என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காட்பாடியில் தக்காளி கூடைகளுக்கு அடியில் ரேசன் அரிசி கடத்திய வேன்.
  X
  காட்பாடியில் தக்காளி கூடைகளுக்கு அடியில் ரேசன் அரிசி கடத்திய வேன்.

  காட்பாடியில் தக்காளி லாரியில் கடத்திய 5 டன் ரேசன் அரிசி சிக்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காட்பாடியில் தக்காளி லாரியில் கடத்திய 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
  வேலூர்:

  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தப்படு-வதாக அந்தந்த மாவட்ட போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

  ஆந்திராவை சேர்ந்தவர்-கள் தமிழ்நாட்டில் இலவ-சமாக கொடுக்கப்-படும் ரேசன் அரிசியை கடத்தல் கும்பல் அந்தந்த மாவட்டத்தில் குழுவாக பிரிந்து குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். 

  இதனை மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு, ஆட்டோ, கார் மூலம் ரெயில் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. ரெயில் நிலைய பிளாட்பாரங்களில்  ரெயில் பெட்டிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டு ரேசன் அரிசி கும்பல் தனக்கும் அந்த மூட்டைக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் சுற்றித் திரிவர். ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு அனுப்பி வைத்து அதனை பாலிஷ் செய்து அதிக லாபத்திற்கு விற்கப்படுகிறது. 

  இதனை அந்தந்த மாவட்ட போலீசார் அவ்வப்போது சோதனை செய்து தடுக்கின்றனர். இதனையும் மீறி நூதன முறையில் ரேசன் அரிசியை கடத்துகின்றனர்.

  தக்காளி கூடைகள் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வேலூரில் இருந்து ஆந்திரா நோக்கி காட்பாடி சோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. அதனை வேலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தக்காளி கூடை-களுக்கு நடுவே 5 டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. 

  ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அரிசி மூட்டைகள் தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்தி சென்று விற்க முயன்றது தெரிந்தது. 

  நூதனமான முறையில் ரேசன் அரிசி மூட்டைகளை கடத்திய வேலூர் அப்துல்லா-புரம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கருணாகரன் ஆகியோரை குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.  இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×