஆன்லைன் மூலம் மாணவ மாணவிகள் தங்களது அறிவுத் திறனை வளர்க்கவும் இங்கு கம்ப்யூட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படு கின்றன.
போட்டித் தேர்வுகள் நடைபெறும் நேரங்களில் தகுதியான ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். வளாகம் முழுவதும் பசுமையாகவும் காற்றோட்டமான சூழலை உருவாக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் இலவசமாக சென்று பயன்பெறலாம். இன்னும் ஒரு வருடத்தில் இந்த அறிவு சார் மையம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் சிம்பு தேவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப் பாளராக மாநில துணை தலைவர் தேவதாஸ் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்ட தொகுப்பு களை செயல்படுத்த கூடாது.
கட்டிட, ஆட்டோ உடலுழைப்பு வாரியங்களை பாதுகாத் திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத் தியும், முதலாளிகளுக்கு ஆதரவாக அவசரமாக செயல்படுத்தும் தமிழக தொழிலாளர் துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காட்பாடி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் சட்டசபை கூட்டத்தை பார்வையிட்டனர்.
வேலூர்:
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகத்தில் நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடர் நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் கிராம பகுதியை சேர்ந்த ஏழை மாணவ மாணவிகள் சட்டசபை கூட்டத்தொடரை நேரில் பார்வையிட கதிர்ஆனந்த் எம்.பி. ஏற்பாடு செய்தார்.
காட்பாடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கேயநல்லூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தாதிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி,
விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து உள்ள 354 மாணவ, மாணவிகள் பார்வையிட சென்றனர்.
அவர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் சென்றனர். அவர்கள் சட்டசபை கூட்டத் தொடரை பார்வையிட்டனர். மாணவிகள் செல்வதற்கு பஸ் வசதி மற்றும் உணவு ஸ்னாக்ஸ் ஆகியவை வழங்க கதிர் ஆனந்த் எம்.பி. ஏற்பாடு செய்துள்ளார்.
சட்டசபை நிகழ்ச்சிகளை பார்வையிட சென்ற மாணவிகள் உற்சாகத்துடன் சென்றனர்.






