என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்தி சிலை அகற்றிய இடத்தை படத்தில் காணலாம்.
    X
    காந்தி சிலை அகற்றிய இடத்தை படத்தில் காணலாம்.

    காந்தி சிலை அகற்றியதை கண்டித்து தனி ஒருவராக சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் கவுன்சிலர்

    காந்தி சிலை அகற்றியதை கண்டித்து தனி ஒருவராக சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் கவுன்சிலரால் வேலூர்&ஆற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோயில் பின்புறம் கடந்த 50 ஆண்டுகளாக காந்திசிலை உள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் முருகர் கோவில் பின்புறம் இருந்த காந்தி சிலையை நேற்று இரவு யாருக்கும் தெரியாமல் சாலை அமைக்கும் ஒப்பந்த தாரர் அப்புறப்படுத்திய தாக கூறப்படுகிறது.

    இன்று காலை காந்தி சிலையை அப்புறப் படுத்தியதை அறிந்த முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ் தனி ஒருவராக முருகர் கோவில் முன்பாக ஆற்காடு சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆற்காடு சாலையில் இருபுறமும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் நெரிசலில் சிக்கி அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயபிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    அப்போது அவர் காந்தி சிலையை அப்புறப்படுத்திய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிட முடியாது. வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினால் இங்கேயே தீக்குளிப்பேன் என தெரிவித்தார். சாலை அமைக்கும் பணி முடிவடைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலையை வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். 

    இதனையடுத்து சமாதானம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். காந்தி சிலை அப்புறப்படுத்தியதை கண்டித்து முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனி ஒருவராக சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×